Friday, August 31, 2012

Life is beautiful

Guzaarish என்று ஓர் இந்திப் படம் பார்க்க நேர்ந்தது. படத்தின் முடிவில் இப்படி ஒர் பாட்டு. அந்தப் படம் பார்த்த அழுத்தத்தோடு இந்த வரிகளைக் கேட்க மனதை என்னவோ செய்யது. அதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் அன்போடு!


Life is very short, my friends
But it is long enough if you live with all your heart
So, go on break the rules

Forgive quickly
Love Truly

Never regret anything that made you smile

It is a bit sweet
It is a bit bitter

100 gram of this bitter-sweet life
I have spent with utmost care


Life is good
Life is wonderful
Life is pain
It is all part of the game


It is pure
It is defective
It is too small to spend crying


It stitches joys with a thread
It is a tailor

Life is beautiful

Thursday, August 30, 2012

முஸ்லிம்களை ஒழிக்க திட்டம் !

கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது.

கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.

இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.

இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம், ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் கற்றுத்தந்த அரசியல் இங்கிதங்களின் இதத்தை அவர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று ஒரு முஸ்லிம்கூட இல்லை எனலாம்.

780 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மண்ணில், ஆட்சி செலுத்திய மார்க்கத்தைச் சார்ந்த ஒருவரும் இல்லை. இது எப்படி? பிற்றை நாட்களில் முஸ்லிம்களை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்திட வேண்டும் என்பதை இலட்சியமாக ஆக்கிக் கொண்டு அங்கே ஒரு கூட்டம் திட்டம் தீட்டிற்று. அந்தத் திட்டம் ஓராண்டு திட்டமோ, ஒரு ஐந்தாண்டு திட்டமோ, ஒரு ஐம்பதாண்டு திட்டமோ அல்ல. அது 120 ஆண்டுகாலத் திட்டம்.

இப்படியொரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டி அதன் வழியில் அந்தச் சதிக் கும்பல் செயல்பட்டபோது, தன் திட்டத்தைத் துல்லியமாக நிறைவேற்றியபோது.. 1612-இல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். இந்தக் காலக்கட்டத்தில்.. அதாவது ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் இந்த உலகில் அநாதையாக இருந்து கொண்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் உலகத்தில் நாகரிகமடைந்த பகுதிகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தன.

துருக்கி முஸ்லிம்கள் கான்ஸ்டாண்டி நோபிள் நாட்டை 1553-இல் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். பால்கான் தீபகற்பம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. எகிப்தில் பணபலமும் படைபலமும் நிறைந்ததொரு ஆட்சியை முஸ்லிம்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியத் துணைக்கண்டமோ முகலாயர்களின் ஆட்சியின் கீழ்.

இப்படி, உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாபின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?

இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை. அதாவது..

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இந்த இந்து வெறியர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிக்க கங்கணங்கட்டிக் கொண்டு செயல்படுத்திட முன் வந்தார்கள்.

இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவெனில், இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாற்றையும் தெரியாது, தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதியையும் தெரியாது.

முஸ்லிம்களில் உள்ள சிந்தனையாளர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பார்கள், இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்கள் பூண்டோடு ஒழிக்கப்படுமுன் அதை முறியடிக்க முன் வருவார்கள், அதற்கான செயல் திட்டத்தை வகுத்திடுவார்கள் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தச் சிற்றேடு உங்கள் கைகளில் சமர்க்கப்படுகின்றது.

ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறு

இந்தியாவில் இன்று இருப்பதைப் போல் அன்று ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று வகைப்படுவார்கள்:

1. அரபுகளின் கிளைஞர்கள்

2. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் பிறந்த குழந்தைகள்.

3. கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்.

முஸ்லிம்களின் கையிலிருந்த கடைசி பகுதியான 'கிரனடா' வீழ்ந்தவுடன் அரபுகளின் கிளைஞர்களாக இருந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் துனீஸியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள். இப்படி ஸ்பெயினிலிருந்து குடி பெயர்ந்து சென்ற அத்தனை அரபு முஸ்லிம்களும் தாங்கள் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று விரும்பிய பகுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடவில்லை. அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் கிறிஸ்தவர்களால் வழியிலேயே கொலை செய்யப்பட்டார்கள்.

ஸ்பெயினிலேயே தங்கிவிட்ட அரபுகளின் கிளைஞர்களான முஸ்லிம்களை-"வெளிநாட்டிலிருந்து ஊடுருவியர்கள்" 'ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள்' என்றெல்லாம் குற்றம்சாட்டி பாமர மக்களின் கோபத்தை அந்த முஸ்லிம்களின் மேல் பாய்ச்சினார்கள்.

ஏனைய முஸ்லிம்கள், அதாவது.. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் இடையே பிறந்த முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்- இவர்களெல்லாம் ஸ்பெயினிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கி விட்டார்கள்.. இவர்களின் இந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்ற வகையில் - ஸ்பெயினில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அப்போது ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்தவர் 'பெர்டினன்டு' என்ற கிறிஸ்தவ மன்னர்.

கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள் என்றாலும் கிறிஸ்தவ மன்னரின் இந்த உறுதி மொழியை முஸ்லிம்கள் அப்படியே நம்பினார்கள். இன்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்குத் தந்து கொண்டிருக்கும் உறுதி மொழியைப் போன்றதே இந்த உறுதி மொழியும்! இதை அன்றைய ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவ மன்னர் தந்த உறுதிமொழி வேறொன்றுமில்லை. அது இதுதான் 'எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமையுண்டு, பாதுகாப்பு உண்டு' இந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே.. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஆங்காங்கே கொலை செய்துகொண்டே இருந்தார்கள்.

திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தக் கொலைகள் ஏதோ எப்போதோ நடக்கின்ற சிறு தவறுதான் என்ற அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்தக் கொலைகள் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தீட்டப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி என்பது திறமையோடு மறைக்கப்பட்டது.. இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன.

ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட போது, அவர்கள் இயன்ற வரை எதிர்த்துப் போராடினார்கள். போகப் போக எதிர்ப்பின் வேகம் குறைந்தது. பின்னர் எதிர்ப்பே இல்லை என்றானது.

ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்த இடங்களில் மன்னர் பெர்டினன்டின் பட்டாளம் முஸ்லிம்களைப் பலி கொண்டது. முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்றது.

அன்று ஸ்பெயினில் நடந்த இந்த வரலாற்று நிகழ்வுகளை இந்தியா விடுதலையடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்து வரும் முஸ்லிம் கொலைகளின் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவையாவும் ஒன்று போல் ஒரே திட்டத்தின் கீழ் நடந்து வருவதைக் காணலாம். அன்றைக்கு ஸ்பெயினில் கிறிஸ்தவ சதிக்கூட்டம் திட்டம் போட்டு முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் போது, ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த பெர்டினன்ட் அரசரின் கிறிஸ்தவ அரசு முஸ்லிம்களை அரசுப் பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை வேரறுக்க பின்வரும் வழி முறைகளைப் பின்பற்றிற்று அரசு. அவைகளாவன:

1) அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது,

2) (மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

3) அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாற்று திரிக்கப்பட்டு 'அவர்கள் கொடுமையாளர்கள்' என்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் 'இருண்ட காலம்' என இட்டுக்கட்டப்பட்டது.

4) முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதற்கு 'அவர்கள் வீடுகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்' 'வீடுகளில் இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்கள்' – என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன.

5) உண்மையாக அரபு நாட்டிலிருந்து வந்து ஸ்பெயினில் குடியேறிய அரபு நாட்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பரம வைரிகள் ஸ்பெயினை அழித்தவர்கள் என்பன போன்ற அவதூறுகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் பாமர மக்கள் 'முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய வீணர்கள்' என்ற முடிவுக்கு வந்தனர்.

6) கிறிஸ்தவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போனவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

7) அரபு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் 'சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்' என்று அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.

8) இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் 'மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவேண்டும்' என்று சட்டம் வந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படிச் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது' என்று அறிவிக்கப்பட்டது.

9) ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடைசி முயற்சியாக தங்கள் தலைமுறையை இஸ்லாத்தில் தக்கவைத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் காலப் போக்கில் தங்களுக்கேற்பட்ட அளவுக்கதிகமான இழப்பைக் கண்டு நிலை குலைந்தனர். 'இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணங்களைத் தங்கள் இல்லங்களில் வைத்து இரகசியமாகச் செய்து கொள்வார்கள்.

பின்னர் அரசின் அதிகாரிகள் முன் அரசு விதிகளுக்கேற்ப ஒரு முறை சடங்குகளை நிறைவேற்றுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் இன்னும் இரகசியமாக இஸ்லாமிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்த அதிகாரிகள், அந்த திருமணங்களைக் கண்டுபிடித்துத் தண்டனைகள் தந்தார்கள்.

ஆகவே முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படித் திருமணங்கள் செய்வதை நிறுத்தினார்கள். முஸ்லிம்கள் இத்தகைய கெடுபிடிகளைச் சந்திக்க இயலாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, பல முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவர்களாகி விட்டார்கள் என்ற பிரச்சாரம் முழுவேகத்தில் அவர்களை வந்து தாக்கிற்று.

விரக்தி, பீதி - இவை முஸ்லிம்களை முழுமையாக ஆட்கொண்டன. கற்றறிந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து விட்டு துனீசியா, மொராக்கோ போன்ற நாடுகளில் குடியேறினர். அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அனுதாபத்தோடு அரவணைத்துக் கொண்டார்கள்.

உலமாக்கள் சிலர்தான் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், மார்க்க விதிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த இவர்களால் அந்த முஸ்லிம்களைக் காப்பாற்றிட இயலவில்லை. அன்றைய முஸ்லிம்களைக் காப்பாற்றிட அரசியல் அறிவு, உலக நிலை பற்றிய அறிவு, முஸ்லிம்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சதியின் விபரம், நிலையான தன்மை, இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவு-இவையாவும் தேவைப்பட்டன. இவற்றோடு கிறிஸ்தவ கொலை வெறிக் கும்பலைச் சமாளித்து முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் வலுவான தற்காப்புப் படையும் தேவைப்பட்டது.

மார்க்க நெறிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த அந்த உலமாக்களிடம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டிருக்கலாம்.. ஆனால் அவர்கள் - ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் - அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முடக்கிப் போட்டார்கள். அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம், நீங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திடும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட ஏதேனும் செய்தால் அதைக் காரணங்கள் காட்டி அங்குள்ள முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் அதிகமாகக் கொடுமைப் படுத்துவார்கள் என்று கூறி அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தடுத்தார்கள்.

அன்றைக்கு ஸ்பெயின் இருந்த சூழ்நிலையில் ஓர் 'அஹமது ஷா அப்தாலி' தேவைப்பட்டார். ஆனால் அப்படி யாரும் அன்றைக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் ஸ்பெயின் முஸ்லிம்கள் தங்கள் தனித்தன்மைகள் அனைத்தையும் இழந்தார்கள். பின்னர் முஸ்லிம்கள் என்ற நிலையை இழந்தார்கள். எஞ்சி இருந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்தார்கள், வெளிநாடுகள் நோக்கி நடந்தார்கள்.

இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டுதான் கி.பி 1612.

இந்திய முஸ்லிம்களின் நிலை

ஸ்பெயினில் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க தீட்டப்பட்ட நீண்ட காலத்திட்டத்தைப் போன்றதொரு திட்டம் இந்தியாவிலும் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஸ்பெயினை விட அதிகமான துல்லியமும் துரிதமும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் அன்று ஸ்பெயினில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் இடையே ஒரு வேற்றுமை. இவர்கள் ஸ்பெயினில் இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தியவர்களைவிட, நயவஞ்சகர்களை விட, நயவஞ்சகத் தனத்திலும் - நம்பவைத்து ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

இந்தியாவில் உருது மொழி முஸ்லிம்களின் மொழியாகக் கருதப்படுகின்றது. இஸ்லாமிய இலக்கியங்கள் நிறைந்து கிடைப்பதாலேயே இது முஸ்லிம்களின் தொழி எனக் கருதப்படுகின்றது. இந்த உருது மொழியை இந்தியாவை விட்டு வெளியேற்ற எத்தனையோ வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள்.

முஸ்லிம்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று எந்த முஸ்லிமாவது விரும்பினால் அவன் உடனேயே 'வகுப்புவாதி' என முத்திரை குத்தப்படுகின்றான். எந்த முஸ்லிமாவது இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து உயர்சாதி இந்துக்களுக்குப் பக்க தாளம் போட்டால் அவன் 'தேசிய முஸ்லிம்' எனப் போற்றப்படுகின்றான்.

ஆங்கிலம் கற்ற முஸ்லிம்கள் பிராமணர்களோடு கை கோர்த்துக் கொண்டு அவர்களைப் போல வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குடியிருப்பதைவிட இந்துக்கள் வாழும் பகுதிகளில் குடியமர்வதையே விரும்புகின்றார்கள். பாமர முஸ்லிம்கள் சேரிகளிலும் சாலையோரங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்தை இதய சுத்தியோடு பின்பற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள்.

இவர்கள் தாம் ஒவ்வொரு வகுப்புக் கலவரங்களின் போதும் அழிவுக்கும் இழிவுக்கும் ஆட்படுகின்றார்கள். இவர்கள் மொத்த முஸ்லிம்களில் 95 சதவிகித்தினர். மேட்டுக்குடியில் குடியிருக்கும் மெத்தப் படித்த மேதாவி முஸ்லிம்கள் 'இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் கலவரங்களுக்குக் காரணம்' என்ற அடிக்கடி ஆள்காட்டி இந்து வெறியர்களின் திருப்தியைப் பெறத்துடிக்கின்றனர். படித்த முஸ்லிம்களுக்கும் பாமர முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி இணைக்க இயலாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.

பாமர முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக, கிராமம் கிராமமாகக் கொலை செய்யப்படுகின்றார்கள். மேட்டுக்குடியில் வாழும் படித்த முஸ்லிம்கள் 'இதை பாமர முஸ்லிம்கள் தங்கள் கைகளாலேயே தேடிக்கொண்டது' என்று பசப்புகின்றார்கள். எதுவும் செய்ய இயலாத முஸ்லிம் தலைமை, முறையிட இடம் தெரியாமல் திண்டாடுகின்றது.

இந்தியாவில் பொட்டுப் பூச்சிகளைப் போல முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் 'இது அநியாயம், அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்' என்று உலக முஸ்லிம்கள் பேசினால் 'ஐயோ! இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில், தலை இட்டுவிட்டார்கள்' என்று உரக்க முழங்கி அவர்களின் அபயக் குரலை அடக்கிப் போட்டு விடுகிறார்கள். ஆனால் இங்கே உள்நாட்டு விவகாரம் முஸ்லிம்களைக் கூட்டமாகக் கொலை செய்வதும், அந்தக் கொலைவெறிக் கும்பலுக்கு ஆதரவு தருவதும் தான்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு திட்டமிட்டே சிதைக்கப்படுகின்றது. "குரூரமானவர்கள் இந்த உலகில் உண்டு என்றால் அவர்கள் முஸ்லிம்கள்தான்" எனப் பள்ளிக்குப் பாடம் பயிலவரும் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கின்றார்கள். இந்த இந்திய மண்ணின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முஸ்லிம் வீரர்கள், தியாகிகளின் பெயர்கள் முழுமையாக இருட்டிப்புச் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.

ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த் துரோகிகள் - ' தியாகிகள்' எனப் போற்றப் படுகிறார்கள். தனது ஓய்வு ஊதியத்திற்காகப் போராடிய 'தான்தியா தோப்பே', தான் தத்தெடுத்த மகன் ஆட்சியாளனாக ஆக்கப்பட வேண்டும் என்று போராடிய 'ஜான்சி ராணி லட்சுமி பாய்' இவர்களெல்லாம் இந்தியா முழுவதும் 'தேசியத் தலைவர்கள்' எனவும் , விடுதலைப் போர்வீரர்கள் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறார்கள்.

விஞ்ஞானம், மருத்துவம் இன்னுமுள்ள துறைகள் இவற்றில் எத்துனைதான் சாதனைகளை முஸ்லிம்கள் சாதித்துக் காட்டினாலும் அவர்களுக்கு விருதுகளோ, பரிசுகளோ தரப்படுவதில்லை. அவர்கள் விரக்திக்கே உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் காலமெல்லாம் விசுவாசமாக இருந்த 'மௌலானா ஆஸாத்' 'ரபீ அஹ்மத் கித்வாய்', 'செய்யத் மஹ்மூத்', 'ஹுமாயூன் கபீர்' போன்றவர்களின் பெயர்களை நினைவு கூர ஒரு தெருவின் பெயர் கூட இல்லை.

ஆனால் உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் எத்தனையோ வீதிகள்! சாலைக்கள்!! நகரங்கள்!!!

வரலாற்றைத் திருத்தி - திரித்து - எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.

இராணுவம், காவல் துறை, அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இத்தனைக்கும் இலக்காக்கி நிற்கும் முஸ்லிம்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன.

இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!
 

  • முஸ்லிம்களைத் திட்டம்போட்டுக் கொலைசெய்தது..

  • முஸ்லிம்களின் சொத்துக்களையும், தொழில்களையும், வியாபாரங்களையும் குறிவைத்துத் தாக்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விட்டது,

  • காவல் துறை, இராணுவம் அரசு நிர்வாகம் இவற்றில் அவர்கள் புறக்கணிக்கப் பட்டுவிட்டார்கள்..

  • மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் வகுப்புவெறி இந்துக்களை ஊடுருவ விட்டது.

  • அரசின் நிர்வாக மொழிகளில் ஒன்றாக இருந்த உருது மொழியை 1948-1949 இல் ஒரே இரவில் அது இனி நிர்வாக மொழிகளுள் ஒன்றாக நீடிக்காது என அறிவித்துவிட்டது. அது முதல் உருது மொழிக் கல்விக் கூடங்களை மூடியது.

  • முஸ்லிம் தனியார் சட்டத்தை 'பொது சிவில் சட்டம்' என்ற முழக்கத்தைக் கொண்டு சின்னா பின்னப்படுத்தியது.

  • வரலாற்றைத் திருத்தி எழுதி முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குச் செய்த தியாகங்களை மறைத்து அவர்களை எதிரிகளாகக் காட்டியது.

  • முஸ்லிம்களினன் விரோதிகளைத் தேசிய தலைவர்களாகக் காட்டியது.

  • முஸ்லிம்கள் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தைக் 'கடத்தல்' என முத்திரை குத்தி அவர்கள் செய்யும் தொழில்களாலேயே அவர்களைத் தேச விரோதிகள்' என விஷ வித்தை விதைத்தது.

  • முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை அவர்கள் பால் திணித்தது.

  • முஸ்லிம்கள் இந்து தலைமைக்குத் தலையசைத்துப் போகும்படி செய்தது.

இப்படி முஸ்லிம்களை அழிக்கும் திட்டம் முழுமையாக்கப்பட்டுவிட்டது.

இந்தத் திட்டத்தை விதையாகத் தூவியவர்கள் அறுவடைக்காகக் காத்திருக்கின்றார்கள். அறுவடைக் காலம் வருமுன் இந்தச் சதித்திட்டங்களை முறியடிக்க முஸ்லிம்கள் முன்வரவில்லை என்றால் அன்றை ஸ்பெயினைப் போல் இந்தியாவும் ஆகிவிடும்.

இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இஸ்லாமும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பாமர முஸ்லிம்களால் தான் வரலாறு நெடுகிலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் முஸ்லிம் மக்கள் தொகையில் 95 சதவிகித்தினர். வசதியான முஸ்லிம்கள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் பாமர முஸ்லிம்களைக் குறை காண்பதிலும் உயர்ஜாதி இந்துக்களுக்கு துதிபாடுவதிலும்தான் தங்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. மதம் அதனைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாப்பதில்லை, மாறாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!

- வி.டி. இராஜசேகர்

Wednesday, August 29, 2012

இறைவன் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறலாமா?

ஹதீசுகள் பற்றி ஓர் உரையாடல் எழுந்தது.

இறைவன் ஹதீசுகளைப் பற்றி ஏதும் குர்-ஆனில் சொல்லவில்லை என்ற கருத்தை முன்வைத்தேன். அதற்கு மறுமொழ்யாக நண்பர் ஒருவர் இப்படி கூறினார்.

*

எனக்குத் தெரிந்தவரையில் இது உண்மை இல்லை, சுன்னா ஹதீசுகள் என்ற வடிவில் இருக்கின்றது. அது இஸ்லாமின் முக்கியமான ஓர் அங்கம். பல வசனங்களில் இறைவன் சுன்னாவைப் பின்பற்றச் சொல்கிறான். கீழே உள்ள இறைவசனம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

“We have revealed unto you the Remembrance that you may explain to mankind that which has been revealed for them” (16: 44). 

உதாரணமாக, குர்-ஆனில் தொழவேண்டும் என்று மட்டும்தான் இருக்கிறது. எப்படித் தொழுவது என்பதை இறைத்தூதர்தான் சொல்லித்தந்தார்.

*

இதற்கான என் பதில்:

மேலே உள்ள இறைவனின் வசனம் தெளிவாக இருக்கிறது.

அறியாதவர்களுக்கு குர்-ஆன் வரிகளுக்கான விளக்கத்தைக் கூறுங்கள் என்றே இறைவன் தன் தூதரிடம் கூறுகிறான்.

குர்-ஆனுக்கு மாற்றமான விசயங்களை போதிக்கச் சொல்லவே இல்லை.

இறைதூதர், தான் வாழுகின்ற காலத்தில் உள்ள மனிதர்களுக்கு விளக்கம் கூறினார்கள். அவை மட்டுமே ஹதீசுகள்.

அவை தவிர குர்-ஆனை விட்டு விலகிய எதுவும் ஹதீசாக முடியாது. மற்றவையெல்லாம் இறைவனின் கருத்துக்கள் ஆக முடியாது. இதை நாம் புரிந்துகோள்ள வேண்டும்.

