பெண்களின் பலவீனம் என்று கூறப்படுவது
பெண்களின் பலவீனம் அல்ல
அது ஆண்களின் பலவீனம்
ஒரு பெண்ணுக்கு ஆபத்து ஆண்களின் வழியாக மட்டுமே வருகிறது.
நடு இரவில் ஒரு பெண் தனியாகச் செல்ல முடியாது.
ஏன் தெரியுமா?
சிங்கமோ புலியோ கரடியோ ஓநாயோ அவளை வேட்டியாடி விடும் என்பதற்காக அல்ல.
வெறிபிடித்த ஆண்கள் வேட்டையாடிவிடுவார்கள் என்பதால்தான்.
வெறிபிடித்த ஆண் என்பவன் மிகவும் பலவீனமானவன்.
பலவீனம் இல்லாமல் இருப்பது என்பது மனவீரத்தோடு இருப்பதுதான்.
மனவீரம் இருந்தால் ஓர் ஆண் தனியே செல்லும் பெண்ணை வன்புணர்ச்சி செய்யமாட்டான்.
ஆகவே
பலவீனமாக இருப்பவர்கள்
பெண்கள் அல்ல
ஆண்கள்தாம்
ஆண்கள் காட்டு விலங்குகளைப் போல மனக் கட்டுப்பாடுகள் இல்லாதவர்களாக இருப்பதால்தான் பெண்களுக்குப் பாதுகாப்புத் தேவைப்படுகிறது.
ஆணுக்கு விரோதி பெண் அல்ல.
ஆனால் ஒரு பெண்ணுக்கு விரோதி ஆண்தான்.
அப்படி பெண் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு பெண்ணுடன் சகோதரன், தகப்பன், மகன் என்று எவராவது உடன் செல்கின்றனர்.
அவர்கள் உடன் செல்வதற்குக் காரணம் என்ன?
அது ஆண்களுக்கு வெட்கக்கேடு அல்லவா?
வெறிபிடித்த ஆண் ஒரு பெண்ணைத் தீண்டிவிடக் கூடாது என்பதற்காகவே இன்னொரு ஆண் துணைக்குப் போனான்.
அன்றைய நாளின் இந்த நிலையை ஒழுங்குபடுத்தவே குர்-ஆன் வசனங்கள் வந்தன. மற்றபடி பெண்களின் உரிமையைப் பறிக்கவோ அவர்கள் பலவீனமானவர்கள் என்று அறிவிக்கவோ அல்ல.
இன்றெல்லாம் முன்னேறிய நாடுகளில் ஆண்களின் பலவீனங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் சுதந்திரமாக வெளியில் செல்கிறார்கள்.
ஆகவே ஆண்களுக்கே இந்த விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் தேவை பெண்களுக்கு அல்ல.
No comments:
Post a Comment