Sunday, October 28, 2012

மைமி மா என்றொரு முஸ்லிம் பெண்

வியட்நாமில் புத்த மதத்தில் பிறந்த மைமி மா வியட்நாம் போர் காரணமாக நான்கு வயதிலேயே அனாதை ஆக்கப்பட்டார்.

தன் சகோதரியின் மூலம் கிருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்டு ஆப்பிரிக்கா சென்றார்.

அங்கே 1980களில் பள்ளியில் பயிலும்போது முஸ்லிம் மாணவிகளின் மூலம் இஸ்லாம் மார்க்கம் பற்றி அறியும் வாய்ப்பினைப் பெற்றார்.

அதன் பின்னர், தன் சகோதரியுடன் அமெரிக்காவுக்குச் சென்றபோது, மைமி மா பதின்ம பருவத்தை அடைந்திருந்தார்.

தொடக்கத்தில், முஸ்லிம்களைப் பற்றித் தாழ்வான கருத்தைக் கொண்டிருந்த மைமி மா, ஆப்ரிக்காவின் முஸ்லிம் நாடுகளில் இருந்தபோது கிடைத்த உண்மையான அனுபவத்தால், முஸ்லிம்களைப் பற்றியும் அவர்களின் வேதமான குர்ஆனைப் பற்றியும் சரியான கருத்தைப் பெற்றார்.

தன் 18ம் வயதில் ‘இண்டியானா போர்டிங் ஸ்கூல்’ என்ற அமெரிக்கப் பள்ளியில் பயிலும்போதுதான் இஸ்லாமிய வேதத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கினார்.

பெண்ணுரிமை என்பது பிறமதங்களில் பேசப்படுகின்றது ஆனால் அது இஸ்லாத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை அறிந்துகொண்டார். 1988 ஆம் ஆண்டில் இஸ்லாத்தில் இணைந்தார்.

இதனால் அவருடைய சகோதரியாலேயே வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். எனவே, அமெரிக்க-இஸ்லாமியத் தொடர்பு இயக்கமான CAIR (Council of American-Islamic Relations) அலுவலகத்தை அணுகினார்.

அவர்களின் வழிகட்டலுடன், தானாகவே தனது இஸ்லாமிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, முகம்மது என்ற முஸ்லிம் கணவருடன் அமைதியாக வாழ்ந்துவருகின்றார்.

தற்போது West Palm Beach என்ற Florida மாநிலத்து நகரில் கணவருடன் வசிக்கும் மைமி மா, தலைத் துப்பட்டாவுடன் வெளியில் சென்று வரும்போது, அவரை அமெரிக்கர் என்றோ ஆசியன் என்றோ மக்கள் கருதுவதில்லை. மாறாக, அவரை அரபு நாட்டுப் பெண் என்றுதான் கருதுகின்றனராம்!

தன்னை நோக்கி விடுக்கப்படும் வினாக்களுக்குத் தகுந்த விடைகளைத் தயாராக வைத்துள்ளார் இவர். இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையில்லை என்று கூறும் எவருக்கும் தகுந்த வாயாப்புக் கொடுக்கும் அறிவையும் ஆற்றலையும் பெற்றுள்ளார்.

குர்ஆனை மேலோட்டமாகப் படிக்கும் ஒருவர், பெண்ணுரிமை பற்றி எதிர்மறை வாக்குவாதம் செய்ய வந்தால், “திறந்து காட்டுங்கள்! எங்கே இருக்கிறது, எங்களுக்கு உரிமையில்லை என்று? சொத்துரிமை இல்லையா? கல்வி கற்கக் கூடாதா? மக்களை -குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தை- வழி நடத்துவதில் தலைமை வகிக்கக் கூடாதா? தனது பொருளாதாரத்தைப் பெண்ணொருத்தி நிர்வாகம் செய்யக் கூடாதா? ஆண்களுக்குள்ள உரிமைகளுள் எதனையும் பெண்கள் பெறக் கூடாதா? சொல்லுங்கள், பார்ப்போம்!” என்று சவால் விடும் மைமி மா, விவேகத்தின் விடியலாக விளங்குகின்றார்!

பெண்ணுரிமையே மைமி மாவின் மாற்றத்திற்குப் பிரதான காரணமாகும்.

நோக்கம் எதுவாயிருந்தாலும், மத மாற்றத்தின் பின் சொந்த-பந்தங்களால் ஒதுக்கப்படுவது உறுதி. அதுதான் மத மாற்றத்தின் மிகப் பெரிய பாதிப்பு என்கிறார் மைமி மா.

“எனினும், எல்லாம் வல்ல இறைவனைப் பற்றி நான் எடுத்த முடிவுக்கு முன்பாக, உறவு முறைகளால் ஒதுக்கப்பட்ட நிலை எம்மாத்திரம்? அது அவ்வளவாக என்னைப் பாதிக்கவில்லை!” என்கிறார்.

“ரமளான் ஒரு சுய பரிசோதனைக்கான வாய்ப்பு. ஓர் ஆன்மீகப் பயிற்சிக் கூடம். இம்மாதத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் நோன்புக் கடமையை நிறைவேற்றுகின்றனர் எனும்போது, நம்மையும் அறியாமல், இயல்பாகவே ஒரு நம்பிக்கையும் ஓர் ஆன்மீக ஆறுதலும் கிட்டுகின்றது.

பகல் முழுதும் உண்ணாமல், பருகாமலிருந்து, இரவின் தொடக்கத்தில் இன்பத்தோடு நோன்பைத் துறக்கும் அந்த மகிழ்ச்சி, இந்த உலகில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது!” என்கிறார் மைமி மா.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிவதும், குறிப்பாக ஏழைகளை மகிழ்விப்பதும், வாழ்க்கையின் முக்கியச் செயல்பாடுகளைப் பற்றித் திட்டமிடுவதும் இந்த மாதத்தில் மைமி மாவைக் கவர்ந்தவையாகும்.

நன்றி:
http://www.usislam.org/converts/elizabeth.htm
http://adirainirubar.blogspot.in/2012/10/17.html#comment-form

Saturday, October 27, 2012

இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள்

முகம்மது நபி வாழும்போதே குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பது எதிரிகளுக்குத் தெரிந்தது. ஆனால் ஹதீதுகளோ எழுத்து வடிவில் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் வாய்மொழி அறிவிப்புகளாகவே மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்தன. எனவே ஹதீத் என்ற பெயரில் இட்டுக்கட்டி பரப்பினால் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறலாம் என்று எண்ணி இஸ்லாத்தின் எதிரிகள் இட்டுக் கட்டினார்கள்.

இந்தப் பொய்களை அறிஞர்கள் களையெடுக்கும் முயற்சியில் அன்று இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை.

இதோ சில இட்டுக்கட்டிய ஹதீதுகள்:

யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம்

நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப் பேசும்.

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். எந்த நோக்கத்திற்காக கத்தரிக்காய் சாப்பிடுகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறும்.

நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக இருந்திருக்கும்.

ஆயிஷாவே! சூரிய வெளிச்சத்தால் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை ஏற்படுத்தும்.

தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.

அழகான முகத்தைப் பார்ப்பது ஒரு வணக்கமாகும்.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

உப்பை விட்டுவிடாதீர்கள். உப்பில் எழுபது நோய்களுக்கு நிவாரணம் உள்ளது.

எந்த ஒரு மாதுளம் பழத்திலும் அதன் ஏதோ ஒரு விதையில் சொர்க்கத்தின் தண்ணீர் இருக்கும்.

ஆகாயத்தில் உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்!

160 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும்.

நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும்.

மோதிரம் அணிந்து தொழுவது, மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது.

தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது.

ரஜப் மாத நோன்பு பற்றி கூறப்படும் அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.

ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில் நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரமற்றவை

ஷஃபான் பதினைந்துக்கான தொழுகை, ரஜப் பதினைந்துக்கான தொழுகை, மிஃராஜ் இரவுத் தொழுகை, லைலதுல் கத்ர் இரவுக்கான தொழுகை குறிப்பிட்ட பகல்

குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள் ஆகிய அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.

முகம்மது என்ற பெயரைக் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களைத் தடவுதல்

மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மத குருமார்கள்

மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது. இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும்

போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவன் எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மை அல்லாஹ் தருவான்.

சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்க்கவாசிகள் சந்திப்பார்கள். வேண்டியதைக் கேளுங்கள்

என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது என்று தெரியாததால் உலமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று

உலமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஒரு ஆலிமோ அல்லது ஆலிமுக்குப் படிக்கும் மாணவரோ ஒரு ஊரைக் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள்

வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான்.

ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடச் சிறந்தது.

ஒரு ஆலிமை யாரேனும் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான்.

யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னைச் சந்தித்தவர் போலாவார். உலமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர்

போன்றவராவார்.

ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஆயிரம் ஷஹீதுகளின் இரத்தத்தை விடச் சிறந்தது.

மன்னர்களுக்குத் தண்டனை இல்லை மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை

மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்.

அலீயைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்

துருக்கியர், சூடானியர், அபீசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.

ஒரு மொழியைப் புகழ்ந்தும், இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது பற்றிய அனைத்தும் பொய்யானவை

இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் வேண்டுதல் கேட்டதாகக் கூறுவது ஆதாரமற்றது..

சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதியாக வெளியே வந்தது என்பது கட்டுக்கதை.

மறைந்த சூரியன் அலீ அவர்களுக்காக மீண்டும் உதித்தது.

முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார்.

உண்ணும் போது பேசக் கூடாது.

நபிகள் நாயகத்தின் வியர்வையிலிருந்து தான் ரோஜா படைக்கப்பட்டது.

முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.