இறைவன் கூறிய கருத்துக்களை விட்டுவிட்டு மற்றவர்களின் கருத்துக்களை நாம் எடுத்துக்கொண்டால் அதுதான் உண்மையிலேயே இணைவைப்பதாகும்.

இறைவன் தொழச் சொன்னான். தொழுகையை இறைத்தூதர் விளக்கினார்.  நிச்சயமாக அது சுன்னாதான், ஹதீசுதான்.

இறைத்தூதர் சொன்ன ஹதீசுகளும் செய்த விளக்கங்களும் அப்படியே மாற்றுக்குறையாமல் நமக்குக் கிடைக்க வேண்டும்.

அதுவன்றி வந்தவர் போனவரெல்லாம் சொல்லும் கருத்துக்கள், அதுவும் குர்-ஆனில் குறிப்பிடப்படாத விசயங்களை எவர் பேசினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

உதாரணமாக இசை கூடாது என்று குர்-ஆனில் கூறப்படவில்லை. அதை ஹதீசு கூறுகிறது என்று சொன்னால், அங்கே பெரிய சந்தேகம் எழுந்துவிடுகிறது.

அந்த ஹதூசுகள் எதன் அடிப்படையில் உருவாகின என்ற கேள்வி வந்துவிடுகிறது. அது இறைவனுக்குப் புறம்பானது என்று ஆகிறது.

நான் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறுவது கூடாது என்று இறைவனே கூறுகிறான்.

10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”

இறைதூதர் இறைவனின் வசனத்திற்கு மாற்றாக எந்த ஒன்றையும் கூறியிருக்கவே மாட்டார். அந்தத் தவறை ஒருக்காலும் இறைத் தூதர் செய்யமாட்டார்.

அப்படிச் செய்தவர்களெல்லாம் இஸ்லாமை அழிக்க நினைத்தவர்களும், தங்களின் சொந்தக் கருத்துக்களை இறைவன் கருத்தென்றும் இறைத் தூதர் கருத்தென்றும் சொல்லும் பொய்யர்களே என்று நம்புவோமாக!

இதோ நீங்கள் இட்ட இறைவசனத்தின் தமிழ் வடிவம்:

16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

மேலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் கீழே வருகின்றன:

Sahih International
[We  sent  them]  with  clear  proofs  and  written  ordinances.  And  We  revealed  to  you  the message  that  you  may  make  clear  to  the  people  what  was  sent  down  to  them  and  that they  might  give  thought.

Muhsin Khan
With clear signs and Books (We sent the Messengers). And We have also sent down unto you (O Muhammad SAW) the reminder and the advice (the Quran), that you may explain clearly to men what is sent down to them, and that they may give thought.

Pickthall
With clear proofs and writings; and We have revealed unto thee  the Remembrance that thou mayst explain to mankind that which hath been revealed for them, and that haply they may reflect.

Yusuf Ali
(We sent them) with Clear Signs and Books of dark prophecies;  and We have sent down unto thee (also) the Message; that thou mayest explain clearly to men what is sent for them, and that they may give thought.

Shakir
With clear arguments and scriptures; and We have revealed to you the Reminder that you may make clear to men what has been revealed to them, and that haply they may reflect.

Dr. Ghali
With clear evidences and the Scriptures, (i.e., the Zubur, pl, of Zabur, usually understood to be the psalms) and We have sent down to you (i.e. the prophet) the Remembrance that you may make evident to mankind what has been sent down (ever since) and that possibly they would meditate.

அரபி தெரிந்தால்தான் குர்ஆனை விளங்கமுடியுமா?

இறைவன் நம்மைக் குர்-ஆனை ஆராயச் சொன்னான். அதில் கேள்விகள் கேட்கச் சொன்னான். ஆனால் நமக்குத் தெரியாவிட்டால் அரபு கற்றவர்களிடம் விளக்கம் கேட்கச் சொன்னான் என்று ஓர் நண்பர் கூறினார்.

அதற்கு ஆதாரமாக கீழே உள்ள இறை வசனத்தையும் அனுப்பி வைத்தார்.

And We sent not (as Our Messengers) before you (O Muhammad ) any but men, whom We inspired, (to preach and invite mankind to believe in the Oneness of Allah). So ask of those who know the Scripture [learned men of the Taurat (Torah) and the Injeel (Gospel)], if you know not. (16:43)

சரியான மொழிபெயர்ப்பு கிடைத்துவிட்டால் அரபி தெரிந்தவர்களும் அரபி தெரியாதவர்களும் ஒன்றுதான் என்பது என் கருத்து.

ஏனெனில் வசனங்களின் பொருளை விளங்கிக் கொள்ளத்தான் ஆய்ந்தறியும் அறிவு தேவையே தவிர வெறுமனே மொழிபெயர்ப்பு செய்வதற்கு அல்ல.

மொழிபெயர்க்க அரபி தெரிந்திருக்க வேண்டும்தான். ஆனால் விளக்கம் சொல்ல அரபி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதனை விளக்கும் வகையில், நண்பருக்கு நான் அளித்த பதில் கீழே உள்ளது. இனி உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள், வளரலாம்!

*
16-43 ஐ அனுப்பித் தந்தமைக்கு நன்றி. ஆனால் அதே வசனத்திற்கு மற்றவர்களின் மொழி பெயர்ப்புகளையும் பாருங்கள்.

http://www.tamililquran.com/qurandisp.php?start=16#16:43


16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).
 
16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

இதன்படி முந்தைய வேதத்தில் ஞானம் பெற்றோரிடம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இருக்கிறதல்லவா?

இந்தத் தமிழ் மொழியாக்கத்தோடு நான் நின்றுவிடவில்லை. மேலும் தேடினேன்.

http://quran.com/16/43

Sahih International
And  We  sent  not  before  you  except  men  to  whom  We  revealed  [Our  message].  So  ask the  people  of  the  message  if  you  do  not  know.

இதன்மூலம், முன்பு அனுப்பிய பழைய வசனங்களை யார் அறிவார்களோ அவர்களிடமிருந்து கேட்டுப் பெறுங்கள் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

Pickthall
And We sent not (as Our messengers) before thee other than men  whom We inspired - Ask the followers of the Remembrance if ye know not! -


ஞாபகம் உள்ளவர்களிடம் கேளுங்கள்

Yusuf Ali
And before thee also the messengers We sent were but men, to  whom We granted inspiration: if ye realise this not, ask of those who possess the Message.

யாருக்குத் தெரியுமோ அவரிடம் கேளுங்கள்

Shakir
And We did not send before you any but men to whom We sent revelation-- so ask the followers of the Reminder if you do not know--

Dr. Ghali
And in no way did We send (even) before you, except men to whom We revealed. "So ask the population of the Remembrance, in case you (i.e. the pagan Arabs) do not know."


Tamil Translation

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர் ஆகவே (அவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக).

http://www.islamawakened.com/quran/16/43/default.htm


இந்தத் தளத்திலும் நிறைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன.


நிச்சயமாக நாம் அறியாதவற்றை அறிவதற்கு எந்தெந்த வழிகள் உண்டோ அனைத்தையும் பயன்படுத்துவோம்.

நண்பர்கள் கலந்துரையாடி எட்டாதவற்றை எடுத்துக்கொண்டு அறிந்தோடிடம் கேட்டு ஞானம் பெறலாம் என்றுதான் கருதுகிறேன்.

நான் மட்டும் வளர்வது முக்கியமல்ல, என்னோடு அறியாதவர்கள் அனைவரும் ஞானம் பெறவேண்டும். அப்போதுதான் நம் சமூகத்தில் விழிப்புணர்வு வளரும்.

யாரோ எதையோ கேட்காவிட்டால், யாரும் எதையும் தேடப்போவதில்லை.
தேடலுக்கான தூண்டுகோலை உருவாக்குவதே நம் நோக்கமாக இருக்கட்டும்.

நான் ஒரு கேள்வியை எழுப்பும்போது, கூடுமானவரை அது தொடர்பான அனைத்தையும் வாசித்துவிடுகிறேன். அதன்பின்னர் எழும் கேள்விகளையே நான் உங்கள் முன் வைக்கிறேன். அப்படியான என் கேள்விகள் பலரின் எண்ணங்களையும் தூண்டுவதாக இருக்கும்படி செய்ய முயல்கிறேன். 

தவறான விளக்கங்கள் குர்-ஆன், ஹதீஸ் இரண்டுக்குமே கொடுக்கப்படுகின்றன. அந்தத் தவறான விளக்கங்களிலிருந்து சரியான விளக்கங்களுக்கு அனைவரும் செல்ல விரும்புகிறேன்.

அப்படி விளக்கம் தேடும்போது நான் முதலில் எடுத்துக்கொள்வது குர்-ஆன். அது முடிந்ததும்தான் ஹதீசுகள்.

இப்படியே ஒவ்வொரு பிரிவையும் முழுமையாக வாசித்து சந்தேகங்களை அகற்றி தூய்மை நிலைக்கு வர முயல்கிறேன். அனைவரையும் அதன் பாதையில் அழைக்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவி பாடியுள்ளார்களா?


இந்த வினாவும் வியப்பும் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும். குறிப்பாக, நம் சமகாலக் கவிஞர்கள் இதில் தம் கண்களையும் கருத்தையும் பதித்து, இதற்கான விடையை எதிர்பார்த்துக் காத்திருப்பதை அறிய முடிகின்றது.

மனிதர்கள் எவரிடத்தும் மண்டியிட்டுப் பாடம் படிக்காத மாமனிதரும் மனிதப் புனிதரும் ஆவார்கள் நபியவர்கள். இவ்வுண்மையை,

الذين يتبعو ن الرسول النبي الامي

(அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகின்றார்கள்.)

எனும்(7:157) இறைவசனத்தால் வல்ல இறைவன் அல்லாஹ் உறுதிப் படுத்துகின்றான். எழுதப் படிக்கத் தெரியாத நபியால் இத்துணைப் பெரிய சமூக மாற்றத்தையும் விழிப்புணர்வையும் எவ்வாறு ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் அன்றைய மற்றும் இன்றைய அறிவு ஜீவிகளால் வியந்து பாராட்ட வைத்த பண்பாகும்.

இலக்கிய விற்பன்னர்களும் கவிஞர்களும் சொற்போர் வீரர்களும் நிறைந்திருந்த அன்றைய அரபுச் சூழலில், அறிவார்ந்த சொற்களால் மறுப்புரை செய்து மாற்றத்தை ஏற்படுத்த இந்த இறை இறுதித் தூதரால் முடிந்தது என்றால், அது இறைவன் அவர்களுக்கு அளித்த சிறப்புத் தகுதியே அன்றி வேறில்லை.

ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்; முடியவில்லை! கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள்! இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை! அவர்களுள் இருந்த கவிஞர்கள் தம் திறமை முழுவதையும் கொண்டு கவிதை பாடினார்கள்; இறைப் பேரொளியைத் தம் நாவுகளால் ஊதி அணைக்கப் பார்த்தார்கள்! அப்போது,

والشعرآء يتبعهم الغاون، الم تر انهم في كل واد يهيمون، وانهم يقولون ما لا يفعلون

(இன்னும் கவிஞர்கள் எத்தகையோரென்றால், அவர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுகின்றார்கள். திண்ணமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை (நபியே) நீர் பார்க்கவில்லையா? இன்னும் திண்ணமாகத் தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்கின்றார்கள்.)

எனும்(26:2 இறை வசனங்களைக் கொண்டு நபியவர்களை ஆற்றுப் படுத்தினான்; தேற்றினான் அல்லாஹ். ஆனாலும், அத்தகைய கவிஞர்களுக்கும் வாயாப்புக் கொடுக்கும் வாய்ப்பினை, நபியவர்களின் ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்தலுக்குப் பின்னால் அமைத்துக் கொடுக்கின்றான். இதற்கான பல சான்றுகளை இத்தொடரின் இடையிடையே கண்டுவந்துள்ளோம்.

புலம் பெயர்ந்த நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவில் தம் வாழ்க்கையைத் தொடங்கிய காலகட்டத்தில் முதலாவதாகச் செய்த பணிகளுள் ஒன்று, தொழுகைப் பள்ளி கட்டியதாகும். தோழர்களுக்குத் தோள் கொடுக்கும் விதமாக, நபியவர்களும் கற்களைச் சுமந்துவந்து இறைவணக்கத்திற்கான இல்லம் கட்டும் பணியில் உதவினார்கள். அந்த ஆர்வம் மிக்க நேரத்தில் இறைத் தூதரின் இதயத்திலிருந்து கீழ்க்காணும் கவிதையடிகள் வெளிவந்தன:

هذا الحمال لا حمال خيبر ، هذا ابر ربنا و اطهر
اللهم إن الأجرأجرالآخرة ، فارحم الأنصار والمهاجرة

இதன் தமிழ்க் கவியாக்கம்:

        கற்கள் சுமக்கும் இச்சுமையோ
                  கைபர்ச் சந்தைச் சுமையன்று
        பொற்புள தூய நன்மையினைப்
                   பொழியும் இறையின் சுமையாகும்.

       இறைவா! எமது கூலியதோ
                 இறவா மறுமைக் கூலியதே
       நிறைவாய் மக்கா மதீனாவின்
                நேசர்க் குதவி புரிந்திடுவாய்!
(சஹீஹுல் புகாரீ – 3906)
அண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட போரின்போது ஒரு மலை மீது ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கற்பாறையொன்றில் தடுக்கி விழப் போனார்கள்! கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்; முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது! அந்த வேதனை அவர்களை வருத்தியபோதும், தமது கால் விரலைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு கவியடியொன்றைக் கூறி, வேதனையை மாற்றிக்கொண்டார்கள்:

إصبع دميت هل أنت إلا
و في سبيل الله ما لقيت

இதன் தமிழ்க் கவியாக்கம்:

செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
(சஹீஹுல் புகாரி – 2802 / 6146, சஹீஹ் முஸ்லிம் - 3675)
ஹிஜ்ரி ஐந்தாமாண்டில் நடைபெற்ற அகழ்ப் போரின் முன்னேற்பாடாக மதீனாவைச் சுற்றி அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருமைத் தோழர்களைக் கண்டு கவலையுற்றும், அவர்களுக்கு ஆர்வமூட்டியும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,

اللهم لا عيش إلا عيش الآخرة
فاغفر للأنصار و المهاجرة

என்ற ஈரடிக் கவிதையினைப் பாடினார்கள்.
(சஹீஹுல் புகாரீ – 2834,4099)

அக்கவியடிகளின் தமிழ்க் கவியாக்கம் இதோ:

இறைவா! உண்மை வாழ்வதுவோ
என்றும் நிலைத்த மறுமையதே
நிறைவாய் மதினா மக்காவின்
நேசர் களைநீ மன்னிப்பாய்!

கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை. அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை; அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்; பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.
                                                                                                                    அதிரை அஹ்மது
 
இறைதூதர் கவிதைகளுக்கு அன்புடன் புகாரியின் விமரிசனம்
 

அன்பிற்கினிய மூத்தசகோதரர் அதிரை அகமது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

இறைத்தூதரின் கவிதைகளை மொழிமாற்றி இட்டிருக்கிறீர்கள். அழகாக வந்திருக்கிறது. அருமையாக இருக்கிறது.

>>>>>>
கற்கள் சுமக்கும் இச்சுமையோ
கைபர்ச் சந்தைச் சுமையன்று
பொற்புள தூய நன்மையினைப்
பொழியும் இறையின் சுமையாகும்.
>>>>>>

கற்களையா உன் தோள்கள் சுமக்கின்றன; இறையின் அளவற்ற அருளையல்லவா சுகமாய்ச் சுமக்கின்றன!

அடடா எத்தனை அழகு. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பார்கள். அங்கே மருந்தும் தேனும் சம அளவில் இருக்கும் அல்லது தேன் சற்று கூடுதால் இருக்கும்.

ஆனால் இக்கவிதையிலோ குடம் குடமாய்த் தேன் கவிழ்ந்து அப்படியே கொட்டிக்கொண்டே இருக்கிறது வெறும் சுண்டைக்காய் அளவு சுமைக்காக. இக்கவிதையைக் கேட்டபின் அந்தச் சுமையைச் சுமக்கத்தான் எத்தனை புத்துணர்ச்சி உற்சாகப் பெறுக்கெடுக்கும்.

கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள். பொய் என்பது உண்மையில் பொய்யல்ல அலங்காரம். கண் என்ற உண்மைக்கு மை என்பது அலங்காரம். கவிதை என்ற உண்மைக்கு கற்பனை என்பது அலங்காரம்.

உண்மைக்கு அலங்காரம் செய்ய வந்த ஒரு கற்பனை நயமே இன்னொரு பெரும் உண்மையாகிறது இக்கவிதையில் மட்டும்தான். ஆகவே இது உண்மையிலேயே தனித்துவமான கவிதை. கவிதைகளையெல்லாம் வென்றெடுத்த கவிதை என்பேன்.

எப்படி எனில்....

ஒரு சாதாரண கவிஞன் ”நீ சுமப்பது கல்லல்ல இறைவனின் அருள்” என்று கூறியிருந்தால், அட எத்தனை அழகாகச் சொல்லி இருக்கிறான் கவிஞன் என்று பாராட்டுவோம். இறைவனின் அருளைச் சுமப்பதாய் நினைத்து நாம் கற்களைச் சுமப்போம் வாருங்கள் என்று அனைவரையும் அழைப்போம்.

ஆனால் அதையே இறைத்தூதர் சொன்னால் என்னவென்று பொருளாகும்?

கல் என்பது அருளுக்குச் சமம் என்ற நிலை மாறி அது இறைவனின் அருளேதான் என்று ஆகிவிடுமல்லவா? ஏனெனில் சொல்லுவது ரசூல் அல்லவா?

கவிதைக்கு அலங்காரமாய் வந்த கற்பனையே அது வெறும் கற்பனை அல்ல, உண்மை என்று ஆன ஒரே கவிதை இது மட்டும்தான் என்பேன்.
 
>>>>>>
செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
>>>>>>

இது நாயகத்தின் கவிதை என்று எனக்கு முதன் முதலில் சில ஆண்களுக்கு முன் அறிமுகம் செய்து வைத்தவர் நாகூர் ரூமி என்னும் முகமது ரஃபி. நான் படித்த ஜமால் முகமது கல்லூரியில் எனக்கு மூத்தவர். இன்று ஆங்கிலப் பேராசிரியர், எழுத்தாளர், மற்றும் கவிஞர். அவரின் மொழியாக்கம் இப்படி இருந்தது.

ரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான்
ஆனால் இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்

எந்த ஓர் இன்னல் வந்த போதும் சட்டென்று இறைவனை நினைத்து எளிதாக ஆக்கிக்கொள்ளும் ஈமான் நிறைந்த உள்ளம்தான் இறைதூதரின் கவிதைகளில் அப்பட்டமாய் வெளிப்படுகின்றது.

அந்தப் பொதுத்தன்மையே இறைதூதரின் கவிதைகளில் முதன்மை என்று நான் காண்கிறேன்.

குறைசிகளின் பெருங் கொடிய இன்னல்களுக்கு மட்டுமல்ல, கல் சுமப்பது, விரலில் வழியும் ரத்தம் போன்ற சின்னச் சின்ன இன்னல்களுக்கும்கூட இறைதூதர் இறைவனின் அருளையே பற்றிப் பிடித்து வெற்றி கொள்கிறார்.

இது அனைத்து முஸ்லிம்களுக்கும் மிக நல்ல பாடம்.

நான் இறைதூதரின் கவிதைகளுக்கும் விமரிசனம் எழுதுவேன் என்று கனவு கூட கண்டது கிடையாது. இன்று எனக்கு அந்த வாய்ப்பினைத் தந்த அன்பு ஆய்வாளர் உங்களுக்கு எத்தனை நன்றிகளை எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை!
 
>>>>>>
கருணை நபியவர்கள் கவிகளும் பாடியுள்ளார்கள் என்பதற்கான சில சான்றுகளே இவை. அவர்கள் காரணமின்றிக் கவிதைகளை வெறுக்கவுமில்லை; அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த ‘வஹி’ என்ற உயர் இலக்கியத் திறன் கொண்டு, கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்தும் உள்ளார்கள்; பாடுவோரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள் என்பதுவே உண்மையிலும் உண்மையாகும்.
>>>>>>>

இந்த அருமைத் தொடருக்கு இந்த முத்தாய்ப்பு வரிகள் மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளன. நான் முன்பே உங்கள் தொடரின் பகுதிகளில் சொன்னதுபோல், நீண்டகாலம் ஓர் நல்ல ஆய்வுக்காகக் காத்திருந்தேன்.

நான் முதன் முதலில் இது தொடர்பாக தமிழில் வாசித்த கட்டுரை பேராசிரியர் நாகூர் ரூமியினுடையது. அதுவும் அருமையானதுதான். ஆனால் அது என்னைப் போன்றவர்களுக்குத்தான் ஏற்றதாக இருந்தது. அர அல போன்றவர்களுக்கு அல்ல.

நாகூர் ரூமியின் கட்டுரையை கீழுள்ள சுட்டியில் காண்க:
http://anbudanislam2012.blogspot.ca/2012/07/blog-post_9653.html

’வஹீ என்ற உயர் இலக்கியத் திறன்’ என்ற சொற்றொடரை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். ஆம் அது ஓர் உயர் இலக்கியத் திறனேதான். அதை நல்ல கவிஞர்களால்தான் எளிதாகவும் சரியாகவும் அணுகமுடியும் என்பது என் அழுத்தமான கருத்து.

மிகப் பெரும் கவிஞர்களாலேயே சூழப்பெற்ற அரபு மண்ணில் அவர்களையெல்லாம் அதிசயிக்கவும் ஆச்சரியப்படவும் வைக்கும் உயர் கவிதை நடையில் குர்-ஆன் இறங்குவதுதானே மிகவும் பொருத்தமானது. இறைவன் என்ன அறியாதவனா? இது போல் ஓர் வரியையாவது இவர்கள் எழுதுவார்களா என்ற சவால்கூட திருமறையில் உள்ளதல்லவா?

