மார்க்க விசயத்தை ஆழ்ந்து கற்று அதுபற்றி கருத்தாடத் தொடங்கினால், “நீங்கள் உங்கள் சுயகருத்து, சுயசிந்தனையைத்தான் மார்க்கம் என்ற பெயரில் கூறுகின்றீர்கள், வியாக்யானம் கொடுக்கின்றீர்கள். உங்கள் மனதில் என்ன தோன்றுகின்றதோ அதைப் போலத்தான் மற்றவர்கள் விளங்க வேண்டும் என்று நினைகின்றீர்கள் போலும்” என்கிறார்கள் சிலர்.
அப்படி நினைப்பது யார் என்று அறியாமலேயே அவர்கள் பேசுகிறார்களே என்று அறிய வருத்தமாக இருக்கிறது.
இஸ்லாத்தைச் சரியாக அது எப்படி நமக்கு அருளப்பட்டதோ அதே போல ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு இஸ்லாமியனும் வாழவேண்டும்.
மற்றபடி யார் மீதும் யாரும் அடக்குமுறையில் இறங்கக் கூடாது.
மனம் நோக சபிக்கக்கூடாது.
உரையாடலில் கண்ணியம் வேண்டும்.
எந்த ஒரு கருத்தைக் கூறுவதானாலும் அதற்குத் தகுந்த ஆதரங்களை வழங்க வேண்டும்.
வெறுமனே சட்டம்பிள்ளைபோல் பேசுதல் கூடாது.
அது சகோதரத்துவத்தை ஒருக்காலும் வளர்க்காது.
எது அறிவுடைமை எது அறிவில்லாமை என்பதை அறிவதே உண்மையான அறிவுடைமை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு கருத்தும் முன்வைக்கப்படும்போது அதை ஆழ்ந்து நோக்க வேண்டும்.
மனதில் ஏற்கனவே கட்டிவைத்திருக்கும் கோட்டையிலிருந்து சட்டங்களை எடுத்து அள்ளி இறைக்கக் கூடாது.
சிந்தனையிலும் செயலிலும் அறிவுடைமை, அன்புடைமை, கருணையுடைமை, சகிப்புடைமை என்று இருப்பவனே நல்ல முஸ்லிம்.
நல்ல முஸ்லிம்களாய் தானும் முன்னேறி தன்னைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றி அடிப்படை வாதத்தைத் தகர்த்து அமைதி வழியில் வாழ்வோமாக.

No comments:
Post a Comment