தனிமையில் தான் ஈமானுக்குப் பாதுகாப்பு.

வாதத் திறமையுள்ளவர்களிடம் நல்ல செயல்கள் இருக்காது.

இவைபோலவே இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளை நீக்க முயன்ற அன்றைய நாள் அறிஞர்களின் கவனத்திலிருந்து விடுபட்ட ஹதீதுகள் இன்று நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்

பெண்களின் தொழுகை வரிசைகளில் கெட்டது முதாலவது வரிசையாகும்

சுவனத்திலிருந்து இறங்கி வந்தபோது, தம் முன்னோரான நபி மூஸா அவர்களை இடையில் சந்திக்க, அன்னார்,"முகம்மதே! உம் இறைவனிடமிருந்து பெற்றுவந்த அன்பளிப்பு யாது?" என்று கேட்டார். "ஐம்பது வேளைத் தொழுகை" என முகம்மதவர்கள் சொல்ல, அதற்கு மூஸா,"இதை உம் சமுதாயத்தினர் செய்ய ஆற்றல் பெற மாட்டார்" எனக் கூற, இறைவனிடம் மீண்டும் சென்ற நபிக்கு, ஐந்தைந்தாகக் குறைத்துப் பின்னர் ஐந்தாக வழங்கினான். 

ஆங்கிலமும் தமிழும் பைத்தியக்காரர்களின் மொழி


ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி (English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார்.

அதை நிரூபிக்கும் முகமாக ஒரு காகிதத்தை எடுத்து GHOTI என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். எல்லோரும் கோட்டி என்று உச்சரித்தார்கள். ஆனால் பெர்னாட்ஷா சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH என்று.

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஆகிய GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு F, அதேபோல் WOMEN என்கிற வார்த்தையில் O என்கிற எழுத்து I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன் STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH என்று படிக்கலாமா கூடாதா என்றும், இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா? இல்லையா? என்றும் கேட்டாராம்.

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி என்று பெர்னாட்சா சொல்லலாம். ஆனால் அவருக்கே தெரியும் எந்த மொழியிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு என்று.

இதோ தமிழின் பைத்தியக்காரத்தனம். உண்மையில் இவை பைத்தியக்காரத்தனமா? அல்லது மிகுந்த சுவையுடையவையா என்பதை நேயர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.

புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது.

மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்

இதையே வேறு விதமாகவும் அழகான அருந்தமிழில் தமிழர்கள் கட்டினார்கள்

புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
மன்னன் : தருகிறேன்.

புலவர்: அறுநூறு தரமுடியுமா?
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எண்ணூறு மகிழ்ச்சியாக இருக்கும்.
மன்னன்: தருகிறேன்.

ஆனால், மன்னன் கொடுத்தது நூறு ரூபாய்தான்.

புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றீறே?
மன்னன்: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: அறுநூறு தருகிறேன் என்றீறே?
மன்னன்: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றீறே?
மன்னன்: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
மன்னன்: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

புலவரும், மன்னனே உங்கள் தமிழ்முன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.

மன்னனும், புலவரே, யாம் தமிழுடன் விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

நால்வகை ஹதீதுகள்

ஒரு ஹதீதை ஏற்கலாமா ஏற்கக்கூடாதா என்ற பரிசீலனையில் ஹதீதுகள் இஸ்லாமிய அறிஞர்களால் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன.

1. ஆதாரப்பூர்வமானவை - ஸஹீஹ்
2. இட்டுக்கட்டப்பட்டது - மவ்ளூவு
3. விடப்படுவதற்கு ஏற்றது - மத்ரூக்
4. பலவீனமானது - ளயீப்

முதல் வகை ஹதீதுகளை மட்டுமே முஸ்லிம்கள் ஏற்று நடக்க வேண்டும். மற்ற மூன்று வகை ஹதீதுகளையும் விட்டுவிடவேண்டும்.

"தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்று முகம்மத் நபி கூறினார் என்பது திர்மிதீயில் உள்ள முதலாவது ஹதீத்.

1. நபிகள் நாயகத்திடமிருந்து நேரடியாக இதைக் கேட்டவர் இப்னு உமர் என்ற நபித்தோழர்.
2. இப்னு உமரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர் முஸ்அப் பின் ஸஃது.
3. முஸ்அப் பின் ஸஃதுவிடமிருந்து கேட்டவர் ஸிமாக்.
4. ஸிமாக் என்பாரிடமிருந்து கேட்டவர்கள் இருவர். 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா
5.1. இஸ்ராயீலிடமிருந்து கேட்டவர் வகீவு
5.2. அபூ அவானாவிடமிருந்து கேட்டவர் குதைபா
6.1. வகீவுவிடமிருந்து கேட்டவர் ஹன்னாத்
6.2. குதைபாவிடமிருந்து கேட்டவர் திர்மிதீ
7. ஹன்னாத்திடமிருந்து கேட்டவர் திர்மிதீ

இந்த அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடர் ஒரு ஹதீதை ஆதாரப்பூர்வமானது என்று அறிவிக்க அவசியமானது.

இந்தச் சங்கிலித் தொடரில் உள்ளவர்கள் அனைவரும்

1. நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.
2. உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. நேர்மையில் சந்தேகமற்றவர்களாக இருக்க வேண்டும்
4. அவர்களுக்கு அறிவிப்பவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.

இவற்றில் தேரினால்தான் அதை ஆதாரப்பூர்வமான ஹதீதுகள் ஆகும்.

அத்துடன் மிக முக்கியமாக ஹதீதின் கருத்துகள் குர்-ஆனுக்கு முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.

அப்படி இல்லாமல். ஹதீதின் தரம் தெரியாமலா அந்த ஹதீத் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர், இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

நான்கு லட்சம் ஹதீதுகளை இமாம் புகாரி திரட்டினார். ஆனால் அவற்றுள் நான்காயிரத்துக்கும் சற்று அதிகமான ஹதிதுகளை மட்டுமே ஏற்கப்பட்டன.

அதாவது ஒரே ஒரு விழுக்காடு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்படியானால் எந்த அளவுக்குத் தீயவர்கள் ஹதீதுகளில் கலப்படம் செய்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.

இமாம் புகாரியைப் பொருத்தவரை தான் தொகுத்தவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை ஆதாரப் பூர்வமானவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவை என்ற கருத்தையே கொண்டிருந்தார்.

தவறான ஹதீதை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விசயம் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

அதுபோலவே, ஆதாரப்பூர்வமானவை என்று அறிவிக்கப்பட்ட ஹதீதுகள் கால ஓட்டத்தில் நம்பகத்தன்மை இல்லாதவை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.

அதற்கான முக்கிய அளவுகோள் குர்-ஆனோடு ஒப்பிட்டு அதன் கருத்துக்களை நோக்குவதுதான்.

குர்-ஆனோடு எந்த வகையில் முரண்பட்டாலும் அவற்றை மறுதளிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினுடைய கடமை.

 குர்-ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீதுகள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹதீதுகள் விடயத்தில் மெளனம் காத்து விட வேண்டும். 

ஹதீதுகள் முக்கியம் என்று குர்-ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

முஸ்லிமும் சாதிப்பெயரும்

அறியாமையுடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற பெயரின் காரணமாக எவரையும் ஓரங்கட்டி வைக்கும் அளவுக்கு எனது இறைவன் என்னை முற்போக்காளன் ஆக்கிவிடவில்லை. 

அன்புடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற சாதிப் பெயர்கள் நாம் வாழும் நிலப்பகுதியின் காரணமாக செய்யும் தொழிலைக் கொண்டு உருவானது.

மரைக்காயர் என்றால் மரக்கலராயர். மரக்கலராயர் என்றால் கப்பல் வணிகம் செய்பவர் என்று பொருள்.

இப்படியே ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதியைப் பிரித்தார்கள் பிராமணர்கள்.

தொழில் அடிப்படையில் உருவான பெயர்களை அதனால் நாம் மறுதளிக்கவேண்டும்.

உங்கள் குடும்பப் பெயர் அல்லது ஊர் பெயர் அல்லது புனைபெயர் என்று எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், தவறில்லை.

மரைக்காயர், ராவுத்தர் எல்லாம் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை.

சுன்னாவும் ஹதீதுகளும்

சுன்னா என்ற அரபிச் சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள்.

ஆரம்ப காலத்தில் முகம்மது நபியின் வாழ்க்கைமுறை குர்-ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள்.

தங்களின் சொந்தக் கருத்துக்களை முகம்மது நபி அவர்கள் கூறியவை என்றார்கள் அதாவது சுன்னா என்று கூறினார்கள்.

ஆதாரப் பூர்வமான அனைத்து ஹதீதுகளும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டியவைகளாகும். இருப்பினும் ஆதாரம் உள்ள ஹதீதுகளுக்கு மத்தியில் அவைகளின் தரத்திலும் வலிமையிலும் சில படித்தரங்களை ஹதீத்கலை வல்லுனர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

அன்றைய காலத்தில் நபி அவர்களைப் பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்களுக்கு சொன்னவர்கள் யார் யார் என்று அத்தனை பேர்களையும் சொல்லி முடித்தால்தான் அதை உண்மையான ஹதீத் என ஏற்பார்கள்.

இப்படி அறிவிக்கும் இந்த செய்திகளையும் வடிகட்டினார்கள். சில ஹதீதுகளை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள். இவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா என்று பார்ப்பார்கள். அப்படி இருந்தால் மட்டுமே அந்த ஹதீதை ஏற்பார்கள்.

இவர்களில் யாராது ஒருவர்

-பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா?

-ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்கூடியவர்களா?

-தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்கூடியவர்களா?