இஸ்லாம் வாளால் தோன்றிய மதம் என்பார்கள்
அது உண்மை அல்ல
இஸ்லாம் கவிதையால் யாக்கப்பட்ட மார்க்கம் என்றால்
அதை நாம் தாராளமாக நம்பலாம்
 
>>>>ஆதிக்க வலிமையால் அடக்கி ஒடுக்கப் பார்த்தார்கள் குறைஷியர்; முடியவில்லை! கேலி கிண்டல்கள் செய்து பார்த்தார்கள்; தோல்வியைத் தழுவினார்கள்! இறுதியாக அவர்கள் கைகளில் எடுத்த போர்க்கருவிதான் கவிதை!<<<<<

ஆமாம், குறைசிகளின் இனத்தில் பிறந்த அண்ணல் நபிக்கு 90 விழுக்காட்டிற்கும்மேல் எதிர்ப்பினைக் கொடுத்தவர்கள் குறைசிகள்தாம். குறைசிகளின் எதிர்ப்பு தீராத ஒன்றாகவே இறுதிவரை இருந்தது.

நாயகம் 40 வயதில் நபித்துவம் அடைகிறார். இஸ்லாம் பல வெற்றிகளை எட்டியபின்னரும்கூட தன் 52வது வயதில் அதாவது 12 வருடங்கள் ஆகியும் தீராத பகையை குறைசியர் கொடுக்க மதினாவுக்கு அடைக்கலம் தேடிச் செல்கிறார். அத்தனை கொடுமைக்காரர்கள் குறைசியர்.

அவர்கள் கைகளிலும் கவிதைகளா எனும்போது எனக்கு மட்டுமல்ல அந்தக் கவிதைகளுக்கும் நிச்சயம் உயிர்போக வலித்திருக்கும்.

நெருப்பு எவர் கைக்கும் வரும்தான். ஆனால் கொள்ளிக்கட்டைகளை எப்படி சுடர் விளக்குகளால் விரட்டி வாழ்வை ஒளிமிகுந்ததாய் ஆக்கமுடியும் என்பதற்கு இஸ்லாமியக் கவிதைகள் சிறந்த நல் உதாரணங்களாய் அமைந்துள்ளன.

அக்கவிதைகளுள் சிலவற்றைத் தொகுத்து மொழிமாற்றி இத் தொடர் முழுவதும் தோரணங்களாய்க் கட்டி கம்பீரமாய் தொங்கவிட்ட உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

குறைசியர் கவிதைகளுக்கும் இஸ்லாமியர் கவிதைகளுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தம் முழுவதையும் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். புல்லரிக்கிறது.

அன்புடன் புகாரி

 

Wednesday, August 22, 2012

மனிதர்களை இறைவன் ஏன் படைத்தான்?

இணையத்தில் ஓர் இஸ்லாமியக் கட்டுரைத் தொடர் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அதை அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்சின் இயக்குனர் அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்., எழுதிக்கொண்டிருந்தார்.

அந்த கட்டுரைத் தொடரில் கீழ்கண்ட செய்தி என்னை வெகுவாகக் கவர்ந்தது.
*

மனிதனை மட்டுமல்ல, வானம், பூமி இன்னும் நம் அறிவுக்குத் தெரிந்த, தெரியாத எந்தப் படைப்புகளையும் உண்டாக்க வேண்டுமென்ற தேவை அல்லாஹ்வுக்கு இல்லை. எனினும், அவன் படைப்புகளைப் படைப்பதன் நோக்கம், அவனது வல்லமையைப் படைப்புகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

وما خلقت الجن والإنس الا ليعبدون
ஜின்களையும், மனிதர்களையும்
படைத்தன் நோக்கம்
அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி
வேறில்லை. (குர்-ஆன் 51:56)


மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதை என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும்,

كنت كنزاً مخفياً فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف
நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் அறியப்படவேண்டும் என்பதற்காகப்
படைப்புகளைப் படைத்தேன் என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் குத்ஸீ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்த ஹதீதின் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்திற்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். (தஃப்ஸீர் கபீர்,
தஃப்ஸீர் ஆலூஸி.)

والله الغني وانتم الفقراء
இன்னும் அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். நீங்களே அவனிடத்தில் தேவையுற்றவர்கள். (அல்குர்ஆன் 47:38)

*

இதில் ஏக இறைவன் பதித்து வைத்த பல உண்மைகள் தெளிவாவதைக் கண்டேன்.

நீ என்னை வணங்கு அதற்காகத்தான் நான் உன்னைப் படைத்தேன் வேறு எதற்காகவும் நான் உன்னைப் படைக்கவில்லை என்று கூறினால் அது வெறும் கட்டளை இடுவதாகவே படுகிறது.

தனக்கு அப்படியான ஒரு தேவை இருக்கிறது அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொள்ளவே நான் உன்னைப் படைத்தேன் என்று இறைவன் கூறுவதுபோல் இருக்கிறது.

இறைவனோ தேவைகளே அற்றவன்.

இறைவனின் குணம் என்று சொல்லப்படுபவையோ நிகரற்ற அன்பும் அளவற்ற அருளும் எல்லையற்ற கருணையும்தாம்.

என்னை நீ அறிந்துகொள் என்பதில் ஆழ்ந்த கருத்துள்ளது. இறைவனை அறிந்துகொள்வதென்றால் என்ன?

இறைவனின் நிகரற்ற அன்பை அறிந்துகொள்வது, இறைவனின் அளவற்றை அருளை அறிந்துகொள்வது, இறைவனின் எல்லையற்ற கருணையை அறிந்துகொள்வது. இறைவனின் பேரறிவை அறிந்துகொள்வது, இறைவன் மிகப் பெரியவன் என்று அறிந்துகொள்வது.

இறைவனின் இவை அனைத்தையும் அறிந்துகொண்டால் அவனை வணங்காமல் எப்படி இருக்க முடியும்?

இந்த அறிதலால் வரும் வணக்கம் அல்லவா உண்மையான வணக்கம். அப்படியல்லாத வணக்கம் என்பது ஏதோ கடமையே என்று செய்யும் வணக்கம் இல்லையா?

பயத்தின் அடிப்படையில்  வரும் வணக்கம் இல்லையா? அந்த வணக்கத்தில் உண்மை இருக்குமா?

சகோதரர்களே, ஏதோ வீட்டில் தொல்லை செய்கிறார்கள் என்று இறைவனை வணங்க வரும் ஒருவனின் வணக்கம் எப்படிப் பட்டதாய் இருக்கும்?

அதில் ஜீவன் இருக்குமா? அதில் ஈமான் இருக்குமா? அதில் மனம் ஒன்றுபட்ட நிலைப்பாடு இருக்குமா?

ஒரு போலி வணக்கம் இல்லையா?

இறைவனை அறிந்துகொண்டால், அதன்பின் அவனது வணக்கம் எப்படிப்பட்டதாய் இருக்கும்?

இறைவன் இந்த இரண்டில் எந்த வணக்கத்தை விரும்புவான்?

இந்த குர்-ஆன் வசனத்தின் மொழிபெயர்ப்பைக் கண்டதும் நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. பல இணைய தளங்களிலும் உள்ள ஆங்கில மொழி
பெயர்ப்புகளை அலசினேன். அவை அனைத்தும் ஒரே மாதிரி பொருள் கூறுபவையாக இல்லை.

1. வணங்குவதற்கே
2. சேவை செய்யவே
3. அறிவதற்கே

என்று மூன்று வகைகளாக மாறுபட்டிருந்தன.

இது தொடர்பாக எங்களுக்குள் ஓர் கருத்தாடலும் தொடங்கியது. ஒரு இஸ்லாமிய அறிஞர் வணங்குவதற்கே என்பது மட்டுமே சரி. மற்ற
இரண்டும் பிழை என்று கூறினார். ஆகவே இதற்கான விளக்கத்தை அரபு மொழியை ஐந்து வருடங்கள் படித்து அதில் சிறந்த அறிஞர் என்று பட்டமும்
பெற்ற, இந்தக் கட்டுரையை எழுதிய அகமது ஆரிஃப் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அவர் இதன் பொருட்டு அவர் செய்த ஆய்வினை எனக்கும் மறுப்புக் கூறிய இஸ்லாமிய அறிஞருக்கும் அனுப்பி வைத்தார்.

அது கீழே தரப்படுகிறது.

இந்தக் கட்டுரைக்கு அந்த இஸ்லாமிய அறிஞரோ மற்றும் இதை வாசித்த பலரோ மறுப்பேதும் கூறவில்லை. மாறாக பலரும் மிகுந்த பாராட்டை சிறந்த அறிஞர் என்று பட்டம் பெற்ற சகோதரர் அகமது ஆரிஃப் அவர்களுக்குத் தெரிவித்தார்கள்.

*

நாம் ஏன் படைக்கப் பெற்றோம்?

அஃப்ளலுல் உலமா
அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600092.

وما خلقت الجن والانس الا ليعبدون (الذاريات:56)
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை. (தாரிய்யாத்-56)
மேற்கண்ட வசனத்தின் படி அல்லாஹ்வையே வணங்குவது மனிதர்களின் மீதும், ஜின்களின் மீதும் கடமை. ஆனால், எப்படி வணங்குவது? என்ற கேள்விக்கான பதிலை அறியாத வரையும், இன்னும், வணக்க்த்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதைப் புரிந்து அறிந்து கொள்ளாத வரையும் அவனை முறையாக வணங்குதல் இயலாது. இறைவனை வணங்குவது கடமை எனில் இறைவனை முறையாக வணங்குவது எப்படி என்று அறிதலும் கடமை தான். இறைவனை முறையாக வணங்க வேண்டும் எனில்...

அல்லாஹ் யார்?
அல்லாஹ் எப்படிப் பட்டவன்?
நமக்கும் அல்லாஹ்வுக்கும் என்ன தொடர்பு?
அல்லாஹ்வை மட்டுமே ஏன் வணங்க வேண்டும்?
அல்லாஹ்வை எப்படி வணங்கவேண்டும்?
அல்லாஹ்வை வணங்கினால் என்ன நன்மை?
அல்லாஹ்வை வணங்காவிட்டால் என்ன தீமை?
உண்மையான வணக்கம் எது?
அவ்வணக்கத்தின் தத்துவம் என்ன?
அல்லாஹ் படைத்தன் நோக்கம் வணக்கத்திற்காக எனில்,
வணக்கத்தின் மூலம் மனிதர்களும், ஜின்களும்
அடைந்து கொள்ளும் இறுதி நோக்கம் என்ன?
சுவர்க்கத்தை அடையப் பெறுவதா?
நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதா?
அவனைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதா?
அவனது காட்சியைப் பெற்றுக் கொள்வதா?
சுவர்க்கத்தின் மீது ஆசைப்பட்டும்,
நரகத்திலிருந்து காவல் பெறவும் மட்டும்
புரியப்படும் வணக்கம் தூய்மையான வணக்கமா?
அல்லது அல்லாஹ்வை மட்டுமே நாடி,
அதன் மூலம் அவனது பொருத்தத்தையும்,
அவனைப் பற்றிய அறிவையும், காட்சியையும்
பெறுவதற்காகவும் புரியப்படும் வணக்கம்
அதனை விடத் தூய்மையான வணக்கமா?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து கொள்ளா விட்டால் அவனை எப்படி முறையாக உணர்ந்து வணங்க முடியும்? அவனது வணக்கத்தில் கிடைக்கும் இன்பங்களையும், சுவைகளை எப்படி உணர முடியும்?

