Thursday, October 4, 2012

நம்புகின்ற பெண் உயர்வாக இருக்கிறாள் நம்பாத ஆண் தாழ்வானவனாகிவிடுகிறான்

என் பார்வையில் பெண்கள் மட்டுமே செய்யத்தக்க சில வேலைகள் உண்டு என்று குழந்தைகள் பராமரிப்பு போன்ற வேலைகளை மட்டும் பட்டியல் இட்டிருந்தார் ஒரு நண்பர். மற்ற வேலைகளைப் பெண்கள் செய்யக்கூடாது என்றார். சில பிரத்யேக குணங்கள், பொறுமை, தாய்மை பண்பு, போன்றவைகள் அவர்களே பெற்றிருக்கின்றனர் அதனால் அவர்கள் அப்படியான பணிகளைத்தான் செய்யவேண்டும் என்றார்.

உங்கள் பார்வை உங்களுக்கு. அதில் நான் தலையிடமாட்டேன்.

ஆனால் ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் பெண்களும் செய்வதை இஸ்லாம் மறுக்கவில்லை
  
பொறுமை, தாய்மை போன்றவை கூடுதல் தகுதிகள்தானே? குறைவில்லயே?

ஆகவே சில காரியங்களை ஆண்களைவிடச் சிறப்பாகப் பெண்களால் செய்யமுடியும் என்றாகிறது - சில காரியங்களை பெண்களைவிட ஆண்களால் சிறப்பாகச் செய்யமுடியும் என்பதைப்போல.

பலர் பெண்களின் படிப்பையும் வேலையையும் தடுப்பது அவர்களை நம்பாததால்தான்.

பெண்களை நம்புவோம்!
நம் தாயை நம்புவோம்
நம் மனைவியை நம்புவோம்
நம் சகோதரியை நம்புவோம்
நம் மகளை நம்புவோம்

நம்பிக்கைதான் இஸ்லாத்தின் அடிப்படை.

ஒரு பெண்
தன் தந்தையை நம்புகிறாள்
தன் கணவனை நம்புகின்றாள்
தன் தமயனை நம்புகின்றாள்
தன் மகனை நம்புகின்றாள்

நம்புகின்ற பெண் உயர்வாக இருக்கிறாள்
நம்பாத ஆண் தாழ்வானவனாகிவிடுகிறான்.

No comments:

Post a Comment