-மறதியினால் மாற்றிச் சொல்லக் கூடியவர்களா?

இப்படி பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.

ஒருவர் பொய் சொல்லக் கூடியவரா என்பதைக் கண்டுபிடிப்பது என்பது உண்மையில் இயலுமான காரியமாக இல்லை.

காலமெல்லாம் பொய் சொல்லாமல் ஏதோ ஒரு சமயத்தில் பொய் சொல்பவர்கள் உண்டு. சந்தர்ப்ப சூழலால் பொய் சொல்பவர்கள் உண்டு.

கட்டாயத்தால் பொய் சொல்பவர்கள் உண்டு.

நன்மையை விளைவிக்கும் என்று அவரே ஓர் முடிவினை எடுத்துப் பொய் சொல்பவரும் உண்டு.

எனவே இறைவனைத் தவிர வேறு எவராலும் ஒருவர் பொய் சொல்லக் கூடியவரா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது இயலுமான காரியமாக இல்லை.

ஆகவே To the best of our knowledge (நாங்கள் அறிந்தவரை) என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதன் அடிப்படையில் இருக்கும் தகவல்களைக் கொண்டு அவர்கள் அறிந்தவரை நியாயமான முறையில் முடிவெடுத்தார்கள்.

ஒரு செய்தியைக் கூட்டாமல் குறைக்காமல் சொல்ல வேண்டும் என்றால் அந்தச் செய்தியின் வார்த்தைகளும் எழுத்துக்களும் மாற்றாமல் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். பெரும்பான்மையான ஹதீதுகள் செவிவழிச் செய்தியாகவே வந்திருக்கின்றன.

அதுவும் 200 ஆண்டுகளுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அதுவும் படிப்பறிவே இல்லாத பெரும்பான்மையினரிடமிருந்து. இதில் மனிதப் பிழை நிகழ ஏராளமான வாய்ப்புகள் இருந்தன.

அறிவிப்பாளர்கள் அனைவரும் முஸ்லிம்களே என்றாலும், அவர்கள் நல்லவர்களே என்றாலும் பொய்யே சொல்லாதவர்கள் என்று பெயரெடுத்தவர்கள் என்றாலும் ஒரு செய்தியை பத்துப் பன்னிரண்டு தலைமுறைகளுக்குக் கடத்தும் போது அதில் ஒரு வார்த்தை மாறினாலும் பொருள் மாறும் நிலை இருந்தது.

ஆகவே இதையும் அவர்கள் அறிந்தவரை நியாயமான முறைவில் முடிவெடுத்து ஏற்றுக்கொண்டார்கள்.

Friday, October 26, 2012

ஆறு ஹதீத் நூல்களுக்கு முன்னும் பின்னும் எத்தனை நூல்கள்?

ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய ஆறு ஹதீத் நூல்களும் தொகுக்கப்பட்டன.

இவற்றுக்கு முன்னும் இதே காலகட்டத்திலும், வேறு பல ஹதீத் நூல்கள் "முஸன்னஃப்" என்றும் "முஸ்னது" என்றும் தொகுக்கப்பட்டன .

முஸன்னப் என்றால் தலைப்புகளின் வரிசைப்படி தொகுக்கப்பட்டவை. முஸ்னத் என்றால் அறிவிப்பாளர்களின் வரிசைப்படி தொகுக்கப்பட்டவை.

ஹதீதுகள் வேவ்வேறு நபித்தோழர்கள், தாபியீன்கள் மூலம் கிடைத்தன. தாபியீன்கள் என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுபவர்கள் என்று பொருள்.

இன்றைய ஆறு ஹதீத் நூல்களுக்கு 100 வருடங்கள் முந்தைய வேறு பல ஹதீத் நூல்களில் முக்கியமான சிலவற்றின் பெயர்கள்:

1. மாலிக் - 92-179ஹி - மதீனா
2. ஷாபியீ - 150-204ஹி - மக்கா
3. அகமது - 164-241ஹி - ஈராக்
4. தவ்ரீ - 097-161ஹி - ஈரான்
5. அவ்சயீ - xxx-157ஹி - ஈராக்
6. இப்னு முபாரக் - xxx-181ஹி - ஈரான்
7. முகமதுபின் சலமா - xxx-167ஹி - ஈராக்
8. இப்னு உஜன்னா - 107-198ஹி - ஈரான்
9. இப்னு முஅம்மர் - xxx-191ஹி - ஏமன்

இமாம்களான ஹனபி, மாலிக், ஷாபியீ, ஹம்பலி போன்றோரில் ஹனபி எழுதிய ஹதீத் அல்லது மார்க்கச் சட்ட நூல்களில் இன்று எதுவும் தற்சமயம் காணப்படவில்லை என்றும் தற்சமயம் ஹனபி மத்ஹபு பெயரில் வரும் நூல்கள் அபூஹனீபா (ஹனபி) அவர்களால் எழுதப்பட்டவையல்ல என்றும், அவருக்குப் பின் வந்தவர்கள் தொகுத்தளித்ததாகும் என்றும், இந்நூல்களுக்கும் அபூஹனீபா அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தங்களது சொந்தக் கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என எண்ணி ஹனபி பெயரில் அறங்கேற்றியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாய் பல ஹதீத் நூல்கள் உருவாகி பலவகையில் வேறுபாடுகளை உடைய இஸ்லாமியச் சட்டங்கள் மக்களிடையே அரங்கேறிக்கொண்டிருந்தன.

இவற்றுள் எது உண்மையில் முகம்மது நபி அவர்கள் சொன்னது அல்லது செய்தது என்றும் முகம்மது நபி அவர்கள் சொல்லாதது செய்யாதது என்றும் எவரும் அறியாதவர்களாய்க் குழம்பி இருந்தனர்.

இதனால் இம்மாதிரியான ஹதீதுகளைத் தொகுத்து அவற்றுள் சரியானவற்றை எடுத்துக்கொண்டு பிழையானவற்றை நீக்கவேண்டிய தேவை உருவானது.

சுன்னா வழி முஸ்லிம்கள் மட்டும் இச்சேவையில் ஈடுபட்டு அவர்களின் அறிவிற்கும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் அவர்களின் ஐயங்களுக்குப் பொருந்தவும் ஹதீதுகளை நீக்கியும் அங்கீகரித்தும் இன்றைய ஹதீது ஆறு நூல்களை உருவாக்கினர்.

ஹதீதுகள் அரபு மொழியிலேயே இருந்தன. முதன் முதலில் சஹீகுல் புகாரி என்ற நூல்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டது.

இது முகம்மது நபி இறந்து சுமார் 1400 வருடங்கள் கழித்து 1959ல்தான் நிகழ்ந்தது.

இஸ்லாத்தின் அடிப்படை என்ன?

இஸ்லாத்தின் அடிப்படை என்ன?

அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிவதா அல்லது பூட்டிக்கொள்வதா?

எது உண்மையான நபிவழி?

பெண்களை இழிவு படுத்துவதா? பெண்களின் மேன்மையை உயர்த்திப் பிடிப்பதா?

எது இறைவனின் உபதேசம்?

பெண்ணை அடிமைப்படுத்தி வாழ்வதா அல்லது அவள் மேன்மைக்கும் மதிப்புக் கொடுப்பதா?

இஸ்லாத்தை அடிப்படைவாதிகளின் கூடாரம் என்றும் தீவிரவாதிகளின் தொழிற்சாலை என்றும் நிறுவுவதற்காக உலகில் பல தீய சக்திகள் முயல்கின்றன. அவர்களுக்கு வெற்றிதேடித்தருவதா உண்மையான ஈமான்?

பெண்களையும் வாழவிடுங்கள் என்றால் அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?

ஏன் இந்தனை ஆணாத்திக்கத்தனம் இந்த நாகரிக காலத்திலும்?

ஆனால் ஒன்று, இன்று முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேறிவருகிறார்கள்.

அவர்களே அவர்களுக்கான இடத்தை அடையும்போது ஆணாதிக்கம் செயலிழந்து போகும்.

உண்மையான புரட்சியின் மறுபெயராக எழுந்த இஸ்லாத்தை வளர்ப்போம், வளர்வோம்!

பெண்களை இஸ்லாம் அடங்காப்பிடாரிகளாய் ஆகுங்கள் என்று ஊக்குவிக்கவில்லை.

அடிமைகளாகிப் போங்கள் என்றும் பரிந்துரைக்கவில்லை.

குர்-ஆனில் பெண்களைத் தாழ்த்தும் ஒரு வசனம் உண்டா?

Wednesday, October 24, 2012

ஜிஹாத் என்றால் என்ன?

ஜிஹாத் என்றவுடன் அல்லாவை நிராகரிப்ப்பவர்களை எதிர்த்து போர் புரிவது என்று பெரும்பாலான மக்கள் தவறான எண்ணம் கொண்டுள்ளனர்.

ஜிஹாத் என்பது விரிவான பொருள் கொண்ட வார்த்தையாகும்.

மனதில் எழும் சைத்தான் தனமான உணர்வுகளை எதிர்த்துப் போரிட்டு நமது மனத்தை அடக்குதல்

அநீதியாளர்களை எதிர்த்துப் போரிடுதல்

இஸ்லாத்திற்கு எதிரான சடங்கு சம்பிரதாயங்களைக் கிள்ளியெறியப் பாடுபடுதல்

இதேபோல் எல்லா வகையான தீமைகளையும் எதிர்த்து மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும்தான் ஜிஹாத் எனப்படும்.

மனத்தின் தீய எண்ணங்களை எதிர்ப்பது மட்டும் அல்ல மனதை நல்வழியில் ஈடுபடுத்தும் விடா முயற்சியும் ஜிகாத் ஆகும்.

