Saturday, October 20, 2012

ஹதீதுகளைப் பின்பற்ற வேண்டுமா?

ஒரு முஸ்லிம் குர்-ஆனையும் ஹதீதுகளையும் பின்பற்ற வேண்டும்.

இஸ்லாத்திற்கு அது தோன்றிய காலம் தொட்டே எதிரிகள் கணக்கிலடங்காதவர்கள்.

முசைலமா என்பவன் நபி பெருமானாரின் காலத்திலேயே தானும் ஓர் இறைத்தூதர் என்று அறிவித்து குர்-ஆன் வசனங்களைப் போலவே வசனங்களை எழுதி பரப்பிக்கொண்டிருந்தான்.

இதனால் குர்-ஆன் நபி பெருமானாரின் காலத்திலேயே செம்மையாகப் பாதுகாக்கப்பட்டது

அப்படியான பாதுகாப்பு ஏதும் ஹதீதுகளுக்குத் தரப்படவில்லை.

குர்-ஆன் நபி பெருமானார் இறந்த இரண்டாண்டுகளுக்குள் முழுவதும் தொகுக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்குள் நூலாகவும் ஆகிவிட்டது.

குர்-ஆனில் ஓர் எழுத்தையும் மாற்ற வழியற்றுப் போனவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்ட ஹதீதுகளைத்தான் எடுத்துக்கொண்டார்கள்.

ஹதீதுகள் நபி பெருமானார் இறந்து இருநூறு ஆண்டுகள் கழித்துத்தான் தொகுக்கப்பட்டது.

அப்படி தொகுத்தவைகளில் 0.01 சதவிகிதமே நம்பகத்தன்மையுடையதாக இருந்தன.

நாம் ஹதீதுகளைக் குறைசொல்லத் தேவையில்லை, ஆனால் பலகீனமான ஹதீதை அடையாளம் காணவேண்டும்.

ஹதீதுகள் என்று எதிரிகள் பலர் தங்கள் சொந்தக் கருத்துக்களை இணைத்துள்ள வரலாற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹதீதுகளின் சுருக்கமான வரலாற்றை இங்கே வாசிக்கலாம்:

http://anbudanislam2012.blogspot.ca/2012/10/blog-post_3595.html

அறிவுடைய ஒவ்வொருவருக்கும்
மேலான அறிவுடைய ஒருவன்
இருக்கிறான் (குர்-ஆன் 12:76)


1 comment:

  1. இதனால் குர்-ஆன் நபி பெருமானாரின் காலத்திலேயே செம்மையாகப் பாதுகாக்கப்பட்டது
    அப்படியானால்
    குர்-ஆன் நபி பெருமானார் இறந்த இரண்டாண்டுகளுக்குள் முழுவதும் தொகுக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்குள் நூலாகவும் ஆகிவிட்டது.
    ஒருமுறை தொகுக்கபபட்ட குரானின் பிரதியை எரித்து விட்டார் ஒரு கலிபா.பின்னர் 6 பரதிகள் தயார்செய்து ..... குரான் ஒன்றும் இறைவனால் டெலக்ஸ் மூலம் அரேபியாவிற்கு அனுப்பப்படவில்லை.அப்படியே நகல் எடுக்கவில்லை. குரான் அரபிய கலாச்சார சமூக வாழ்வை பிரதிபலிக்கின்றது. யுத்தத்தில்கைபற்றப்பட்ட பெண்களை அடிமைகளாக வைப்பது அக்காலத்து அரேபிய பண்பாடு.அப்பண்பாடு-கரிமத்- குரானுக்குள் என் வந்தது ? குரானுக்கு முந்தைய திருக்குறளில் பிறர்மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்ற கருத்து உள்ளது.அரேபின் போல் வாழாவிட்டால் நரகம் அப்படியா ?

    ReplyDelete