நான் சவுதி அரேபியாவில் 18 வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன்.
எனக்கு வாழ்வளித்த நாடு என்ற நன்றியுணர்வு எனக்கு மிகவும் அதிகம். அங்குள்ள சில நல்ல விசயங்கள் எனக்குப் பிடிக்கும்.
ஆனால்....
வேலைக்கு ஆட்களைக் கொண்டுவருவதிலும், அவர்களுக்கான உரிய வேலையைக் கொடுப்பதிலும், விரும்பிய வேலையில் மாறுவதற்கான உரிமையைக் கொடுப்பதிலும், சம்பளம் தராமல் கொடுமைப் படுத்துவதிலும் சவுதி அரேபியாவில் நான் இஸ்லாமியச் சட்டங்களைக் கண்டதில்லை
பணி நிமித்தமாக வந்தர்களை ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குக்கூட பயணப்படவிடாமல் தடுப்பதிலும். எந்த ஒரு சாலை விபத்திலும் வெளிநாட்டவர்களையே பலிகடாக்களாய் ஆக்குவதும் அங்கே நான் கண்டவை.
பணியாளர்களுடன் பழகும் விதத்தில் ஒரு துளியும் அன்பும் பண்பும் இருக்காது.
பணியாளர்களைப் பணியாளர்களாகப் பார்ப்பதில்லை பெரும்பாலும் அடிமைகளாகத்தான் பார்ப்பதைக் கண்டிருக்கிறேன்.
இது எதையுமே நபிகள் நாயகம் விரும்பியதில்லை. அவரின் சொல் அவர் பிறந்த மண்ணில் இன்னும் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை.
சில நல்லவர்களைக் காணலாம் ஆனால் அதன் விழுக்காடு மிகவும் குறைவாகவே இருந்தது. இப்போது கொஞ்சம் மாறி இருக்கலாம். மாறி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இந்தியாவில் மக்களை 10000 வருடங்களுக்கு மேலாக பக்குவப்படுத்த நடத்தப்பட்ட முயற்சிகளுக்கு எவ்வளவு பலன் என்பதை யார்முடிவு செய்வது.பிரம்மச்சரியம் என்றும் ஏக பத்தினிவிரம்,பிறன்மனை நோக்கா பேராண்மை என்றும் அற்பதமாக மனித நேயத்தை மானுடத்தை,சகோதரத்துவத்தை எடுத்துச் சொல்லியும் காட்டுமிராண்டிகளுக்கு பஞசம்யில்லையே.திருக்குறள,தொல்காப்பியம் (கொளதம புத்தர் )போன்றவை காலத்தால் குரானுக்கு முந்தியவை.இருப்பினும் 5வயது சிறுமியைக்கூட காம வல்லுறவு கொள்ளும் செய்திகளை இந்திய மண்ணில் நடப்பதாக கேட்கும்போது மனம் என்னவோ வேதனைப்படுகிறது.
ReplyDeleteமக்களுக்கு சிறு வயது முதல் அமைதியாக அமர்ந்து வழிபாடு -தியானம் - செய்யக் கற்றுக் கொடுக்காததுதான் பெரிய தவறு. அன்று மனுதர்மம் மக்களைக் கெடுத்தது.இன்று சமயசார்பற்றத்தன்மை என்று இந்துக்களுக்கு பண்பாட்டுணர்வை ஏற்படுத்தாமல் காட்டுமாடுகளாய் வாழவிட்டுவிட்டோம். பயிற்சியற்ற காட்டுமாடு என்ன செய்யும் ????????? நாட்டுநிலைமை யைச் சொல்ல வேண்டுமோ ?இறைவா இந்தயாவைக்காப்பாற்று? எனது இளைஞர்கள் பிரம்மச்சரயித்தில்,எகபத்தினிவிரத்தில் உறுதி கொள்வது என்று !