Friday, October 19, 2012

ஐ.ஏ.எஸ் பதவிகளுக்கு முஸ்லிம் இளைஞர்கள்

கீழே உள்ள மடல் ஏற்றுமடல் வழியாக எனக்கு இன்று வந்தது.

இஸ்லாம் வாழவேண்டுமென்றால் இஸ்லாமியர்கள் நன்றாக வாழவேண்டும்.

இஸ்லாமியர்கள் நன்றாக வாழவேண்டும் என்றால் அவர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும்.

அதற்காக யார் எந்த ஒரு சிறு உதவியைச் செய்தாலும் அவர்கள்தாம் சிறந்த ஈமான் உடையோர்.

அப்படி உதவிசெய்பவர்களுக்கு நன்றி பாராட்டி அவர்களுக்கு மடல் அனுப்புமாறு பணிந்த சகோதரர் முகம்மது அலி அவர்களின் பண்பைப் பாராட்டி அவர்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரியையும் இந்த அஞ்சல் அச்சில் CC இணைக்கிறேன்

இந்தக் குழுவிற்கும் இப்படியாய் இன்னும் நிறைந்து வரவிருக்கும் அனைத்துக் குழுவிற்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும்.

இறையருள் அளவற்று நிறையும் இன்சால்லா!

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர, சகோதரிகளே,

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்/டெபுடி கலெக்டர் போன்ற பதவிகளுக்கு முஸ்லிம் இளைஞர்கள் மிக குறைவாகவே இருக்கின்றனர் என்று ஏற்கனவே உங்களுக்கு என் கட்டுரை மூலம் தெரியப் படுத்தி உள்ளேன். அதற்கு காரணம் நம்மிடையே இளைஞர்களை தயார் செய்யும் சரியான, முறையான பயிற்சி மையம் இல்லாதது தானே ஒழிய திறமையுள்ள இளைஞர்கள் ஏராளம், ஏராளம்.

சென்னை புதுக்கல்லூரியில் உள்ள மியாசி என்ற தெiன்னக முஸ்லிம் கல்வி சங்கம் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் சரியாக இருக்கும் என்று செயர்க் குழு உறுப்பினர் என்ற முறையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி எல்லாம் வல்ல அருளால் அதற்கான கமிட்டி 13.09.2012 அன்று அமைக்கப் பட்டது. அதன் தலைவராக சதக் கல்வி நிறுவனத் தலைவர் மதிப்பு மிகு அல்ஹாஜ் ஹாமீத் அப்துல் காதர் அவர்கள் நியமிக்கப் பட்டார்கள். அதன் குழுவின் உறுப்பினராக நான் உள்ளேன்.

அந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று(2.10.2012) நடந்தது. அப்போது மியாசி குழுமத்தின் தலைவர் மற்றும் செயலாளரும் மற்றைய உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் மியாசியின் பயிற்சி மையம் முஸ்லிம் மாணவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து இலவசமாக நடத்தப் படும் என்று முடிவு எடுக்கப் பட்டது.

அடுத்த வருடம்(மே 2012) நடக்கும் பிரிலிமினரி பரிட்சைக்கு மாணவர்களை தயார் செய்து விடுவதென்றும் தீர்மானிக்கப் பட்டது. அதற்கு உங்களுடைய துவாவும், இலவசமாக நடத்துவதிற்கு உங்கள் ஆதரவினை மியாசி தலைவர் மதிப்பு மிகு யு.கலீலுல்லாஹ் அவர்களுக்கும், செயலாளர் ஏ.அஷ்ரப் அவர்களுக்கும் கமிட்டி தலைவர் ஹாமீது அவர்களுக்கும் மின் அஞ்சல் மூலம் தெரிவித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அவர்களுடைய மின் அஞ்சலை கீழே வழங்குகிறேன்.

1) JANAB U. MOHAMED KHALILULLAH :
umkhalil1234@yahoo.com

2) JANAB A. MOHAMED ASHRAF : htc@vsnl.com/sbidis@visnl.net

3) JANAB S.M. HAMID ABDUL QUADIR :info@sathaktrust.com

OTHER MEMBERS:

4) JANAB T.P. IMBICHAMMAD :bichatpavalontec.com

5) JANAB A.ABDUL RAHIM :rah_adv@hotmail.com

AP,Mohamed Ali

No comments:

Post a Comment