இறைமார்க்கத்தைக் கற்கும் வழியில் மனத்தைப் பக்குவப்படுத்துவது, இஸ்லாத்தின் கடமைகளைச் செய்வது, இறை நெறியின்பால் அழைக்கும் பணியில் மனத்தைப் பொறுமையுடன் ஈடுபடுத்துவது, அவ்வழியில் நேரிடும் கஷ்டங்களைவும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுமாறு மனதைப் பழக்குவது ஆகிய அனைத்தும் ஜிஹாத் ஆகும்.

 

இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள்?

ஐயத்தில் முஸ்லிம்:
இறைகாதலில் திளைத்து, இறைவனின் ஜ்யோதியில் மனம் ஒன்றி ஆன்மாவை சரணடையும் அத்வைத கோட்பாடுகளை கொண்ட முற்போக்கு முள்ளங்கி அச்சாரில் ஊறிப்போன புரட்சிகர இஸ்லாமியிக் கருத்தோட்டத்தில் இருப்பவர்கள் சிலரை சமீப காலத்தில் சந்திக்க நேர்ந்தது.

அன்புடன் முஸ்லிம்:
இஸ்லாத்தில் பிரிவுகள் கிடையாது என்று அழுத்தமாக நம்புபவன் நான். முஸ்லிம் எல்லோரும் ஒன்றுதான். பிரிவுகளே கிடையாது.

முஸ்லிம்களுக்குள் உள்ள வேற்றுமைகளைக் கணக்கிட்டால், சிலருக்கு 1% கோளாறு இருக்கும் சிலருக்கு 99% கோளாறு இருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆதாமின் மக்கள் பிழை செய்பவர்களே!

நல்ல பகுதிகளைப் பார்த்து நட்பு கொள்வதை நான் விரும்புகிறேன்.

அதனால் நல்ல பகுதிகள் மேலும் மேலும் வளர்ந்து பிழையானவை முட்களைப் போல உதிர்ந்துபோகும்.

அதற்கான அடிப்படை, எவரையும் இறைவனின் அன்போடும் இறைவனின் கருணையோடும் கையாள்வதே.

Tuesday, October 23, 2012

ஹதீது தொகுப்புகள் ஆறு

நபித் தோழர்களும், அவர்களுக்குப்பின் வந்தர்வகளும் ஹதீதுகளைத் தொகுத்தளிக்க ஆரம்பித்தனர்.

அந்த ஹதீதுகள் அவர்களால் முடிந்தவரை மனப்பாடம் செய்யப்பட்டு சில செவி வழிச் செய்திகளாகவும், சில எழுதி வைத்தப் பிரதிகளாகவும் உருவாகின.

முகம்மது நபி இறந்த 200 ஆண்டுகள் தொடங்கி 300 ஆண்டுகள்வரை இஸ்லாத்தில் இணைந்த அரபி அல்லாதவர்கள் ஹதீதுகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.
 
இக்காலக்கட்டத்தில் ஏராளமான ஹதீது தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள் மட்டுமே ”உண்மையான ஆறு ஹதீது நூல்களின் தொகுப்பு” எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றன.

நூல் 1:   சஹீஹுல் புகாரி 
ஹிஜ்ரி 194 - 256 ல் வாழ்ந்த ரஷ்யாவைச் சேர்ந்த புகாரி என்பவரால் தொகுக்கப்பட்டது. நான்கு லட்சம் ஹதீதுகளை இவர் தொகுத்தார். அவற்றுள் சுமார் நாலாயிரம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நூல் 2: ஷஹீஹ் முஸ்லிம் 
ஹிஜ்ரி 206 - 261 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 3: ஸூனன் நஸயீ 
ஹிஜ்ரி 214 - 303 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நஸயீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 4: ஸூனன் அபூதாவூத் 
ஹிஜ்ரி 202 - 275 ல் வாழ்ந்த இராக்கைச் சேர்ந்த அபூதாவூத் என்ப்வரால் தொகுக்கப்பட்டது

நூல் 5: ஸூனன் திர்மிதீ 
ஹிஜ்ரி 209 - 279 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திர்மிதீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 6: ஸூனன் இப்னுமாஜா
ஹிஜ்ரி 202 - 273 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த இப்னுமாஜ்ஜா என்பவரால் தொகுக்கப்பட்டது.

கலீபா அபூபக்கர் ஆட்சிக்காலத்தில் தானும் ஓர் இறைத் தூதர் என்று பொய்யாக அறிவித்த முசைலமாவை அழிக்க நடந்த போரில் குர்-ஆனை மனப்பாடம் செய்து வைத்திருந்த எழுபத்தைந்துக்கும்மேற்பட்ட நபித்தோழர்கள் உயிரிழந்தார்கள்.

இதனால் நபித்தோழர் உமர் கலீபா அபூபக்கரை குர்-ஆனைத் தொகுத்துவிடும்படி கட்டாயப்படுத்தினார்.

முகம்மது நபி அப்படியோர் செயலைச் செய்யவில்லையே செய்யும்படியும் கூறவில்லையே என்று கலங்கிய கலீபா அபூபக்கர் முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் நபித்தோழர் உமர், கலீபா அபூபக்கரிடம் ஹதீதுகளைத் தொகுக்கும்படி கேட்டுக்கொள்ளவும் இல்லை அவரின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கவும் இல்லை.

கலீபா உமர் அவர்கள் தனக்கு ஹதீதுகளைத் தொகுக்கும் விருப்பம் இல்லை என்று அவரின் ஆட்சிக் காலத்தில் கூறியதோடு ஹதீதுகளைத் தொகுக்கக்கூடாது என்று உத்தரவும் இட்டதாகக் கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் ஹதீதுகளை குர்-ஆனோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதற்காக முகம்மது நபி அவர்கள் ஹதீதுகளைத் தொகுப்பதைத் தடுத்தார்கள் என்றும் இந்த முடிவைத்தான் கலீபா உமர் பின்பற்றினார் என்றும் கூறப்படுகிறது.

கடலோர முஸ்லிம் வீட்டுக் கல்யாணம்

ஊரலசி உறவலசி
       உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
       பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
       வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
       அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
       முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
       தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
       ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
       உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
       பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
       நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
       அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
       முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார்
       நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
       பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
       அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
       மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
       முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
       பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
       இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
       ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
       மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
       மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
       அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
       புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
       வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
       இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
       மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
       குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
       சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
       செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
       வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
       உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
       உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
       எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
       கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
       பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
       சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
       மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
       எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
       நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
       சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
       ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
       முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
       தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
       சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
       வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
       முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டு
       சிரிப்பாளே பெண்ணின்தாய்

Sunday, October 21, 2012

பெண்களை ஏன் நபிகளாக இறைவன் நியமிக்கவில்லை?

இஸ்லாத்தில் பெண்களின் கல்வி, வேலை, முன்னேற்றம் என்று பேசத் தலைப்பட்டால், சிலருக்கு அது ஏற்றுக்கொள்ளும் விடயமாக இல்லை. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து யாதெனில், பெண்களில் இறைவன் நபிமார்களை அனுப்பவில்லை. ஆகவே பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று இறைவனே சொல்லிவிட்டான் என்கிறார்கள்.

பெண் நபிமார்கள் இறைவனால் அனுப்பப்படவில்லை என்பதற்கு அவர்கள் முன்வைத்த இறைவசனம்:

16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் செய்தி கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).

وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُّوحِي إِلَيْهِمْ ۚ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ

இந்த இறைவசனத்தில் சிவப்பு மையினால் சுட்டிக்காட்டப்பட்ட சொல்லை ஆண் என்பதற்காக இறைவன் பயன்படுத்தினான் என்கிறார்கள்.

*

அதே அரபுச் சொல்லை இறைவன் ஆண் பெண் சேர்ந்த மக்களுக்காகப் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறான்

7:48. சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: "நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!"

وَنَادَىٰ أَصْحَابُ الْأَعْرَافِ رِجَالًا يَعْرِفُونَهُم بِسِيمَاهُمْ قَالُوا مَا أَغْنَىٰ عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ
38:62. இன்னும், அவர்கள்: "நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
وَقَالُوا مَا لَنَا لَا نَرَىٰ رِجَالًا كُنَّا نَعُدُّهُم مِّنَ الْأَشْرَارِ


இந்த இறை வசனத்தில் அதே சிவப்பு மை அரபிச் சொல் மனிதர்களென்று ஆண்களையும் பெண்களையும் சேர்த்தே சொல்லுகிறது
  
22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ


இந்த இறைவசனத்திலும் சிவப்பு மை அரபுச் சொல் ஆண் பெண் வேறுபாடின்றி மனிதர்களையே குறிக்கின்றது. இது போல நிறைய வசனங்கள் குர்-ஆனில் உண்டு.


45:8. தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.

45:9. நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

இந்த இறைவசனங்களில் ”கேட்கிறான்” “அவன்” “செய்கிறான்” என்று கூறுவது ஆண்களுக்கா பெண்களுக்கா அல்லது இருவருக்குமா என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை

இறைவனை ”அவன்” என்றே அவன் குறிப்பிடுகிறான். இறைவன் ஆணா பெண்ணா?

அரபு மொழியில் மட்டுமல்ல உலக மொழி அனைத்திலும் அவன், அவனை என்று குறிப்பிடுவதெல்லாம் இரு பாலரையும்தான்.