இவ்விளக்கத்தினை, இறைமறையின் வேறு பல வசனங்களை ஆராய்வதன் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் மனித இனத்தை இப்பூமியில் படைக்க நாடியபோது நடந்த நிகழ்வுகளை அவனது இறைமறையில் இவ்வாறு கூறுகின்றான்...

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ )البقرة:30)
“பூமியில் ஓர் பிரதிநிதியை ஆக்கப் போகிறேன்” என்று உமது இரட்சகன் வானவர்களிடம் கூறிய போது, அவர்கள், “அதில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக் கூடியவரையா நீ உண்டாக்கப் போகிறாய்? நாங்கள் உனது புகழைக் கொண்டு உன்னைத் துதித்துக் கொண்டும், தூய்மைப் படுத்திக் கொண்டும் இருக்கின்றோமே?” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ் “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” என்று கூறினான். (அல்குர்ஆன் 2:30)

மேற்கண்ட வசனத்தில் மலக்குகள் உனது புகழைக் கொண்டு உன்னைத் துதித்துக் கொண்டும், உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டும் இருக்கின்றோமே என்று கூறியதில் இருந்து, அவர்கள் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் என்று விளங்குகின்றது. இருப்பினும், அல்லாஹ், அவர்களின் வணக்கத்தை விட உயர்வான ஓர் வணக்கத்தைப் புரியக் கூடிய மனித இனத்தைப் படைக்க நாடினான் என்றும் விளங்குகின்றது. மலக்குகளின் வணக்கத்தை விட உயர்வான ஓரு வணக்கத்தை நாடியே ஜின்களையும் அல்லாஹ் படைத்தான். அவர்கள், அத்தகைய வணக்கத்தைப் புரியாததால், அவர்களுக்குப் பதிலாக மனித இனத்தைப் படைக்க நாடினான் என்பதும் விளங்குகின்றது.

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ )البقرة:31)
“அதுமட்டுமின்றி, அந்த முதல் மனிதருக்கு அனைத்துப் (படைப்புகளின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதன் பின்னர், அவற்றை வானவர்களின் முன்னர் நிறுத்தி, ‘நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், இவற்றின் பெயர்களைக் கூறுங்கள்’ என்றான். (அல்குர்ஆன் 2:31)

அதாவது, அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “நாங்கள் உன்னை வணங்கிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்று நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவற்றின் பெயர்களையும் கூறுங்கள்”, என்று கூறுகின்றான்.

قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ (البقرة:32)
قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ ۖ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ (البقرة:33)

அவ்வானவர்கள், ‘இறைவனே, நீ மிக்க தூய்மையானவன். நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக, நீயே மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனுமாகவும் இருக்கிறாய்’ என்றனர். (அல்லாஹ்,) ‘ஆதமே, இவற்றின் பெயர்களை நீர் இவர்களுக்குக் கூறும்’ என்றான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களிடம் கூறியதும், ‘நான் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவேன் என்றும், நீங்கள் வெளியாக்கி வைப்பதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அல்லாஹ் கூறினான்.” (அல்குர்ஆன் 2:32,33)

மேற்கண்ட வசனத்தில், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அறிவுகளை மலக்குமார்களின் முன்னர் எடுத்துரைக்குமாறு கூறுகின்றான். ஆதம் (அலை) அவர்கள் அவற்றைக் கூறியதும், மலக்குகளது வணக்கத்தை விட, அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த அறிவின் மேன்மையை அவர்களுக்கு விளக்குகின்றான்.

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (البقرة:34)
மேலும், மலக்குகளை நோக்கி, ஆதமுக்கு சிரம் தாழ்த்துங்கள் என்று கூறியபோது, அவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தினார்கள், இப்லீஸைத் தவிர. அவன் மறுத்தான், இன்னும் பெருமை கொண்டான். எனவே, நிராகரிப்போரில் ஒருவனாக ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:34)


ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுங்கள் என்று அல்லாஹ் கூறியபோது, மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாத தன்மையில் படைக்கப்பட்டவர்கள் ஆதலால், உடனே, சிரம் பணிந்து விட்டனர். ஆனால், தனது வணக்கங்களினால் மலக்குகளுக்கே தலைவனாக ஆக்கப்பட்டிருந்த இப்லீஸ், இவ்வளவு காலமும் அல்லாஹ்வுக்கே சிரம் பணிந்து வணங்கிக் கொண்டிருந்த மலக்குகளை நோக்கி, ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுங்கள் என்று அல்லாஹ்வே கூறிய அக்கட்டளையின் மறைந்து இருந்த உண்மைத் தத்துவத்தை இப்லீஸ் அறிந்திருக்கவில்லை. அதை அறிய முயற்சிக்கவும் இல்லை. பெருமை பாராட்டினான். எனவே, அவன் இவ்வளவு காலமும் புரிந்திருந்த வணக்கங்களின் மூலம் அவன் பெற்றிருந்த பதவியை விட்டும் நீக்கப்பட்டு, இறைவனது அருளை விட்டும் தூரமாக்கப்பட்டு, நிராகரிப்போரில் ஒருவனாக ஆகி விட்டான், என்று அல்லாஹ் விளக்குகின்றான்.

மேற்கண்ட இறைவசனங்களில் இருந்து தெளிவாகும் கருத்து என்னவெனில், மலக்குகளின் வணக்கத்திற்கும், ஷைத்தானுடைய வணக்கத்திற்கும், ஆதம் (அலை) அவர்களும், அவர்களது சந்ததியினரும், அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அறிவின் அடிப்படையில் புரியும் வணக்கத்திற்கும் வானிற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி உண்டு என்பது தான்.

இல்லையெனில்,

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ [ الزمر: 9 ].
அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? (அல்குர்ஆன் 39:9)

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ [ المجادلة: 11 ]
நம்பிக்கை கொண்டோருக்கும், அறிவைக் கொடுக்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகின்றான். (அல்குர்ஆன் - 58:11)

|وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا َقَالا الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ (النمل:15)
நாம் தாவூதுக்கும், சுலைமானுக்கும் அறிவைக் கொடுத்தோம். அவர்கள் இருவரும், தனது இறைநம்பிக்கை கொண்ட அடியார்களில் அநேகரை விட எங்களை மேன்மையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், என்று கூறினர். (அல்குர்ஆன் 27:15)

اِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ [الفاطر:28].
நிச்சயமாக, அவனை வணங்குவோரில், அறிந்தோர் தாம்,
அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்றனர். (அல்குர்ஆன் 35:28)

போன்ற இறைவசனங்கள் எதனை உணர்த்துகின்றன?


அதுமட்டுமின்றி,
كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ (البقرة:151)
அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும், (அவற்றிலுள்ள) ஞானங்களையும் கற்பித்து, நீங்களறியாத மற்றவற்றையும் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களுக்கிடையில் நாம் அனுப்பிவைத்தோம். (அல்பகரா-151)

என்ற இறைவசனம் இறைவனை முறையாக வணங்கி வழிபடுவது எப்படி என்பது பற்றிய அறிவைக் கற்றுக்கொடுப்பதற்காகவே அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை நம்மிடம் அனுப்பி வைத்தான் என்று விளக்குகின்றது.

மேலும், திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹாவில்,
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

நாங்கள் உன்னையே வணங்குகின்றோம், உன்னிடத்திலேயே உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக. அது நீ அருள்புரிந்தாயே அவர்களது வழி. நீ எவர் மீது கோபப்பட்டாயோ, இன்னும் எவர்கள் வழிதவறிவிட்டார்களோ, அவர்களது வழியல்ல. (அல்குர்ஆன் 1:6-7)

எனும் வசனங்களில் முதலில் உன்னையே வணங்குகின்றோம் என்று உறுதி கூறச் சொல்கின்றான். அதன்பின், அவனது வணக்கத்தை முறையாக நிறைவேற்றும் நேரான வழியைக் கேட்குமாறு பணிக்கின்றான். இவ்வாறு அல்லாஹ்வே அவனை முறையாக வணங்க உதவும் நேரான வழியைப் பற்றிய அறிவை அவனிடமே கேட்குமாறு நமக்குக் கற்றுத் தருகின்றான்.


இன்னும், அல்லாஹ்வைப் பற்றிய அறிவுடன் அவனை வணங்குவது, அவனை வெறுமனே தானியங்கி இயந்திரம் போன்று வணங்குவதை விட உயர்ந்தது என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் கூறிய பொன்மொழிகளும் உணர்த்துகின்றன.

وفى " الصحيحين " من حديث معاوية بن أبى سفيان رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول: " من يرد
الله به خيرا يفقهه في الدين ".

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ, அவருக்கு அல்லாஹ் மார்க்கத்தில் தேர்ச்சியாக்குகின்றான், என்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி), நூல்-புகாரி, முஸ்லிம்.

وعن أبى أمامة رضي الله عنه قال: ذكر لرسول الله صلى الله عليه وآله وسلم رجلان: أحدهما: عابد، والآخر: عالم، فقال رسول الله صلى الله عليه وآله وسلم: " فضل العالم على العابد كفضلى على أدناكم "، ثم قال رسول الله صلى الله عليه وآله وسلم: " إن الله وملائكته، وأهل السموات والأرض، حتى النملة في جحرها، وحتى الحوت ليصلون على معلمي الناس الخير " رواه الترمذي وقال: حديث حسن صحيح.

நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அவர்களில் ஒருவர், வணக்கவாளி இன்னொருவர், அறிஞர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அறிஞருக்கு வணக்கவாளியை விட இருக்கும் சிறப்பு உங்களில் மிகவும் கடைநிலைப் படித்தரத்தில் இருப்பவரை விட எனக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்” என்று கூறிவிட்டு, “நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குமார்களும், வானத்திலும், பூமியிலும் உள்ளோரும், இன்னும் புற்றில் இருக்கும் எறும்பும் கூட, மீனும் கூட, மக்களுக்கு நன்மையைக் கற்றுத்தருவோரின் ஸலவாத் கூறுகின்றனர்”, என்று கூறினார்கள். அறிவிப்பவர்-அபூஉமாமா (ரலி) நூல்-திர்மிதீ எண்-2685

إن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، وإن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذ به أخذ بحظ وافر. رواه ابن ماجه عن ابي الدرداء.

