ஹுதா டிவி பற்றி சிலர் அல்லது பலர் அறிந்திருக்கலாம்.
உலகக் கல்வி அறிவும் இஸ்லாமிய மார்க்க ஞானமும் பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் பலரையும் கொண்டு இதன் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.
இன்றைய நவீன சூழலில், பல முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்க வழியில் செல்லும்போது சில சிக்கல்களையும் பல சந்தேகங்களையும் சந்திக்கிறார்கள். அவற்றுக்கான விடை தெரியாமல் தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவவும், குர்ஆன் வசனங்களின் சரியான மொழிபெயர்ப்பையும் விளக்கத்தையும் பெறவும் அரபு மொழியைக் கற்றுக்கொள்ளவும் ஹுதா டிவி நிகழ்ச்சிகளைத் தருகிறது.
http://www.huda.tv/about-huda-tv
*
மார்ட்கேஜ் என்பது வட்டி கொடுப்பது என்பதால் அது ஹராம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் இதன் உண்மை நிலை என்ன?
அதை விரிவாகவும் விளக்கமாகவும் ஹூதா டிவியில் கூறுகிறார் சேக் ஆசிம் அல்ஹகீம்.
யார் இந்த சேக் ஆசிம் அல்ஹகீம்?
இஸ்லாம் மார்க்கத்தை ஆங்கிலம் வழியாக உலகெங்கும் பரப்புவதில் முதன்மையான சவுதி அரேபியர்களில் இவரும் ஒருவர்.
ஜெத்தாவில் மொழியியல் பட்டப்படிப்பும், மக்காவில் இஸ்லாமிய மார்க்க உயர் கல்வியும் படித்தவர்.
இவர் பல இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஊடகங்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகைச் சொற்பொழிவுகளை பள்ளிவாசல்களிலும் தருகிறார்.
http://www.huda.tv/huda-tv-programs/huda-stars/355-shaikh-assim-l-alhakeem
*
இஸ்லாம் மார்க்கத்தில் மார்ட்கேஜின் நிலை பற்றி அறிந்துகொள்ள நான் பல ஆய்வுகளை மேற்கொண்டேன். பெருன்பான்மையான இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மார்கேஜ் ஹராம் அல்ல என்றே கூறுகின்றனர்.
நுணுக்கமாகப் பார்த்தால், வாடகை கொடுப்பதுதான் உண்மையிலேயே வட்டி. அதுதான் ஹராமானதாக ஆகிவிடும் என்ற கருத்தும் இருக்கிறது. அதை இன்னொரு பதிவில் நாம் விரிவாகக் காணலாம் இன்சால்லா!
இப்போது ஹுதா டிவியில் சேக் ஆசிம் அல்ஹகீம் என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்:
http://www.youtube.com/watch?v=fkfm0dJV3ks&feature=related
*
ஆகவே நண்பர்களே, மார்ட்கேஜ் ஹராம் என்று தவறாக நினைத்துக்கொண்டு இஸ்லாமியர்களின் வளர்ச்சியை உலக அரங்கில் கீழ்நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்.
மார்ட்கேஜ் ஹராம் என்று நினைத்தால் வாடகை கொடுப்பதும் ஹராம் என்றும் ஆகிவிடும்.
பணத்தைக் கொண்டு பணத்தை லாபமாகப் பெற்றால் அது வட்டி. ஹராம் ஆகும்.
பொருளைக் கொண்டு பெறும் எதுவும் வணிகமாக ஆகுமே தவிர வட்டி ஆகாது. அது ஹலால்.
No comments:
Post a Comment