”மனிதன் மிருகம் ஆகலாம்”
“அழிவுப் பாதையில் மனிதன்”

இப்படி எல்லாம் அன்றாடம் ஆயிரம் சொற்றொடர் காண்கிறோம். இதில் மனிதன் என்றால் ஆணா பெண்ணா அல்லது இருபாலருமா?
*
 
இறைவன் நபி மூஸா (அலை) அவர்களின் தாயாரிடம் செய்தியை அறிவித்தான் என்று 20:38, 28:7 இறைமறை வசனங்களிலும், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபி ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களுக்கு இறைச் செய்தியை அறிவித்ததை 3:47, 19:17 ஆகிய இறைமறை வசனங்களில் கூறப்பட்டுள்ளன. இவை அந்தப் பெண்களுக்கான சிறப்பாக அறிவிக்கபட்டுள்ளதே தவிர, பெண்களில் நபித்துவம் வழங்கப்பட்டவர் என்று குர்ஆன், சுன்னாவில் உறுதிப்படுத்தவில்லை!
 
என்றார்கள்
*
 
இறைவன் மனிதர்களிடம் நேரடியாய்ப் பேசுவதில்லை. அவன் இறைத்தூதர்களின் வழியாகத்தான் பேசுகிறான்.
42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
*
 
நபிமார்களில் பெண்கள் இருக்கின்றனரா என்பதை நம் விருப்பத்திற்கு முடிவு செய்யாமல், இறைவனே அறிவான் என்பதே சரியானதாக இருக்கும்.

நபிமார்களில் பெண்கள் வந்திருக்கலாம். வந்தார்களா என்பதை இறைவனே அறிவான். வரவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல நமக்கு ஆதாரங்கள் இல்லை.

நான் பெண்களை நபிமார்களாக அறிவிக்கமாட்டேன் என்று இறைவன் எந்த வசனத்திலும் குறிப்பிடவில்லை.

 

ஒரு ஹதீதை எப்படி அணுகவேண்டும்?

ஒரு ஹதீதை நாம் அறிவைக்கொண்டு பார்க்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள் சிலர்.

ஆனால் குர்-ஆனை நீங்கள் அறிவைக் கொண்டு பார்க்கலாம்.

இஸ்லாம் அறிவியல் பூர்வமான ஓர் மார்க்கம். அதனுள் மூட நம்பிக்கைகளுக்கு இடமில்லை.

மூடநம்பிக்கைகளே இல்லாத அற்புதமான மார்க்கம் என்ற பெருமையை உடையது இஸ்லாம்.

உலகின் தலை சிறந்த அறிஞர்கள்கூட (அறிஞர் பெர்னாட்சா போல) குர்-ஆனை வாசித்துத்தான் இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்று சொன்னார்கள்.

குர்-ஆன் அப்படிப்பட்ட ஓர் புனித நூல், புரட்சி நூல், உண்மையின் மையம்.

பலகீனமான ஹதீதுகளை ஏற்றுக்கொள்வதால் நீங்கள் இஸ்லாத்தின் உயர்வுக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள்.

பலகீனமான ஹதீதுகள் உண்டு.

பலகீனமான இறைவசனம் ஏதேனும் ஒன்று உண்டா?

குர்-ஆன் அப்படியே உண்மையின் இழைகளால் கட்டப்பட்டது.

ஹதீதுகள் பொய்யர்கள் சூழ்ந்து செய்த சதியால் கலப்படம் செய்யப்பட்டது.

ஹதீதுகளில் பலகீனமானவற்றைக் களைவது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமை.

அன்று இயன்றவரை அறிஞர்கள் களைந்தார்கள்.

ஹதீதுகளைப் பார்வை இட்டு ஆயிரம் ஹதீதுகளுக்கு ஒன்றிரண்டைத்தான் ஏற்புடையது என்றார்கள்.

குர்-ஆனில் ஏதேனும் ஒரு இறைவசனத்தை உங்களால் நீக்க முடியுமா?

அப்படி ஓர் குழு அமைக்கப்பட்டு குர்-ஆன் வசனங்கள் ஏதேனும் நீக்கப்பட்டதா?

ஏற்புடைய ஹதீதுகள் என்று பல லட்சம் ஹதீகளில் இருந்து சில வற்றை மட்டுமே தொகுத்தார்கள். ஏன் என்று சிந்திக்கவேண்டும்.

ஏற்புடைய குர்-ஆன் வசனம் என்று பல ஆயிரம் இறைவசனங்களை நீக்கி சிலவற்றை மட்டும் தேர்வு செய்து எந்த அறிஞர் குழுவாவது தொகுத்ததா?

ஒரு சொல்லும் ஓர் எழுத்தும் மாற்றாமல் நபித் தோழர்களின் நினைவாற்றல்களிலிருந்தும், எழுதி வைக்கப்பட்ட அனைத்து வகை ஏடுகளிலிருந்தும் குர்-ஆனை நூலாக்கினார்கள்.

ஹதீதுகள் அப்படியா?

ஹதீதுகளின் வரலாற்றை வாசியுங்கள்
http://anbudanislam2012.blogspot.ca/2012/10/blog-post_3595.html

அறிவுடைய ஒவ்வொருவருக்கும்
மேலான அறிவுடைய ஒருவன்
இருக்கிறான் (குர்-ஆன் 12:76)

Saturday, October 20, 2012

முஸ்லிம் ஐந்து வேளை தொழவேண்டுமா அல்லது ஐம்பது வேளை தொழவேண்டுமா?

சுவனத்திலிருந்து இறங்கி வந்தபோது, தம் முன்னோரான நபி மூஸா அவர்களை இடையில் சந்திக்க, அன்னார்,"முகம்மதே! உம் இறைவனிடமிருந்து பெற்றுவந்த அன்பளிப்பு யாது?" என்று கேட்டார். "ஐம்பது வேளைத் தொழுகை" என முகம்மதவர்கள் சொல்ல, அதற்கு மூஸா,"இதை உம் சமுதாயத்தினர் செய்ய ஆற்றல் பெற மாட்டார்" எனக் கூற, இறைவனிடம் மீண்டும் சென்ற நபிக்கு, ஐந்து ஐந்தாகக் குறைத்துப் பின்னர் வெறும் ஐந்தாக வழங்கினான்.

*

இது ஒரு நீண்ட ஹதீத். தேவை கருதி அதன் சுருக்கம் இங்கே வழங்கப்பட்டிருக்கிறது. முழு வடிவம் நான்கு பேர் சொல்ல நான்கு ஹதீதுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை நான்கும் இக்கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

*

அனைத்தும் அறிந்தவன் இறைவன் அல்லவா?
அவன் பேரறிவாளன் அல்லவா?

எந்த ஓர் மனிதனையும்விட இறைவன் நன்கு அறிந்தவன் அல்லவா?
எந்த ஓர் நபி மார்களையும்விட இறைவன் நன்கு அறிந்தவன் இல்லையா?
இறைவன் படைத்த அனைத்தையும்விட இறைவன் நன்கு அறிந்தவன் இல்லையா?

இறைவன் எதையும் யோசிக்காமல் சொல்லமாட்டான் அல்லவா?

இந்த ஹதீதின்படி இறைவன் சொன்னது 50 வேளை தொழுகைதானே?
அதைக் கடைபிடிக்க வேண்டியதுதானே ஒரு முஸ்லிமின் கடமை?

அதைக் கடைபிடிக்க முடியும் என்றுதானே முகம்மது நபி இறைவனிடமிருந்து அந்தச் செய்தியை வாங்கிக்கொண்டு வந்தார்.

கடைபிடிக்கமுடியாது என்று நினைத்திருந்தால், இறைவன் வழங்கியபோதே மறுத்திருப்பாரே?

இறைவன் சொன்னதும் 50 வேளைத் தொழுகை
 முகம்மது நபி ஏற்றதும் 50 வேளைத் தொழுகை

 இறைவனுக்குத் தெரியாதா 50 வேளைத் தொழுகையை மனிதர்களால் நிறைவேற்ற முடியுமா முடியாதா என்று?
முகம்மது நபிக்குத் தெரியாதா 50 வேளைத் தொழுகையை மனிதர்களால் நிறைவேற்ற இயலுமா இயலாதா என்று?

முகம்மது நபியைவிட மூசா நபி அனைத்தும் அறிந்தவரா?

அதுவாவது பரவாயில்லை, இறைவனையும்விட மூசா நபி அனைத்தும் அறிந்தவரா? 

இறைவன் சொன்ன 50 வேளைத் தொழுகையை நிறைவேற்றுவதுதானே மனிதர்களின் கடமை?

ஆனால் தினம் தினம் ஐம்பது வேளை தொழமுடியுமா?

என்றால் சிந்தித்துப் பார்ப்போம் இந்த ஹதீது போலி ஹதீதுதானே?

ஹதீதுகளை அப்படியே ஏற்காதீர்கள். குர்-ஆனோடு உடன்படும் ஹதீதுகளை நாம் ஏற்பதில் யாதொரு பிழையும் இல்லை. அவை குர்-ஆனுக்கான விளக்கம் என்பதோடு நின்றுவிட வேண்டும். குர்-ஆன் வசனங்களைப்போல கட்டளைகள் ஆகிவிடக்கூடாது. அப்படி ஆக்குவது இறைவனுக்கு இணைவைப்பதாகும்

இதோ அந்த செய்திகளைச் சொல்லும் ஹதீதுகளின் முழு வடிவம்:

3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. 