“ஒரு வணக்கவாளியை விட அறிஞருக்கு உரிய சிறப்பு, நட்சத்திரங்கள் அனைத்தையும் விட பௌர்ணமி நிலவுக்குரிய சிறப்பைப் போன்றதாகும். நிச்சயமாக, அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ, திர்ஹமையோ வாரிசுப் பொருளாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள், அறிவையே வாரிசாக விட்டுச் சென்றுள்ளனர். எவர், அதனை எடுத்துக் கொண்டாரோ, அவர் மிகப் பெரும் அதிஷ்டத்தையே எடுத்துக் கொண்டார்” என்று நபி (ஸல்) கூறியதாக அபுத் தர்தா (ரலி) அறிக்கிறார்கள். (நூல் இப்னு மாஜா எண்-3160)

மேற்கண்ட இறைவசனங்களும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும், இறைவனை வெறுமனே வணங்குவதை விட அவனைப் பற்றிய, அவனது வணக்கம் பற்றிய அறிவுகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உணர்த்துகின்றன.


மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதற் என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும்,

كنت كنزاً مخفياً فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف
நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் அறியப்படவேண்டும் என்பதற்காகப் படைப்புகளைப் படைத்தேன் என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் குத்ஸீ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஹதீதின் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்திற்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். (தஃப்ஸீர் கபீர், தஃப்ஸீர் ஆலூஸி.)

குர்ஆனில் லியஃபுதூன் என்று வந்திருக்கும்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எவ்வாறு அதற்கு மாற்றமாக லியஃரிஃபூன் என்று ஓத முடியும் என்று சிலருக்கு ஐயம் ஏற்படுகின்றது.

இறைமறை அல்குர்ஆனை ஓதும் கிராஅத் முறைகள் பல உள்ளன. இவற்றில், 1.அல் கிராஅத்துல் முதவாத்திரஹ் மக்களிடையே புழக்கத்தில் ஓதப்படும் கிராஅத் 2. அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ் – அரிதாக ஓதப்படும் கிராஅத் என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த அனைத்து வகைக் கிராஅத்துகளுமே நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஓதிக்காட்டியது தான். இதை ஹதீதில் வரும் கீழ்க்கண்ட நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.

قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَاسْتَمَعْتُ لِقِرَاءتِهِ، فَإِذَا هُوَ يَقْرَأُ عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاةِ، فَتَصَبَّرْتُ حَتَّى سَلَّمَ، فَلَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ؟ قَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ: كَذَبْتَ، فَإِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ أَقْرَأَنِيهَا عَلَى غَيْرِ مَا قَرَأْتَ. فَانْطَلَقْتُ بِهِ أَقُودُهُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ بِسُورَةِ الْفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَرْسِلْهُ. اقْرَأْ يَا هِشَامُ. فَقَرَأَ عَلَيْهِ الْقِرَاءةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: كَذَلِكَ أُنْزِلَتْ، ثُمَّ قَالَ: اقْرَأْ يَا عُمَرُ، فَقَرَأْتُ الْقِرَاءةَ الَّتِي أَقْرَأَنِي، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: كَذَلِكَ أُنْزِلَتْ. إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرؤُوا مَا تَيَسَّرَ مِنْهُ.

ஹிஷாம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஸூரத்துல் ஃபுர்கானை ஓதுவதை நான் கேட்டேன். ஆனால், அவர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டியிராத பல வார்த்தைகளை ஓதினார். அவரைத் தொழுகையிலேயே தாவிப் பிடித்து நிறுத்த வேண்டும் என்று எண்ணினேன். இருப்பினும் அவர் ஸலாம் கொடுக்கும் வரை நான் பொறுமையுடன் இருந்து, அவர் தொழுகையை முடித்ததும் அவரது உடையைப் பிடித்துக் கொண்டு, இப்போது நீர் ஓதக் கேட்டேனே, இந்த ஸூராவை உமக்கு இவ்வாறு ஓதிக் கொடுத்தது யார்? என்று கேட்டேன். அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் எனக்கு ஓதிக் கொடுத்தார்கள், என்றார். நான், நீர் பொய்யுரைக்கிறீர், ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்த ஸூராவை வேறு முறையில் அல்லவா ஓதிக் கொடுத்தார்கள், என்று கூறினேன். அதன்பின் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துக் கொண்டு சென்று, இவர் நீங்கள் ஃபுர்கான் ஸூராவை எனக்கு நீங்கள் கற்றுத் தராத முறையில் ஓதுகின்றார், என்றேன். நபி (ஸல்), அவரை விடுங்கள், ஹிஷாமே, நீர் ஓதும், என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் நான் அவர் எவ்வாறு ஓதக் கேட்டேனோ, அவ்வாறு ஓதிக் காட்டினார். அதனைக் கேட்ட ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், இப்படித்தான் இறங்கப் பெற்றது, என்றார்கள். பின்னர், என்னிடம், உமர், நீர் ஓதும் என்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் கொடுத்தவாறு ஓதிக் காட்டினேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், இப்படியும் இறக்கப்பட்டது, நிச்சயமாக இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் இறக்கப்பெற்றுள்ளது. நீங்கள் எதனை எளிதாகக் காணுகின்றீர்களோ, அதனை ஓதுங்கள், என்றார்கள். (அறிவிப்பவர் – உமர் (ரலி) நூல்-புகாரி எண்.. 4635. இதே ஹதீது சில வார்த்தைகள் மாற்றங்களுடன் ஸஹீஹ் முஸ்லிம் நூலிலும் வருகின்றது எண் 1717)

حدثنا محمد بن عبيد الله أبو ثابت حدثنا إبراهيم بن سعد عن ابن شهاب عن عبيد بن السباق عن زيد بن ثابت قال بعث إلي أبو بكر لمقتل أهل اليمامة وعنده عمر فقال أبو بكر إن عمر أتاني فقال إن القتل قد استحر يوم اليمامة بقراء القرآن وإني أخشى أن يستحر القتل بقراء القرآن في المواطن كلها فيذهب قرآن كثير وإني أرى أن تأمر بجمع القرآن قلت كيف أفعل شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم فقال عمر هو والله خير فلم يزل عمر يراجعني في ذلك حتى شرح الله صدري للذي شرح له صدر عمر ورأيت في ذلك الذي رأى عمر قال زيد قال أبو بكر وإنك رجل شاب عاقل لا نتهمك قد كنت تكتب الوحي لرسول الله صلى الله عليه وسلم فتتبع القرآن فاجمعه قال زيد فوالله لو كلفني نقل جبل من الجبال ما كان بأثقل علي مما كلفني من جمع القرآن قلت كيف تفعلان شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم قال أبو بكر هو والله خير فلم يزل يحث مراجعتي حتى شرح الله صدري للذي شرح الله له صدر أبي بكر وعمر ورأيت في ذلك الذي رأيا فتتبعت القرآن أجمعه من العسب والرقاع واللخاف وصدور الرجال فوجدت في آخر سورة التوبة لقد جاءكم رسول من أنفسكم إلى آخرها مع خزيمة أو أبي خزيمة فألحقتها في سورتها وكانت الصحف عند أبي بكر حياته حتى توفاه الله عز وجل ثم عند عمر حياته حتى توفاه الله ثم عند حفصة بنت عمر

அபூபக்கர் (ரலி) அவர்கள் யமாமா போரில் அதிகமான ஸஹாபிகள் கொல்லப்பட்டது பற்றி எனக்குச் செய்தி அனுப்பினர். அப்போது அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் இருந்தனர். அச்செய்தியில், அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக, யமாமாப் போர் தினத்தன்று அதிகமான குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிள்கள் பலர் ஷஹீதாகி விட்டனர். இன்னும், பல இடங்களில் இருக்கும் ஹாஃபிள்கள் போரினால் கொல்லப்பட்டு விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக உள்ளது. அப்படி நடந்தால், அதிகமான குர்ஆன்கள் நம்மிடம் இருந்து போய் விடும். எனவே, நீங்கள் குர்ஆனை ஒன்று சேர்ப்பது பற்றிக் கட்டளை பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வது” என்றேன். அதற்கு, உமர் (ரலி) அவர்கள் . அதற்கு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அது நன்மையான விஷயம் ஆகும்” என்றார்கள். இவ்விஷயத்தை உமர் (ரலி) அவர்கள் என்னுடன் அடிக்கடி கூறிக் கொண்டு வந்தார்கள். உமர் (ரலி) அவர்களது உள்ளத்தில் எவ்விஷயத்தைத் தெளிவு படுத்தினானோ, அவ்விஷயத்தை எனது உள்ளத்திலும் விளக்கி விட்டான். எனவே, உமர் (ரலி) அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். நிச்சயமாக, நீர் அறிவு மிக்க இளைஞனாக இருக்கின்றீர். உம்மை நாங்கள் சந்தேகப் படவில்லை. இன்னும், நபி (ஸல்) அவர்களது வஹ்யை எழுதிக் கொண்டும் இருந்தீர். எனவே, நீர் குர்ஆனைச் சேகரிப்பீராக”, என்று கூறினர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு மலையை நகர்த்துமாறு கூறியிருந்தாலும், அது குர்ஆனைச் சேகரிக்குமாறு என்னிடம் கூறியதை விடக் கடினமான ஒன்றாக இருந்திருக்காது. நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் ஏன் செய்கிறீர்கள்?”, என்று கேட்டேன். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது நன்மையான ஒன்றாகும்”, என்றார்கள். அபூபக்ரு (ரலி) அவர்கள், இவ்விஷயத்தைப் பற்றி என்னிடம் அடிக்கடிப் பேசி வந்தார்கள். அபூபக்ரு, உமர் (ரலி) ஆகியோரது உள்ளத்தில் அல்லாஹ் கொடுத்த விளக்கத்தை என்னுடைய உள்ளத்திலும் கொடுத்தான். அதன்பின் நான் ஸஹாபாக்கள் தோல்கள், எலும்புகள், உடைந்த களிமண் துண்டுகள், பேரீச்ச மரப்பட்டைகள் போன்றவற்றில் எழுதி வைத்திருந்த, இன்னும் தங்களின் உள்ளங்களில் மனனம் செய்து வைத்திருந்தவற்றில் இருந்து குர்ஆனை சேகரிக்கும் பணியினைத் தொடர ஆரம்பித்தேன். அப்போது, ஸூரத்துத் தவ்பாவின் இறுதி ஆயத்தான லகத் ஜாஅகும் ரசூலுன் மின் அன்ஃபுஸிகும் என்ற வசனத்தை குஸைமா அல்லது அபூ குஸைமா என்ற நபித்தோழரிடம் நான் கண்டு, அதனை அந்த வசனத்தை அதற்குரிய சூராவில் சேர்த்தேன். இவ்வாறு நான் தொகுத்துக் கொடுத்த குர்ஆனின் பிரதி அபூபக்ரு (ரலி) அவர்களிடம் இருந்தது. அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்ததன் பின்னர், அது உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்த பின் அது உமர் (ரலி) அவர்களின் மகளார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது. அறிவிப்பவர் ஜைது இப்னு ஃதாபித் (ரலி) நூல் புகாரி-6768.


