Thursday, October 18, 2012

இந்த ஹதீதை வாசித்தால் உங்களுக்குத் தோன்றுவது என்ன?

ஹதீது எண் 349 - சகீகுல் புகாரி

நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள்

பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டஅதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள்.

முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார்.

அதற்கு அவ்வானவர் , 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள்.

அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.

வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார்

அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது பக்கம் சில மனிதர்களும் காணப்பட்டார்கள்

அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்

இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார்.

அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன்.

'இவர் தாம் ஆதம்.

அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள் வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள் இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள் (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள்.

*

பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார்.

முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார்

இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள்.

முதல் வானத்தில் ஆதம் (அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள்.

மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை என்று கூறினார்.

*

'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.

*

பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள்.

இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள்.

*

பின்னர் ஈஸா (அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள்.

இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.

*

பின் இப்ராஹீம் (அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள்.

*

இப்னு அப்பாஸ் (ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*

(தொடர்ந்து) "அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்.

(அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள்.

ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன்

'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள்.

நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான்
.
*

(அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன்.

'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு (ம்) சக்தி பெறாது' என்றார்கள்.

நான் திரும்பிச் சென்றேன்

அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான்.

நான் மூஸா (அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்).

'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள்.

உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள்.

*

நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான்.

நான் மூஸா (அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள்.

இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.

பின்னர் ஜிப்ரீல் (அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என அபூ தர் (ரலி) அறிவித்தார்.

5 comments:

  1. மிஃராஜ்
    நபி(ஸ)அவர்களுக்கு ஏற்ப்பட்ட ஒரு புத்துனர்வு அனுபவமே! மிஃராஜ் என்னும் வின்வெளிப்பயணம் இந்த பயணம் பற்றி திருக்குர் ஆன் விவாரிக்கும்போது நம்பிக்கையாளர்கள் யார் என்பதையும் நிறகரிப்பாளர்கள் யார் என்பதையும் பிரித்து காட்டவே நிழ்த்தியதாக கூறுகிறது.

    பனிரெண்டு ஆண்டுகளாக மக்கா குறைஸியர்களால் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்கள் ஒரு கட்டத்தை தாண்டி மறுககட்டத்தை எட்டியிருந்தனர்ஏனெனில் இஸ்லாம் கொள்கை ரீதியாக மக்காவை சுற்றியுள்ள பகுதியில் கொஞ்சம் வளர்ச்சியடைந்துயிருந்தது மக்கா இணைவைபவர்கள் கூட புதிய கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறினர் இந்த கட்டத்தில் மிஃராஜ் என்னும் பரிச்சை அவசியமாகிவிடுகிறது ஈமானில் உறுதியில்லாதவர்களுக்கு மிஃராஜ் ஒரு சோதனைதான்.

    http://www.kaleelsms.com/2011/10/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. அந்த குர்-ஆன் வசனத்தை இடுங்கல் சகோ கலீல்

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்புடன் புகாரி anbudanbuhari@gmail.com என்னும் பெயரில் மெயில் குழுமத்தில் எழுதி வருவதை அறிவேன். உங்கள் ஆக்கங்கள் எதை நோக்கி பேசுகின்றது என்பதை என்னால் கொஞ்சம் யூகிக்க முடிய வில்லை சில ஆக்கங்கள் ஹதீஸ்களின் நம்பிக்கையை மறு பரிசிலனை செய்ய வேண்டும் என்பது போல் உள்ளது. சில பதிவுகள் திடுக்கிட வைக்கிறது உதரனத்திற்கு கீழே உள்ள உங்கள் பதிவு.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    http://anbudanislam2012.blogspot.ca/2012/10/4.html
    * அன்று புரட்சியில் தோன்றிய அருமையான //மதம் இன்று அடிப்படை வாதத்தில் சிக்கிக்கொண்டது//

    * இஸ்லாத்தின் முக்கிய நோக்கமே அமைதி

    //* இஸ்லாத்திற்கு எதிரானவர்களைக் கொலை செய்யச் சொல்லி தவறாகப் போதித்தார்கள். இப்போது புரிந்துகொண்டு விலகிவிட்டோம்.//