*

3342. அபூ தர்(ரலி) அறிவித்து வந்ததாக அனஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிளக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை, 'ஸம்ஸம்' தண்ணீரால் கழுவினார்கள். பிறகு, நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தட்டு ஒன்றைக்கொண்டு வந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு, என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறினார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்கு வந்தபோது வானத்தின் காவலரிடம், 'திறங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'யார் அது?' என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், 'இதோ ஜிப்ரீல்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'உங்களுடன் வேறெவராது இருக்கிறரா?' என்று கேட்டார். அவர்கள், 'என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், '(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?' என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், 'ஆம், திறவுங்கள்" என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) 'நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!" என்று கேட்டேன். அவர், 'இவர் ஆதம்(அலை) அவர்கள்; அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததிகள். அவர்களில் வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவே, தான் அவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களை பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரக வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள்.
பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உரயத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு, இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்" என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் வாயிலைத்) திறந்தார்.
அனஸ்(ரலி) தொடர்ந்து கூறினார்கள்:
"நபி(ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ்(அலை), ஈசா(அலை) இப்ராஹீம்(அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர்களின் இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம்(அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம்(அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே கூறினார்கள்" என்று அபூ தர்(ரலி) கூறினார்.
அனஸ்(ரலி) மேலும் கூறினார்கள்:
"ஜிப்ரீல்(அலை) அவர்கள் இத்ரீஸ்(அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, 'நல்ல இறைத் தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், 'இவர் இத்ரீஸ் என்று கூறினார்கள். பிறகு மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், 'இவர் மூஸா" என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!" என்று கூறினார்கள். பிறகு நான் ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், '(இவர்) ஈசா" என்று பதிலளித்தார்கள். பிறகு நான் இப்ராஹீம் அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், 'நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு, 'இவர் இப்ராஹீம்" என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி), அபூ ஹய்யா(ரலி) ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்கி(ரலி) கூறினார்
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக் கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
இப்னு ஹஸ்கி(ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாய்யத்தாருக்காக) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப்பெற்றுக் கொண்டு நான் திரும்பியபோது மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூஸா அவர்கள், 'உங்கள் சமுதாயத்தவர் மீது என்ன கடமையாக்கப்பட்டது" என்று கேட்டார்கள். நான், 'அவர்களின் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அவர்கள், 'அப்படியானால் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது" என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூஸா அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறி முன்பு போல் ("உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது") என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா அவர்களிடம் மீண்டும் கூறியபோது, 'உங்களுடைய இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்கு சக்தி பெறமாட்டார்கள்" என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், 'அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒரு முறை சொல்லப்பட்ட சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை" என்று கூறினான். உடனே, நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், 'உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். நான், 'என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்" என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (வானுலகின் எல்லையான) 'சித்ரத்துல முன்தஹா'வுக்குச் சென்றார்கள். அப்போது அவையென்னவென்று நான் அறிய முடியாத படி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது. 

*

3887. அப்பாஸ் பின் மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள்.
நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்... அல்லது ஹிஜ்ரில்... படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ்(ரலி), 'இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்" என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் கத்தாதா(ரஹ்) கூறினார்:
நான் என்னருகிலிருந்து (அனஸ்(ரலி) அவர்களின் நண்பர்) ஜாரூத்(ரஹ்) அவர்களிடம், 'அனஸ்(ரலி), 'இங்கிருந்து, இது வரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஜாரூத்(ரஹ்), 'நபி(ஸல்) அவர்களின் நெஞ்சின் காறை யெலும்பிலிருந்து அடிவயிறு வரை... அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை... என்ற கருத்தில் அனஸ்(ரலி) கூறினார்" என்று பதிலளித்தார்கள்.
பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது, என்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (என்னுடைய இதயம், மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.
-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ்(ரலி) அவர்களிடம் ஜாரூத்(ரஹ்), 'அது புராக் எனும் வாகனம் தானே அபூ ஹம்ஸா அவர்களே!" என்று கேட்டார்கள். அதற்கு அனஸ்(ரலி), 'ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்" என்று
பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். அப்போது, 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வானத்தின் காவலர்) கதவைத் திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது அங்கு ஆதம்(அலை) அவர்கள் இருந்தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) 'இவர்கள் உங்கள் தந்தை ஆதம், இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்" என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு, ஆதம்(அலை) அவர்கள், '(என்) நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்று கூறினார்கள். பிறகு (என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்திற்கு உயர்ந்து அதைத் திறக்கும்படி கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார், '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்தா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது, அங்கு யஹ்யா (அலை) அவர்களும், ஈசா(அலை) அவர்களும் இருந்தனர் - அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர். இது யஹ்யா அவர்களும், ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்னபோது அவர்கள் சலாமிற்கு பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும், 'நல்ல சகோதரரும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினர். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்தபோது அங்கு யூசுஃப்(அலை) அவர்கள் இருந்தார்கள். 'இவர்கள் தாம் (இறைத்தூதர்) யூசுஃப் இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்கு பதில் சலாம் கூறினார்கள். பிறகு, 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்தும்) கூறினார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஐந்தாம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படி கூறினார். 'யார் அது" என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று வினவப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவர் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. நான் அங்கு சென்றடைந்தபோது ஹாரூன்(அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் ஹாரூன் இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு அவர்கள், 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துச்) கூறினார்கள். பிறகு என்னுடன் அவர் ஆறாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். (அந்த வானத்தின் காவலர்,) 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) கூறினார். அங்கு சென்றடைந்தபோது மூஸா (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் மூஸா இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு, 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துச்) கூறினார்கள். நான் (மூஸா - அலை - அவர்களைக்) கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?' என்று அவர்களை நோக்கிக் கேட்கப்பட்டது. அவர்கள், 'என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள், எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் தான் அழுகிறேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஏழாவது வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று வினவப்பட்டபோது அவர், 'முஹம்மது" என்று பதில் கூறினார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். (அந்த வானத்தின் காவலர்,) 'அவரின் வரவு நல்வரவாகட்டும், அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) கூறினார். நான் அங்கு சென்றடைந்தபோது, இப்ராஹீம்(அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் உங்கள் தந்தை. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் உரைத்தார்கள். அவர்கள், 'நல்ல மகனும், நல்ல இறைத் தூதருமான இவரின் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு, (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' என்னும் இடத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். அதன் (இலந்தைப்) பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜர்' என்னுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போலிருந்தன. 'இதுதான் சித்ரத்துல் முன்தஹா" என்று ஜிப்ரீல் (அறிமுகப்படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. 'ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?' என்று கேட்டேன். அவர், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' (எனும் 'வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்') எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டு வரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், 'இதுதான் நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்" என்று கூறினார்கள். பிறகு என் மீது ஒவ்வொரு தினத்திற்கு ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பி வந்தபோது மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், 'உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?' என்று கேட்டார்கள். 'ஒவ்வொரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது" என்று நான் பதிலளித்தேன். உங்கள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்க மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்களிடம் அனுபவப்பட்டுள்ளேன்" பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமுதாயத்தினருக்காக (தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்று கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். (இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதிலிருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். முன் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போதும் முன் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும் படி) கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்குக (முப்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் முன்போன்றே (குறைத்து கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதிலிருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி) உத்தரவிடப்பட்டது. நான் (மூஸா - அலை - அவர்களிடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன் போன்றே கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது 'உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?' என்று கேட்டார்கள். ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று சொன்னேன். 'ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளை உங்கள் சமுதாயத்தினர் தாங்கமாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்துத் தரும்படிக் கேளுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நான், '(கடமையான தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டு விட்டேன். எனவே, நான் திருப்தியடைகிறேன்; (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொள்கிறேன்" என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்தபோது, (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) 'நான் என் (ஐந்து நேரத்தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எளிதாக்கி விட்டேன்" என்று ஒரு (அசரீரிக்) குரல் ஒலித்தது. 
*

