Friday, September 14, 2012

சில கதைகளும் சில கேள்விகளும் 002

ஓர் நகரம் புதிதாக உருவாக்கப்பட்டது. அது இன்றைய பெரு நகரங்களின் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருந்தது. அங்கே 500,000 குடும்பங்கள் வேலை நிமித்தமாகக் குடிபெயர்ந்தார்கள். அதில் 300,000 குடும்பங்கள் முஸ்லிம் குடும்பங்கள். 200,000 குடும்பங்கள் முஸ்லிம் அல்லாத வேற்று மதத்தினர். அவர்கள் அனைவரும் அலுவலகங்களில் பணி செய்பவர்கள்.

முஸ்லிம் அல்லாத குடும்பங்கள், தங்களின் வருமானத்தைக் கொண்டு தவணை முறையில் 200,000 டாலர் பெருமதியுள்ள வீடுகளை வாங்கிக்கொண்டர்.

300,000 முஸ்லிம் குடும்பங்கள், அந்த நகரத்தின் இஸ்லாமிய அறிஞர் கூறினார் என்று தவணை முறையில் வீடு வாங்குவதைக் கைவிட்டனர். வாடகைக்கு வீடு எடுத்து நிம்மதியாக வாழத்தொடங்கினர்.  தவணை முறையில் வீடு வாங்கினால் ஹராம் என்று அந்த இஸ்லாம் அறிஞர் போதித்தார்.

தவணை முறையில் வீடு வாங்கினால் அது ஹராம் இல்லை என்று உலகில் உள்ள இஸ்லாமிய அறிஞர்களுள் பலர் கூறினார்கள். ஆனால் சந்தேகம் காரணமாகவும் பயம் காரணமாகவும் 300,000 முஸ்லிம் குடும்பங்களும் அவர்கள் சொல்வதைக் கேட்காமல் தங்களுடன் இருக்கும் சொந்த ஊர் இஸ்லாமிய அறிஞர் கூறியதை மட்டுமே கேட்டுக்கொண்டார்கள்.

25 ஆண்டுகள் இப்படியாய்க் கழிந்தன.

முஸ்லிம் அல்லாதவர்கள் வாங்கிய 200,000 டாலர் வீடுகள், 25 வருடங்கள் கழிந்ததால் ஒரு மில்லியன் டாலர் வீடுகளாய் ஆயின. அவர்களின் பிள்ளைகளை உயர் கல்விக்காக உயர்ந்த பல்கலைக் கழகங்களில் சேர்த்தார்கள். அந்த நகரத்தையே விலைக்கு வாங்கும் வல்லமையைப் பெற்றார்கள். கல்வியிலும் செல்வத்திலும் உயர்ந்த இடத்தை இந்த 25 ஆண்டுகளில் அவர்கள் அடைந்திருந்தார்கள்

ஆனால் 300,000 முஸ்லிம் குடும்பங்கள் 25 வருடங்களுக்கு முன் வரும்போது எப்படி இருந்தார்களோ அதே போலவே இருந்தார்கள். சொந்தமாக வீடு இல்லை. பிள்ளைகளை  உயர் கல்வியில் சேர்க்க போதுமான பணம் இல்லை.

இதனால் முஸ்லிம் அல்லாதவர்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது, முஸ்லிம் குடும்பம் செல்வத்தாலும் கல்வியாலும் மிகவும் தங்கியவர்களாய் இருந்தார்கள்.

மேலும், முஸ்லிம்களில் சில குடும்பத் தலைவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் குடும்பம் வருமானம் இல்லாமலும் சொத்துக்கள் இல்லாமலும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.



இனி சில கேள்விகள்:

1. தவணை முறையில் வீடு வாங்குவது  ஹராம் என்று

           இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளை சரியாக
           அலசிப் பார்க்காமல் இஸ்லாமிய அறிஞர் சொன்னது சரியா?
  
2. ஏதோ ஓர் இஸ்லாமிய அறிஞர் சொன்னார் என்பதற்காக

           அலசி ஆராய்ந்து பார்க்காமல் முடிவெடுத்த 
           குடும்பத் தலைவர்கள் செய்தது சரியா?

3. 1400 ஆண்டுகள் கடந்தும் முறையான தெளிவான
           இஸ்லாமிய வாழ்க்கை முறைகளைச் சொல்லித் தராமல்
           தவறான கருத்துக்களை முன் வைக்கும் உலமாக்கள்
           இமாம்கள் செயல்கள் சரியா?

4. இஸ்லாமியர்களைக் கல்வியிலும் செல்வத்திலும்

           உயர்ந்த நிலையை அடையக்கூடாது என்று
           அவசியம் கருதி ஒவ்வொன்றுக்கும் விலக்கு தரும் 
           படைத்த இறைவன் தடுப்பானா?

5. பொருளாதாரத்திலும் கல்வியிலும் குடும்பத் தலைவர்கள்
            பின் தங்கியவர்களாய் ஆகும்போது உலக இஸ்லாமிய சமூகத்தின்
            நிலை தாழ்வானதாக ஆவதால், உலகை எதிர்த்து நிற்கும் சக்தி
            குறைவதை இஸ்லாமியர்களை முன்னேற்ற நினைக்கும்
            இஸ்லாம் விரும்புமா?

6. முகம்மது நபி அவர்கள் இருளில் கிடந்த மக்களை
           முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்கள்
           உலக அரங்கில் வலிமையுடையவர்களாய் ஆக்கினார்கள்
           அவரின் கண் மறைவுக்குப் பின் இப்படி இஸ்லாமியர்கள்
           பின் தங்கிய சமூகமாய் ஆவதைப் அவர் இதயம் பொறுக்குமா?

7.  இவற்றுக்கெல்லாம் விடையாக உங்கள் மனதில் தோன்றும்
           எண்ணம் எது?

8.  குர்ஆன் மற்றும் ஹதீசுகளை வாசிக்காமல் வாசித்ததை
           ஆய்ந்து நோக்காமல் யாரோ சொல்வதைக் கேட்டே
           நடப்பவர்களால் சரியான இஸ்லாமிய வழியில்
           செல்ல முடியுமா?
           






4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும், தவணை முறையில் வீடோ, அல்லது வாகனமோ 'இஸ்லாமிய' வங்கி மூலம் வாங்கும் போது, நீங்கள் வாங்கும் பெறுமதியை விட சிறு தொகை அதிகமாக கட்டவேண்டி ஏற்படுகிறது, இத்தொகை நீங்கள் திருப்பி செலுத்தும் காலத்திற்கு ஏற்ப கூடவோ குறையவோ கட்டவேண்டி ஏற்படும், இது சரியா?

    ReplyDelete
  2. அன்பின் அபுதாலிப்,

    சரி.

    அதோடு அது இஸ்லாமிய வங்கி என்றில்லை. எந்த வங்கியானாலும் இதே நிலைதான்.

    ReplyDelete
  3. வட்டி சேர்ந்த எந்த தவனை முறையும் கூடாது
    என்பது என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. அன்பின் மு.செ.மு.சபீர் அகமது.

      http://anbudanislam2012.blogspot.ca/2012/09/blog-post.html

      இந்த இணைப்பைப் பாருங்கள். சவுதியின் ஹுதா டிவியில் வந்தது.

      அன்புடன் புகாரி

      Delete