குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பாக "சுயமரியாதைக்கு சொந்தக்காரகள் சஹாபாக்கள் " என்ற தலைப்பில் மௌலவி அப்துல் காதிர் மன்பஈ அவர்கள் உரை ஆற்றினார்கள்.
இஸ்லாமிய வழிகாட்டி மையம் என்ற நல்ல தலைப்புக்குப் பாராட்டுகள்.
இஸ்லாமிய இளைய தலைமுறையினருக்கான முற்றேற்ற வழிகளைப் பற்றியெல்லாம் சொற்பொழிவுகள் நிகழுமா?
இஸ்லாமியப் பெண்களின் உலகக் கல்வி
இஸ்லாமிய இளையவருக்கான வணிக வழிகள்
வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களுக்கான பரிந்துரைகள்
இஸ்லாமிய சமூகத்தைக் கல்வியாலும் செல்வத்தாலும் உயர்த்தி தாழ்ந்த நிலையில் இருக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்களை மேலே கொண்டுவரும் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகள் பற்றியெல்லாம் சொற்பொழிவுகள் நிகழுமா?
கல்வி விழிப்புணர்வு கூட்டம் சமீபத்தில் கூட நடைபெற்றது. மேலும் பயானோடு பொறியாளர்களுக்கான வகுப்புகள், spoken english, உள்ளிட்ட சமூக சேவைகளும் நடைபெறுகிறது.
இவ்வகைச் சேவை பெரிய அளவில் எடுத்துச் செல்லப்பட்டால், இஸ்லாமிய மக்கள் கல்வியிலும் செல்வத்திலும் உயர் நிலையை அடைவார்கள்.
உயர் நிலையை அடைந்தவர்கள் இஸ்லாத்தை உயர்த்திப் பிடிப்பார்கள்.
ஒவ்வொரு இளைஞனின் உள்ளத்திலும் இஸ்லாமிய சமுதாயம் அவர்களின் முன்னேற்றத்திற்காக எத்தனை பாடுபட்டது என்ற நன்றியை விதையுங்கள்.
பிறகு பாருங்கள் உலகில் முதன்மை இடத்தில் இஸ்லாத்தின் வழியில் முஸ்லிம்கள் இருப்போம்.
ஒரு தகவல் சொல்ல ஆசைப்படுகிறேன் - முஸ்லீம்கள் இப்புவியில் நன்கு படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு செல்ல வேண்டும், பொரு்ள் ஈட்ட வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதுவே ஒரு முஸ்லீமின் இலட்சியமாக போய் விட கூடாது.
இலட்சியம் என்பது ஒன்றே ஒன்றாக எவருக்கும் இருக்க முடியாது.
ஒழுக்கமான வாழ்க்கை உயர்வான கல்வி செல்வ நிலை.
இப்படியான ஓர் சமுதாயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஆகவே ஒழுக்கமும் லட்சியமாக இருக்கட்டும்
உயர்வான கல்வி செல்வமும் லட்சியமாக இருக்கட்டும்
தளராத மனவீரமும் லட்சியமாக இருக்கட்டும்.
தீவிரவாதிகள் அடிப்படைவாதிகள் என்ற அவப்பெயர்களை மாற்றிக்களைவோம் இன்சால்லா!
மறுமையில் செழிப்பாய் இருக்க இவ்வுலகை பயன்படுத்த வேண்டும். சில போது இஸ்லாத்தின் அடிப்படைகளில் சிறு ஊறு விளைவித்தால் தான் இங்கு செழிப்பாய் இருக்க முடியும் எனில் அது தேவையில்லை.
எந்த ஒரு மதத்துக்கும் இல்லாத சிறப்புப் பண்பு இஸ்லாத்திற்கு மட்டுமே இருக்கிறது.
பன்றி இறைச்சி உண்ணவே கூடாது என்று இஸ்லாம் சொல்லும்.
ஆனால் உயிர்வாழ வேறு வழியே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால் பன்றி இறைச்சியையும் உண். ஆனால் அதையே தொடர்ந்துவிடாதே என்று கூறும் ஒப்பற்ற மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் மட்டும்தான்.
வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறில்லை. முகம்மது இறைத்தூதர்
இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.
அப்படியான அடிப்படையிலிருந்து ஒருவன் விலகி இருந்துவிட்டுப் பின் அந்த அடிப்படையைப் பற்றிக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டால் இறைவன் மன்னிப்பவனாக இருக்கிறான் என்று இறைவனே கூறுகிறான்.
ஆகவே ஒழுக்கமானவனுக்கு ஓராயிரம் வழிகள் உண்டு இஸ்லாத்தில்.
எல்லோரும் முன்னேறுவோம். நம் மார்க்கத்தையும் நபி பெருமானாரையும் உலக அரங்கில் உயர்த்திப் பிடிப்போம்.
அதைத் தவிர வேறு எதைச் செய்ய முடியும் அந்த வைர மனச் செம்மலுக்கு
இம்மையை துறக்க வேண்டாம், மறுமையை மறக்க வேண்டாம்
உண்மை சகோதரா, வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
No comments:
Post a Comment