7517. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா பள்ளிவாசலிலிருந்து (விண் பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்:
நபி(ஸல்) அவர்களுக்கு (சட்டங்கள் தொடர்பாக) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன்பு (ஒரு நாள் இரவு) அவர்கள் புனித (கஅபா) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்கள்) மூன்று பேர் வந்தனர். அவர்களில் முதலாமவர், (அங்கு படுத்திருந்த ஹம்ஸா(ரலி), முஹம்மத்(ஸல்), ஜஅஃபர்(ரலி) ஆகியோரை நோக்கி) 'இவர்களில் அவர் (முஹம்மத் - ஸல்) யார்?' என்று கேட்டதற்கு நடுவிலிருந்த(வான)வர் 'இவர்களில் (நடுவில் படுத்திருக்கும்) சிறந்தவரே அவர்' என்று பதிலளித்தார். அப்போது அம்மூவரில் மூன்றாமவர், 'இவர்களில் சிறந்தவரை (விண் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்' என்று கூறினார். அன்றிரவு இவ்வளவு தான் நடந்தது. அடுத்த(நாள்) இரவில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் (-உறக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோது தான் அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை. -இறைத்தூதர்கள் நிலை இவ்வாறுதான்; அவர்களின் கண்கள் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்கமாட்டா. பிறகு அந்த வானவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் பேசாமல் அவர்களைத் தூக்கிக் கொண்டுவந்து ஸம்ஸம் கிணற்றின் அருகில் இறக்கினர். அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்களின் பொறுப்பை (வானவர்) ஜிப்ரீல்(அலை) ஏற்றார்கள்.158
அவர் நபி(ஸல்) அவர்களின் காறையெலும்பிலிருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரை பிளந்து, நெஞ்சிலிருந்தவற்றையும் வயிற்றிலிருந்தவற்றையும் அகற்றினார். பின்னர் தம் கையால் நபியவர்களின் இருதயத்தை ஸம்ஸம் நீரால் கழுவி, அவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்தினார். பிறகு தங்கத் தட்டு ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் தங்கக் கோப்பை ஒன்று இருந்தது. அது இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது. அதனை நபியவர்களின் இருதயத்திலும் தொண்டை நாளங்களிலும் இட்டு நிரப்பினார் ஜிப்ரீல்; பின்னர் இருதயத்தை மூடிவிட்டார். (பிறகு 'புராக்' வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார். அந்த வானத்தின் கதவுகளில் ஒன்றை அவர் தட்டினார். அப்போது அந்த வானத்திலிருந்த (வான)வர்கள், 'யார் அவர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் வந்திருப்பவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'என்னுடனிருப்பவர் முஹம்மத்' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்துவரச் சொல்லி) ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) 'ஆம்' என்றார்கள். 'அவரின் வரவு நல் வரவாகட்டும்! வாழ்த்துகள்!' என்று கூறினர். நபியவர்களின் வருகையால் வானில் இருபபோர் மகிழ்ச்சியடைகிறார்கள். பூமியில் அல்லாஹ் எதை (நிகழச் செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்.
அந்த முதல் வானத்தில் நபி(ஸல்) அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இவர்தாம் உங்கள் தந்தை. இவருக்கு நீங்கள் சலாம் (முகமன்) கூறுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவருக்கு நபி(ஸல்) அவர்கள் முகமன் கூற, அதற்கு ஆதம்(அலை) அவர்கள் பதில் (முகமன்) சொல்லிவிட்டு, 'அருமை மகனே! வருக! வருக! நீரே நல்ல புதல்வர். (உங்கள் வரவிற்கு) வாழ்த்துக்கள்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரண்டு நதிகளைக் கண்டார்கள். உடனே 'ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?' என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இவையிரண்டும் நைல் மற்றம் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்' என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள், 'இது என்ன நதி ஜிப்ரீலே?' என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இது உங்களுக்காக உங்களுடைய இறைவன் ஒதுக்க வைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் இரண்டாம் வானத்திற்கு உயர்ந்தார். அப்போது அவரிடம் முதல் வானத்திலிருந்த வானவர்கள் கேட்டதைப் போன்றே (இந்த வானத்திலிருந்த) வானவர்களும், 'யார் அவர்?' என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார்கள். வானவர்கள், 'உம்முடன் இருப்பவர் யார்?' என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'முஹம்மத்(ஸல்) அவர்கள்' என்று பதிலளித்தார்கள். 'அவருக்கு ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று வானவர்கள் கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'ஆம்' என்றார்கள். அப்போது அவ்வானவர்கள், 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! வாழ்த்துகள்' என்று கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார்கள். அ(வ்வானத்திலிருந்த வான)வர்களும் முதலாவது மற்றும் இரண்டாவது வானதிலிருந்தவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நான்காம் வானத்திற்கு உயர்ந்தார்கள். அங்கிருந்த (வான)வர்களும் அதைப் போன்றே கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஐந்தாம் வானிற்கு உயர்ந்தார்கள். அ(ங்கிருந்த வான)வர்களும் அதைப் போன்றே கூறினர். பின்னர் நபியவர்களுடன் ஆறாம் வானிற்கு உயர்ந்தார்கள். அவர்களும் அவ்வாறே கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஏழாம் வானிற்கு உயர்ந்தார்கள். அப்போது அங்கிருந்த(வான)வர்களும் அவரிடம் முன்போன்றே கூறினர்.
ஒவ்வொரு வானத்திலும் இறைத்தூதர்கள் இருந்ததாகக் கூறிய நபி(ஸல்) அவர்கள் அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்கள். இத்ரீஸ்(அலை) அவர்கள் இரண்டாம் வானிலும், ஹாரூன்(அலை) அவர்கள் நான்காம் வானிலும், இன்னொருவர் ஐந்தாம் வானிலும், அவரின் பெயர் நினைவில்லை - இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆறாம் வானிலும் மூஸா(அலை) அவர்கள், அல்லாஹ்வுடன் உரையாடியவர் என்ற சிறப்பினடிப்படையில் ஏழாம் வானிலும் இருந்ததாக நான் மனனமிட்டுள்ளேன். அப்போது மூஸா(அலை) அவர்கள், 'என் இறைவா! எனக்கு மேலே வேறொருவர் உயர்த்தப்படுவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை' என்று கூறினார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிபரீல் அதற்கு மேலேயும் ஏறினார். அல்லாஹ்வுக்கு மட்டுமே அதன் நிலை தெரியும். இறுதியாக (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா'விற்குச் சென்றார்கள். அங்கு சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான (இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான். அப்போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவித்தவற்றில், 'நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது' என்பதும் அடங்கும். பிறகு நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்து) இறங்கி மூஸா(அலை) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூஸா(அலை) அவர்கள், 'முஹம்மதே! உங்களுடைய இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்?' என்று கேட்டான்.
நபி(ஸல்) அவர்கள், 'நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான்' என்று பதிலளித்தார்கள். மூஸா(அலை) அவர்கள், 'உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்களுடைய இறைவனிடம் உங்களுக்கும் (உங்கள் சமுதாயத்தாரான) அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்குமாறு கேளுங்கள்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
'நீர் விரும்பினால் ஆகட்டும்' என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள்.
எனவே, நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த(வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். (முதலில் நாம் நின்றிருந்த) அதே இடத்தில் நின்றவாறு நபி(ஸல்) அவர்கள், 'என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது' என்றார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி(ஸல்) அவர்களை இறைவனிடம் மூஸா(அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியதுழூ ஐந்துக்கு வந்த போதும் மூஸா(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, 'முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பனூஇஸ்ராயீல்களுக்கு இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன். ஆனால் அவர்கள் (அதைக் கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கைவிட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். எனவே, திரும்பச் சென்று உங்களுக்காக (உங்கள் ஐவேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள்' என்று கூறினார்கள்.
ஒவ்வொரு முறையும் நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை. ஐந்தாவது முறை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், 'என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!' என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன 'முஹம்மதே!' என்று அழைத்தான். அதற்கு 'இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு' என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அல்லாஹ், '(ஒரு முறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை; அதை (-ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது 'லவ்ஹுல் மஹ்ஃபூல்' எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்' என்று சொன்னான்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள், மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அப்போது 'என்ன செய்தீர்?' என்று மூஸா(அலை) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஐம்பதாயிருந்த தொழுகைகளின் எண்ணிக்கையை ஐந்தாக) அவன் குறைத்தான். ஒவ்வொரு நற்செயலுக்கும் அதைப்போன்ற பத்து மடங்கு நன்மைகளை வழங்கினான்' என்றார்கள்.
அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதைவிடக் குறைவான எண்ணிக்கையையே பனூ இஸ்ராயீல்களுக்கு நான் (இறைவனிடம்) கோரிப் பெற்றேன். அப்படியிருந்தும் அதைக் கூட அவர்கள் கைவிட்டார்கள். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் உங்களுக்காகக் குறைக்கும்படி கேளுங்கள்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மூஸாவே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! திரும்பத் திரும்ப இறைவனிடம் நான் சென்றுவிட்டதனால் (மீண்டும் செல்ல) வெட்கப்படுகிறேன்' என்றார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள், '(நபியே!) அல்லாஹ்வின் திருப்பெயரால் (பூமிக்கு) இறங்குங்கள்' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள்; மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலில் இருந்தார்கள்.159 




 

குர்-ஆன் எளிமையானது குர்-ஆனைப் பின்பற்றுங்கள்

43:2. விளக்கமான
இவ்வேதத்தின் மீது சத்தியமாக.

54:17. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு
நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே
எளிதாக்கி வைத்திருக்கின்றோம்.
எனவே நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

54:22. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு
நினைவு படுத்திக் கொளளும் பொருட்டே
எளிதாக்கி வைத்திருக்கின்றோம்;
எனவே நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

6:126. (நபியே!)
இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும்
சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை
நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்

47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை
ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
அல்லது அவர்கள் இருதயங்கள் மீது
பூட்டுப்போடப்பட்டு விட்டனவா?

8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்
உயிர்ப் பிராணிகளில்
மிக்க கேவலமானவர்கள்
(உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும்
ஊமைகளும் தாம்.

6:106. (நபியே!)
உம்முடைய இறைவனிடமிருந்து
உமக்கு செய்தி மூலம்
அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக 
அவனைத் தவிர  இறைவன் வேறில்லை
இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்

6:104. நிச்சயமாக உங்களுக்கு
உங்கள் இறைவனிடமிருந்து
ஆதாரங்கள் வந்துள்ளன
எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ
அது அவருக்கே நன்மையாகும்,
எவர் பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ
அது அவருக்கே கேடாகும்
“நான் உங்களைக் காப்பவன் அல்ல”
(என்று நபியே! நீர் கூறும்).

18:27. இன்னும் (நபியே!)
உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து
உமக்கு செய்தி மூலம் அருளப்பட்டதை
நீர் ஓதி வருவீராக 
அவனுடைய வார்த்தைகளை
மாற்றக் கூடியவர் எவருமில்லை;
இன்னும் அவனையன்றி
புகலிடம்எதையும் நீர் காணமாட்டீர்.

6:115. மேலும்
உம்முடைய இறைவனின் வார்த்தை
உண்மையாலும் நியாயத்தாலும்
முழுமையாகி விட்டது 
அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர்
எவரும் இல்லை 
அவன் (அனைத்தையும்) கேட்பவனாகவும்,
அறிபவனாகவும்இருக்கின்றான்.

6:116. பூமியில்உள்ளவர்களில்
பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால்
அவர்கள் உம்மை இறைவனின் பாதையை விட்டு
வழிகெடுத்து விடுவார்கள்.
வெறும் யூகங்களைத்தான்
அவர்கள் பின்பற்றுகிறார்கள்
இன்னும் அவர்கள் கற்பனையிலேயே
மூழ்கிக்கிடக்கிறார்கள்.

