Monday, October 8, 2012

முஸ்லிம்பெண் வேலைக்குச் செல்லலாமா?

பெண் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால், வேலைக்குச் செல்லும் சூழல் இருந்தால் நிச்சயமாகச் செல்லலாம்.
 
கணவனும் மனைவியும் சேர்ந்து அவர்களின் குடும்பச் சூழலுக்கு ஏற்ப எடுக்கும் முடிவு அது.

பெண்ணை வேலைக்குப் போ என்று நிர்பந்திக்கக்கூடாது.

ஒரு பெண்ணுக்கு பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு நிச்சயமாக முக்கியமானது. அது அவளின் இயல்பிலேயே இருக்கும்.

பிள்ளைகள் வளரும்வரை அந்தப் பொறுப்பில் இருந்துவிட்டு பின் வேலைக்குப் போகும் பெண்களை வளர்ந்த நாடுகளில் காணலாம்.

பெண்களின் பேறுகாலத்தில் பெண்களுக்கு வேலை செய்யாமலேயே பண உதவி செய்யும் சட்டம் பல நாடுகளில் உண்டு.

பெண்ணின் உயர்வை எந்த வகையிலும் யாரும் தடுக்கக் கூடாது.

அதே சமயம் குடும்பப் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் பெண் கண்டிக்கப்படவேண்டியவள்தான்.

பொறுப்பற்ற ஆண்களும் பெண்களைப் போலவே கண்டிக்கப்படவேண்டியவர்கள்.

பெண்கள் நிச்சயமாக அடிமைகள் அல்ல!

அவர்களுக்கும் உணர்வுகள் பெருமைகள் கௌரவங்கள் அறிவு சுதந்திரம் எல்லாம் உண்டு.

அவர்கள் ஆடுமாடுகளோ ஜடப் பொருட்களோ போகப்பொருட்களோ அல்ல.

No comments:

Post a Comment