    * இஸ்லாமிய சமுதாயத்தை //மத அடிப்படை வாதிகளிடமிருந்து //விடுவிக்க நினைக்கின்ற முற்போக்காளர்கள் வரவேண்டும்

    http://anbudanislam2012.blogspot.ca/2012/10/024.html

    //நான் ஹதீதுகளை மறுக்கவில்லை. இஸ்லாமிய வரலாறு என்பது ஹதீதுகள் அல்ல.//

    //குர்-ஆன் வசனம் எது ஹதீது எது என்பதை நீ உணரவேண்டும்.//

    //குர்-ஆனை அனுகுவதிலும் ஹதீதை அனுகுவதிலும் உனக்குக் கவனம் தேவை. குர்-ஆன் வசனத்தை ஓதி நீ அழுத்தம் திருத்தமாக கருத்தாடலாம். ஹதீதுகளைக் காட்டி அப்படிச் செய்ய முடியாது.//

    ஹதீதுகளுள் ஏற்பவற்றை ஏற்று ஐயம் கொள்வவற்றை ஒதுக்கி அறிவினைத் தேடும் அறிவுடையோனாய் நல்ல இஸ்லாமியனாய் வாழவேண்டும்.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    //நான் ஹதீதுகளை மறுக்கவில்லை. இஸ்லாமிய வரலாறு என்பது ஹதீதுகள் அல்ல.//
    //குர்-ஆனை அனுகுவதிலும் ஹதீதை அனுகுவதிலும் உனக்குக் கவனம் தேவை. குர்-ஆன் வசனத்தை ஓதி நீ அழுத்தம் திருத்தமாக கருத்தாடலாம். ஹதீதுகளைக் காட்டி அப்படிச் செய்ய முடியாது.//
    //குர்-ஆன் வசனம் எது ஹதீது எது என்பதை நீ உணரவேண்டும்.//

    //இஸ்லாமிய வரலாறு என்பது ஹதீதுகள் அல்ல// என்று ஆனபின்பு //ஹதீதை அனுகுவதிலும் உனக்குக் கவனம் தேவை// இதில் ஏன் நான் அக்கரை காட்ட வேண்டு.

    * இஸ்லாத்தின் முக்கிய நோக்கமே அமைதி

    //* இஸ்லாத்திற்கு எதிரானவர்களைக் கொலை செய்யச் சொல்லி தவறாகப் போதித்தார்கள். இப்போது புரிந்துகொண்டு விலகிவிட்டோம்.//

    மூன்று நான்கு பக்கங்ளுக்கு விளக்கம் வேண்டாம். குர் ஆன் கூறும் விளக்கங்களுக்கு கூடுதல் விளக்கமாக ஸஹீஹான ஹதிஸ்களை எடுக்கலாம கூடாத?

    ReplyDelete
    Replies

    1. >>>>>>>>>
      உங்கள் ஆக்கங்கள் எதை நோக்கி பேசுகின்றது என்பதை என்னால் கொஞ்சம் யூகிக்க முடிய வில்லை
      >>>>>>>

      உண்மைகளை நோக்கி

      >>>>>>>>>>>>>>
      http://anbudanislam2012.blogspot.ca/2012/10/4.html
      * அன்று புரட்சியில் தோன்றிய அருமையான //மதம் இன்று அடிப்படை வாதத்தில் சிக்கிக்கொண்டது//

      //* இஸ்லாத்திற்கு எதிரானவர்களைக் கொலை செய்யச் சொல்லி தவறாகப் போதித்தார்கள். இப்போது புரிந்துகொண்டு விலகிவிட்டோம்.//

      * இஸ்லாமிய சமுதாயத்தை //மத அடிப்படை வாதிகளிடமிருந்து //விடுவிக்க நினைக்கின்ற முற்போக்காளர்கள் வரவேண்டும்
      >>>>>>>>>>>>>

      இதைச் சொன்னது நானல்ல. பிபிசியின் ரிப்போர்ட். நான் அனுப்பிய சுட்டியைச் சொடிக்கி இருந்தீர்களானால் விளங்கி இருப்பீர்கள். சொடுக்குங்கள்!

      >>>>>>>>>>>>>
      மூன்று நான்கு பக்கங்ளுக்கு விளக்கம் வேண்டாம். குர் ஆன் கூறும் விளக்கங்களுக்கு கூடுதல் விளக்கமாக ஸஹீஹான ஹதிஸ்களை எடுக்கலாம கூடாத?
      >>>>>>>>

      எடுக்கலாம் வலுவானவற்றை.

      அன்புடன் புகாரி

      Delete
  3. >>>>>>>>>

    நன்றி சகோ

    ReplyDelete