Monday, October 8, 2012

ஒருக்காலும் ஒரு ஹதீது குர்-ஆன் வசனம் ஆகிவிடாது

அன்புச் சகோதரா, அன்பும் அமைதியும் அருளாகட்டும்

என்னையும் என் உண்மைகளையும் ஒரு கோபத்தோடு மட்டுமே காண்கிறாய். அதிலிருந்து முதலில் வெளியில் வா. நாம் சகோதரர்கள் என்பதை அறி

நான் ஹதீதுகளை மறுக்கவில்லை. இஸ்லாமிய வரலாறு என்பது ஹதீதுகள் அல்ல.

குர்-ஆன் வசனம் எது ஹதீது எது என்பதை நீ உணரவேண்டும்.

ஒருக்காலும் ஒரு ஹதீது குர்-ஆன் வசனம் ஆகிவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குர்-ஆனை அனுகுவதிலும் ஹதீதை அனுகுவதிலும் உனக்குக் கவனம் தேவை. குர்-ஆன் வசனத்தை ஓதி நீ அழுத்தம் திருத்தமாக கருத்தாடலாம். ஹதீதுகளைக் காட்டி அப்படிச் செய்ய முடியாது.

ஹதீதுகளுள் ஏற்பவற்றை ஏற்று ஐயம் கொள்வவற்றை ஒதுக்கி அறிவினைத் தேடும் அறிவுடையோனாய் நல்ல இஸ்லாமியனாய் வாழவேண்டும்.

குர்-ஆனின் அடிப்படையை நீ அதி ஆழமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

அது அசைக்க முடியாத உறுதியோடு உனக்குள் இருந்தால், உன்னிடம் ஓர் அமைதி வரும், அன்பு நிறையும், கருணை பெருகும், சமாதான எண்ணங்களே மேலோங்கும், சகோதரத்துவமே உன் செயல்களில் நிலைக்கும்

மற்ற எண்ணங்களெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து இறைவனின் குணங்களையே பற்றிக்கொண்டு நீயும் வாழ்ந்து உன்னைச் சார்ந்தவர்களையுய் வாழவைப்பாய்

யாரையும் அடக்கியாள எண்ணமாட்டாய். இந்த உலகம் எல்லோருக்குமானது என்பதை உணர்வாய்.

பெண்களை மதிப்பாய்
பிள்ளைகளை மதிப்பாய்
அயலானிடமும் அன்பு பாராட்டுவாய்

அஸ்ஸலாமு அலைக்கும்

No comments:

Post a Comment