Saturday, October 27, 2012

முஸ்லிமும் சாதிப்பெயரும்

அறியாமையுடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற பெயரின் காரணமாக எவரையும் ஓரங்கட்டி வைக்கும் அளவுக்கு எனது இறைவன் என்னை முற்போக்காளன் ஆக்கிவிடவில்லை. 

அன்புடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற சாதிப் பெயர்கள் நாம் வாழும் நிலப்பகுதியின் காரணமாக செய்யும் தொழிலைக் கொண்டு உருவானது.

மரைக்காயர் என்றால் மரக்கலராயர். மரக்கலராயர் என்றால் கப்பல் வணிகம் செய்பவர் என்று பொருள்.

இப்படியே ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதியைப் பிரித்தார்கள் பிராமணர்கள்.

தொழில் அடிப்படையில் உருவான பெயர்களை அதனால் நாம் மறுதளிக்கவேண்டும்.

உங்கள் குடும்பப் பெயர் அல்லது ஊர் பெயர் அல்லது புனைபெயர் என்று எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், தவறில்லை.

மரைக்காயர், ராவுத்தர் எல்லாம் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை.

1 comment:

  1. இஸ்லாத்தில் பிரிவில்லை
    சாஹிப் என்றால் நண்பர்,தோழர்,உரிமையாளர்,'ஐயா' இன்னும் பல பொருள்படும் .ஆனால் அது ஒரு காலமும் ஒரு மார்க்கத்தைச் சார்ந்தவராகாது . சாகிப் ஏன்று முஸ்லிம் மக்களை மட்டும் குறிப்பிட்டு அடைமொழி கொடுத்து அழைப்பது மடமை. மரைக்காயர் என்றால் மரக்கலராயர். மரக்கலராயர் என்றால் கப்பல் வணிகம் செய்பவர் என்று பொருள்.
    ராவுத்தர் குதிரை வணிகம் செய்பவர்.
    இவைகள் தொழில் அடிப்படையில் உருவான பெயர்கள்.

    சாஹிப் என்ற வார்த்தையை சொல்லி இந்தியாவில் ஆங்கிலயேன் ஒரு பிரிவை உண்டாக்கினான் .சாஹிப் ஏன்ற வார்த்தை அரபு மொழீஏலிருந்து வந்தாலும் உருதுவில்தான் அதிகம் பயன்படுத்தினர்.

    உங்கள் குடும்பப் பெயர் அல்லது ஊர் பெயர் அல்லது புனைபெயர் என்று எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், தவறில்லை.

    மரைக்காயர், ராவுத்தர் எல்லாம் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை. இஸ்லாத்தில் பிரிவில்லை

    ReplyDelete