7:3. (மனிதர்களே!)
உங்கள் இறைவனிடமிருந்து,
உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்;
அவனையன்றி (வேறெவரையும்)
பாதுகாவலர்களாகப் பின்பற்றாதீர்கள்
நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

20:13. இன்னும்
“நாம் உம்மை (என் தூதராக)த்
தேர்ந்தெடுத்தேன்; ஆதலால்
இறைச்செய்தி வாயிலாக (உமக்கு)
அறிவிக்கப் படுவதற்கே நீர் செவியேற்பீராக.

10:36. ஆனால், அவர்களில் பெரும்பாலோர்
யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை;
நிச்சயமாக யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக
எந்த ஒரு பயனும் தர இயலாது.
நிச்சயமாக இறைவன் அவர்கள் செய்பவற்றையெல்லாம்
நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

7:35. ஆதமுடைய மக்களே!
உங்களிடம் உங்களிலிருந்தே (நம்)
தூதர்கள் வந்து, என் வசனங்களை
உங்களுக்கு விளக்கினால்,
அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு
(தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ
அவர்களுக்கு அச்சமுமில்லை;
அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.

10:15. என் மீது இறைச்செய்தியாக
அறிவிக்கப்படுபவற்றைத் தவிர
வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை,
என் இறைவனுக்கு நான் மாறு செய்தால்,
மகத்தான நாளின் வேதனைக்கு
நான் நிச்சயமாக பயப்படுகிறேன்”
என்று (நபியே!) நீர் கூறுவீராக.

6:93. இறைவனின் மீது பொய்க் கற்பனை செய்பவன்,
அல்லது இறைச்செய்தி மூலம் தனக்கு
ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க,
“எனக்கு இறைச்செய்தி வந்தது” என்று கூறுபவன்;
அல்லது “இறைவன் இறக்கிவைத்ததைப் போல்
நானும் இறக்கிவைப்பேன்”  என்று கூறுபவன்,
ஆகிய இவர்களை விடப் பெரிய
அநியாயக்காரன் யார் இருக்க முடியும்?
 
எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ
அதைத் தொடர வேண்டாம்
குர்-ஆன் 17:36

அறிவுடைய ஒவ்வொருவருக்கும்
மேலான அறிவுடைய ஒருவன்
இருக்கிறான் (குர்-ஆன் 12:76)

ஹதீதுகளைப் பின்பற்ற வேண்டுமா?

ஒரு முஸ்லிம் குர்-ஆனையும் ஹதீதுகளையும் பின்பற்ற வேண்டும்.

இஸ்லாத்திற்கு அது தோன்றிய காலம் தொட்டே எதிரிகள் கணக்கிலடங்காதவர்கள்.

முசைலமா என்பவன் நபி பெருமானாரின் காலத்திலேயே தானும் ஓர் இறைத்தூதர் என்று அறிவித்து குர்-ஆன் வசனங்களைப் போலவே வசனங்களை எழுதி பரப்பிக்கொண்டிருந்தான்.

இதனால் குர்-ஆன் நபி பெருமானாரின் காலத்திலேயே செம்மையாகப் பாதுகாக்கப்பட்டது

அப்படியான பாதுகாப்பு ஏதும் ஹதீதுகளுக்குத் தரப்படவில்லை.

குர்-ஆன் நபி பெருமானார் இறந்த இரண்டாண்டுகளுக்குள் முழுவதும் தொகுக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்குள் நூலாகவும் ஆகிவிட்டது.

குர்-ஆனில் ஓர் எழுத்தையும் மாற்ற வழியற்றுப் போனவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்ட ஹதீதுகளைத்தான் எடுத்துக்கொண்டார்கள்.

ஹதீதுகள் நபி பெருமானார் இறந்து இருநூறு ஆண்டுகள் கழித்துத்தான் தொகுக்கப்பட்டது.

அப்படி தொகுத்தவைகளில் 0.01 சதவிகிதமே நம்பகத்தன்மையுடையதாக இருந்தன.

நாம் ஹதீதுகளைக் குறைசொல்லத் தேவையில்லை, ஆனால் பலகீனமான ஹதீதை அடையாளம் காணவேண்டும்.

ஹதீதுகள் என்று எதிரிகள் பலர் தங்கள் சொந்தக் கருத்துக்களை இணைத்துள்ள வரலாற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹதீதுகளின் சுருக்கமான வரலாற்றை இங்கே வாசிக்கலாம்:

http://anbudanislam2012.blogspot.ca/2012/10/blog-post_3595.html

அறிவுடைய ஒவ்வொருவருக்கும்
மேலான அறிவுடைய ஒருவன்
இருக்கிறான் (குர்-ஆன் 12:76)


பெண்களின் தொழுகை வரிசையில் கெட்டது

“ஆண்களின் (ஸஃப்பு) வரிசைகளில் சிறப்புக்குரியது, அவற்றில் முதலாவதாகும். அவற்றில் கெட்டது கடைசியாகும். பெண்களின் (ஸஃப்பு) வரிசைகளில் சிறப்புடையது அவற்றில் கடைசியானதாகும். அந்த வரிசைகளில் கெட்டது முதாலவதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

முதல் வரிசையில் நிற்கும் எல்லாப் பெண்களும் கெட்டதைச் செய்யக்கூடாது என்று நினைத்தால் என்னவாகும்?

பெண்களின் (ஸஃப்பு) வரிசைகளில் சிறப்புடையது அவற்றில் கடைசியானதாகும். அந்த வரிசைகளில் கெட்டது முதாலவதாகும்”

பெண்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழும் வரிசைகளில் நிற்கிறார்கள்.

அதில் முதல் வரிசையில் பெண்கள் நிற்காவிட்டால் இரண்டாவது வரிசை உருவாக வழியில்லை.

இரண்டாவது வரிசை உருவாகாவிட்டால் மூன்றாவது வரிசை உருவாக வழியில்லை.

முதல் வரிசையில் நிற்பது கெட்டது என்று கூறப்பட்டுவிட்டது.

இனி எந்தப் பெண்ணும் முதல் வரிசையில் நிற்க விரும்பமாட்டாள்.

என்றால் முதல் வரிசையே உருவாகாது.

முதல் வரிசையே உருவாகாவிட்டால் இரண்டாவது வரிசை உருவாகாது.

இரண்டாவது வரிசை உருவாகாவிட்டால் மூன்று நான்கு என்று ஏதும் உருவாகாது.

அப்படியென்றால் பெண்கள் தொழுகைக்கு நிற்கவே முடியாது.

அப்படி நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அவர்கள் கெட்ட வரிசையான முதல் வரிசையில்தான் முதலில் நின்றாக வேண்டும்.

ஆகவே இந்த ஹதீது பலகீனமானது என்று கொள்ளலாம்.

ஆண்களைப் பார்ப்பதற்கென்றே தொழுகைக்கு வராதீர்கள் இறைவனைக் காண்பதற்கு வாருங்கள் என்று பெண்களையும். பெண்களைக் காண்பதற்கென்றே பள்ளிக்கு வராதீர்கள், இறைவனை வணங்க வாருங்கள் என்று ஆண்களையும் சொல்வதாக இந்த ஹதீது அமையப் பெற்றிருக்க வேண்டும்.

அந்த நல்ல எண்ணத்தோடு ஆணும் பெண்ணும் தொழ வந்தால், அவர்கள் அவரவர்களின் எந்த வரிசையில் நின்றாலும் கேடும் இல்லை சிறப்பும் இல்லை.

ஆகவே கெட்ட வரிசை என்று ஏதும் இல்லை. இறைவனைத் தொழும் வரிசைகளில் எல்லா வரிசைகளுமே நல்ல வரிசைகள்தாம்.

என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நபி பெருமானார் சிறந்த அறிவாற்றல் உள்ளவர்கள். இதுபோல் ஒன்றையும் அவர்கள் சொல்லவே மாட்டார்கள்.

இது அவர்கள் சொன்னதைக் கேட்டு தவறாக சொற்களைப் புகுத்தியோ விலக்கிய அறிவித்ததால் வந்த குறைபாடாக இருக்கலாம்.

அல்லது முதல் சுற்றில் சரியாக அறிவித்து அடுத்த சுற்றில் தவறாக அல்லது அடுத்த சுற்றிலும் சரியாக அறிவித்து அதற்கும் அடுத்த சுற்றில் பிழையாக என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

குர்-ஆனின் வசனங்களில் ஓர் எழுத்தையும் மாற்றியமைக்க முடியாது. அது அப்படி பாதுகாக்கப்பட்டு உடனே நூலாகவும் உருவாக்கப்பட்டு மூன்று நூல்கள் மூன்று நாடுகளில் பாதுகாக்கப்பட்டன.

ஹதீதுகள் அப்படி பாதுகாக்கப்பட்டவை அல்ல. ஹதீதுகளுக்குள் கலப்படங்கள் உண்டு. பிழையான வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு.

அவற்றைச் சரியாக்கிக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையாகும்.

Friday, October 19, 2012

இறைவனின் பண்புகளும் மனிதனின் பண்புகளும்

அன்புடன் முஸ்லிம்:
அவனையே இறைவன் என நினைத்தால் நாம் அவனின் பண்புகளில் சிறிதேனும் பெறவேண்டாமா?

அறியாமையுடன் முஸ்லிம்:
இறைவனின் பண்புகள் இறைவனின் பண்புகளே. மனிதன் இறைவனின் பண்புகளை அடைய முயற்சிப்பது அறிவீனம்.

அன்புடன் முஸ்லிம்:
ஏன் நீங்கள் அன்புடையவனாய் இருக்க மாட்டீர்களா?
அறிவுடையவனாய் இருக்க மாட்டீர்களா?
கருணையுடையோனாய் இருக்க மாட்டீர்களா?