இவ்வாறு அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), ஜைது இப்னு ஃதாபித் (ரலி) அவர்கள் மூவரும் ஆலோசனை செய்து குர்ஆனின் பிரதியைத் தொகுத்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஸஹாபாக்களுக்கு ஓதிக் கொடுத்த கிராஅத் முறைகளின் படி அந்தந்த ஸஹாபிகள் ஓதி வந்தார்கள்.

இதன்பின் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் இன்னும் இஸ்லாமியப் பேரரசு விரிவடைந்த காலத்தில் அர்மீனிய்யா, அதர்பைஜான் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டன. அப்போது மீண்டும் ஒரு முறை புதிதாகக் குர்ஆனைத் தொகுக்கும் ஓரு அத்தியாவசியம் உண்டாயிற்று. அது என்னவெனில்...

وعن زيد بن ثابت أنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ مِنْ غَزْوَةٍ غَزَاهَا، فَلَمْ يَدْخُلْ بَيْتَهُ حَتَّى أَتَى عُثْمَانَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَدْرِكْ النَّاسَ! فَقَالَ عُثْمَانُ: وَمَا ذَاكَ؟ قَالَ : غَزَوْت فَرْجَ أَرْمِينِيَةَ، فَحَضَرَهَا أَهْلُ الْعِرَاقِ وَأَهْلُ الشَّامِ، فَإِذَا أَهْلُ الشَّامِ يقرؤون بِقِرَاءةِ أُبَيٍّ، فَيَأْتُونَ بِمَا لَمْ يَسْمَعْ أَهْلُ الْعِرَاقِ، فَيُكَفِّرُهُمْ أَهْلُ الْعِرَاقِ، وَإِذَا أَهْلُ الْعِرَاقِ يقرؤون بِقِرَاءةِ ابْنِ مَسْعُودٍ، فَيَأْتُونَ بِمَا لَمْ يَسْمَعْ أَهْلُ الشَّامِ، فَيُكَفِّرُهُمْ أَهْلُ الشَّامِ. قَالَ زَيْدٌ: فَأَمَرَنِي عُثْمَانُ أَنْ أَكْتُبَ لَهُ مُصْحَفًا.

ஹுதைஃபத்துல் யமானீ (ரலி) அவர்கள் ஒரு யுத்தகளத்தில் இருந்து திரும்பி வந்தார்கள். தமது வீட்டிற்குச் செல்லாமல் நேராக உதுமான் (ரலி) அவர்களிடம் வந்து, அமீருல் முஃமினீன் அவர்களே, மக்களைப் புரிந்துகொள்ளுங்கள், என்றார்கள். உதுமான் (ரலி) அவர்கள், என்ன செய்தி? என்று கேட்டார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், நான் அர்மீனியப் பிரதேசத்தில் நடந்த போரில் கலந்து கொண்டு வந்துள்ளேன். அதில் ஈராக் நாட்டைச் சார்ந்த முஸ்லிம்களும், ஷாம் நாட்டைச் சார்ந்த முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். ஷாம் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களோ, உபை இப்னு கஅப் (ரலி) அவர்களது கிராஅத்தைப் பின்பற்றிக் குர்ஆன் ஓதுகிறார்கள். ஈராக் நாட்டைச் சார்ந்தவர்கள் கேட்காத முறைப்படி அவர்கள் ஓதுகின்றார்கள். எனவே, ஈராக் நாட்டுக் காரர்கள் ஷாம் நாட்டினர் ஓதும் முறையை மறுத்துரைக்கிறார்கள். ஈராக் நாட்டைச் சார்ந்தவர்களோ இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களது கிராஅத் முறைப்படி ஓதுகின்றார்கள். ஷாம் நாட்டினர் கேட்டிராத முறையில் அவர்கள் குர்ஆன் ஓதுகின்றார்கள். எனவே, ஷாம் நாட்டினர் ஈராக் நாட்டினர் குர்ஆன் ஓதும் முறையை மறுக்கிறாக்ள், என்று கூறினார்கள். அப்போது, உதுமான் (ரலி) அவர்கள் என்னிட்ம் அவர்களுக்காகக் குர்ஆனை எழுதித்தருமாறு கட்டளை இட்டார்கள். (அறிவிப்பவர் ஜைது இப்னு ஃதாபித் ரலி நூல் ஜாமிஉல் குர்ஆன் லி தஃவீலி ஆயில் குர்ஆன், இமாம் தபரீ)

உதுமான் (ரலி) அவர்கள் ஹுதைஃபத்துல் யமானீ (ரலி) அவர்களின் முறையீட்டின் பின்னர் தொகுக்குமாறு ஜைது இப்னு ஃதாபித் (ரலி) அவர்களிடம் பணித்தது அப்போது ஸஹாபாக்கள் ஓதி வந்த பல்வேறு கிராஅத் முறைகளை. முன்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களது கருத்தின் படித் தொகுக்கச் சொன்னது குர்ஆனின் வசனங்களை.

உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்ட பொழுது பல விதமான கிராஅத் முறைகளால் மக்கள் குழப்பமடைந்து விடாமல் இருப்பதற்காக அவற்றில் புழக்கமாக மக்கள் ஓதும் வகையின் படி அமைந்த கிராஅத்துகளின் படி குர்ஆன் தொகுக்கப்பட்டது. அனைத்து வகைக் கிராஅத்துகளிலிருந்தும் பத்து வகைக் கிராஅத்துகள் தொகுக்கப்பட்டன. இவை ‘அல்கிராஅத்துல் முத்தவாத்திரஹ்’ என்று கூறப்படும்.


இந்தப் பத்து வகை கிராஅத்து முறைகளும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கீழ்க்கண்ட எட்டு ஸஹாபிகளும் கற்றுக் கொண்ட கிராஅத் முறைப்படி தொகுக்கப்பட்டன.
1. உதுமான் இப்னு அஃப்பான் (ரலி)
2. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
3. உபை இப்னு கஅபு (ரலி)
4. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)
5. ஜைது இப்னு ஃதாபித் (ரலி)
6. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
7. அபுத் தர்தாஉ (ரலி)
8. உமர் இப்னுல் கத்தாபு (ரலி)

இவர்கள் அல்லாத மற்ற ஸஹாபாக்கள் ஓதிவந்த கிராஅத் முறைகள் அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ் என்று கூறப்படும். இந்த இரண்டாம் வகைக் கிராஅத்துகளில் சில அரபு மக்களின் மொழிஉச்சரிப்புக் கேற்ற படி ஓதப்பட்டு வந்தன. இன்னும், சில குர்ஆனின் வார்த்தைகளின் பொருளை விளங்குவதற்காகக் குறிப்பிடப்பட்டு வந்தன. இவ்வகையைச் சார்ந்தது தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘லியஃரிஃபூனி’ என்று ஓதிக் காட்டியது.

இந்த இரண்டாம் வகைக் கிராஅத்தான ‘அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ்’வின் படி ஓதப்படும் குர்ஆன் வசனங்களைத் தொழுகையில் ஓதுவதும், இன்னும் திலாவத் எனும் குர்ஆனை ஓதும் பொழுதோ ஓதக் கூடாது. ஆயினும், அவ்வகைக் கிராஅத்துகளைக் குர்ஆனின் பொருளைக் கூறுவதற்காகவும், குர்ஆனின் மொழி, இலக்கண முறைகள் ஆகியவற்றைக் கற்கவும், கற்பிக்கவும், சட்டங்கள் தொடர்பான கருத்துக்களைப் பெறவும் இந்தக் கிராஅத்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது மார்க்க வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாகும்.

எனவே,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ (الذاريات:56)
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56) என்ற வசனத்தில், இப்னு அப்பாஸ் (ரலி) லியஃபுதுனி என்பதற்கு “லியஃரிஃபூனி” என்று ஓதிக்காட்டினார்கள் என்ற வார்த்தைக்கு அதன் வசனத்தின் பொருளை விளக்கிக் கூறுவதற்காக ஓதிக்காட்டினார்கள் என்று புரிய வேண்டும்.

தாங்கள் கூறுவதுபோல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பெயரால், அடித்து விடப்பட்டுள்ளது என்பது ஒரு வேளை உண்மையாக இருப்பினும், முஜாஹிது, இப்னு ஜுரைஜ் ஆகியோர் கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தங்களது சொந்தக் கருத்து என நான் நினைக்கினேறேன்.

قال محمد بن إسحاق حدثنا أبان بن صالح عن مجاهد ، قال عرضت المصحف على ابن عباس ثلاث عرضات من فاتحته إلى خاتمته أوقفه عند كل آية منه وأسأله عنها .

وقال ابن جرير حدثنا أبو كريب ، حدثنا طلق بن غنام عن عثمان المكي ، عن ابن أبي مليكة قال رأيت مجاهدا سأل ابن عباس عن
تفسير القرآن ومعه ألواحه قال فيقول له ابن عباس اكتب حتى سأله عن التفسير كله . ولهذا كان سفيان الثوري يقول إذا جاءك التفسير عن مجاهد فحسبك به .

“நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனை சூரா ஃபாத்திஹா முதல் அதன் இறுதி வரை மூன்று முறை ஓதிக்காட்டியுள்ளேன். அப்படி ஓதும்பொழுது, ஒவ்வொரு வசனத்திலும் நிறுத்தி நிறுத்தி அவர்களிடம் அந்த வசனத்தைப் பற்றிக் கேட்டுள்ளேன்”, என்று முஜாஹிது (ரஹ்) அவர்கள், கூறியதாக அபான் இப்னு ஸாலிஹு அவர்கள் கூறியதாக முஹம்மது இப்னு இஸ்ஹாக் அவர்கள் கூறுகின்றார்கள்.

“இன்னும், நான் முஜாஹிது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கங்களைக் கேட்கக் கண்டேன். அவற்றை எழுதுவதற்கான பலகைகள் அவர்களுடன் இருந்தது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், முஜாஹிது (ரஹ்) அவர்களிடம் எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறே அவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கங்கள் முழுவதையும் கேட்டு எழுதிக் கொண்டார்கள்”. அறிவிப்பவர்-இப்னு அபீ முலைக்கா நூல் இப்னு ஜரீர்.

இதனால் தான் சுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், “முஜாஹிது அவர்களிடம் இருந்து குர்ஆனின் விளக்கங்க்ள் கிடைத்தால், உனக்கு அது போதும்”, என்று கூறுபவர்களாக இருந்தார்கள். இந்த அறிவிப்புகளும் இப்னு கஃதீர் விரிவுரையின் முன்னுரையில் குர்ஆனின் பொருளை விளங்குவதன் அடிப்படை விதிகள் பற்றிய இடத்தில் வருகின்றன.

இறைவனை வணங்குவது என்பது இறைவனைப் பற்றி அறியாமல் முழுமை பெறாது. ஆதலினால், “ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை” என்ற வசனத்தில் வரும் “என்னை வணங்குவதற்கு” என்ற வார்தைக்கு “என்னை அறிவதற்கு” என்று பொருள் கூறுவதில் தவறு காண இயலாது என்பது எனது கருத்து.

அல்லாஹ்வும், அவன் தூதரும் மிகவும் அறிந்தவர்கள்.